first review completed

மணி திருநாவுக்கரசு

From Tamil Wiki
Revision as of 14:44, 19 April 2022 by Logamadevi (talk | contribs)
மணி திருநாவுக்கரசு

மணி சு. திருநாவுக்கரசு முதலியார் (1888 - 1931). தமிழறிர், கல்வியாளர். மரபிலக்கியம் சார்ந்த ஆய்வுநூல்கலை எழுதியிருக்கிறார். செந்தமிழ்ச் செல்வி இதழின் ஆசிரியர்

பிறப்பு, கல்வி

செங்கல்பட்டு மாவட்டம், மணிமங்கலம் என்னும் ஊரைச் சேர்ந்த சுந்தர முதலியார்- வேதவல்லி இணையருக்கு 1888-ல் பிறந்தார். செங்கல்பட்டு நேட்டிவ் உயர்நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை கற்றார். சென்னை தொண்டைமண்டல உயர்நிலைப் பாடசாலையில் பத்தாம் வகுப்பு வரை பயின்றார். அங்கே தமிழ் கற்பித்த சிவப்பிரகாச ஐயரிடமிருந்து தமிழார்வத்தை அடைந்தார். பூவை கலியாணசுந்தர முதலியார், மறைமலையடிகள் ஆகியோரிடம் கல்விகற்றார்.

தனிவாழ்க்கை

மணி திருநாவுக்கரசு நவநீதம் அம்மையாரை மணந்தார். இளமையிலேயே நவநீதம் மறையவே வாலாஜாப்பேட்டை கனகசுந்தர முதலியார் மகள் சரஸ்வதியை மணந்தார். அவருடைய மகன் சபாரத்தினம் கல்வியாளர். மற்றும் நான்கு மகள்கள் அவருக்கு பிறந்தனர்.

தொடக்கத்தில் ஜி.ஏ.நடேசன் புத்தகக்கடையில் கணக்குப்பிள்ளையாகப் பணியாற்றினார். பின்னர் குமாரசாமி நாயிடு அச்சகத்தில் பிழைதிருத்துநர் பணி செய்தார். வேப்பேரி எஸ்.,பி.ஜி.உயர்தரப்பாடசாலையில் தமிழாசிரியராக பணிகிடைத்தது. பின்னர் முத்தியால்பேட்டை தமிழ்ப்பள்ளி தமிழாசிரியராகப் பணியாற்றினார். இறுதியாக பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக ஆனார்.

இலக்கியவாழ்க்கை

மணி திருநாவுக்கரசு சைவம் சார்ந்தும் தமிழிலக்கியம் சார்ந்தும் சொற்பொழிவுகள் ஆற்றினார். நூல்களை உரையெழுதி பதிப்பித்தார்.நூல்களை தொகுத்தார். கல்லூரியிலும் தன் இல்லத்திலும் தமிழ் வகுப்புகளை நடத்தி மாணவர்களுக்குக் கற்பித்தார்

அமைப்புகள்

சைவத்தையும் தமிழையும் பரப்பும்பொருட்டு மணி திருநாவுக்கரசு உருவாக்கிய அமைப்புகள்

  • பாலசைவர் சபை
  • வாகீசர் சபை
  • மாணிக்கவாசகர் சபை
  • இந்துமத பாடசாலை
  • சித்தாந்த பிரகாச சபை
  • தமிழர் சங்கம்

இதழியல்

மணி திருநாவுக்கரசு திருநெல்வேலி சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்துடன் இணைந்து செந்தமிழ்ச் செல்வி இதழின் உருவாக்கத்திலும் வெளியீட்டிலும் ஈடுபட்டார்

மாசிலாமணி முதலியாருடன் இணைந்து தமிழரசு இதழை நடத்தினார்

நூல்கள்

இயற்றியவை
  • பாவலர் ஆற்றுப் படை
  • அறநெறி விளக்கம்[1]
  • புலவர் கதை
  • திருக்கண்ணப்பன்
  • குமணன்[2]
  • இராசராசன்
  • சண்பகவல்லி
  • செந்தமிழ் வாசகம்
  • பட்டினத்துப் பிள்ளையார் அல்லது தவராசர்[3]
தொகுப்பு
  • பாமணிக் கோவை
  • உரைமணிக் கோவை

உசாத்துணை

இணைப்புகள்


🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.