செய்யூர் சாரநாயகி அம்மாள்
From Tamil Wiki
செய்யூர் சாரநாயகி அம்மாள் ( ) தமிழில் நீள்கதைகளை எழுதிய எழுத்தாளர். தமிழில் துப்பறியும் நாவல் எழுதிய முதல் பெண்மணி என்று கருதப்படுகிறார்
வாழ்க்கை
செய்யூர் சாரநாயகி அம்மாள் பற்றிய செய்திகள் ஏதும் கிடைப்பதில்லை. இவர் தசாவதார நாவல்கள் என்னும் பெயரில் பத்து நாவல்களை தொடராக எழுதினார். இவர் 1918-ல் காரைக்குடியிலிருந்து வெளியான மனோரஞ்சினி என்னும் இதழையும் நடத்தினார்.
நாவல்கள்
- சிவபாக்கியம் அல்லது கனியாக்காதல் கனிந்த வினோதம், 1936
- கோகுல சுந்தரி, 1935
- இராமலிங்கம் (அ) இறைவன் சதியால் விளைந்த விநோதம்
- கமலா - கண்ணன் காதற்கடிதங்கள், சம்பத் குமார் (அ) மாயாண்டித்தேவனின் மாயவலை
- ஞானக்கொழுந்து
- செல்லாம்பாள்
- நித்யகல்யாணி
- சரஸ காந்தம்