under review

ஜீவரஞ்சனி விவேகானந்தராசா

From Tamil Wiki
Revision as of 09:12, 11 June 2024 by Logamadevi (talk | contribs)

ஜீவரஞ்சனி விவேகானந்தராசா (பிறப்பு: அக்டோபர் 9, 1970) ஈழத்துப் பெண் எழுத்தாளர். கவிதைகள், சிறுகதைகள் எழுதி வருகிறார்.

வாழ்க்கைக் குறிப்பு

ஜீவரஞ்சனி விவேகானந்தராசா இலங்கை கிளிநொச்சி வட்டக்கச்சியில் அரசரத்தினம், செல்லம்மா இணையருக்கு அக்டோபர் 9, 1970-ல் பிறந்தார். கிளிநொச்சி வட்டக்கச்சி மத்தியக்கல்லூரியில் ஆரம்பக்கல்வி முதல் உயர் கல்வி வரை கற்றார். யாழ் பல்கலைக்கழகத்தில் தமிழில் சிறப்பு கலைமாணிப் பட்டம் பெற்றார்.

ஆசிரியப்பணி

ஜீவரஞ்சனி விவேகானந்தராசா தேசிய கல்வி நிறுவக கல்விமாணிப்பட்ட கற்கை நெறியின் தமிழ்பாட விரிவுரையாளர்.

இதழியல்

ஜீவரஞ்சனி விவேகானந்தராசா கிளிநொச்சி ராமநாதபுரம் மகாவித்தியாலய உயர்தர மாணவர் மன்றத்தின் வெளியீடான 'இராமநாதம்' என்னும் வருடாந்த சஞ்சிகையின் பொறுப்பாசிரியர். கிளிநொச்சி இராமநாதபுரம் மகாவித்தியாலயத்தின் வைரவிழா மலரின் இதழாசிரியர்.

இலக்கிய வாழ்க்கை

ஜீவரஞ்சனி விவேகானந்தராசா கவிதை, கட்டுரை, சிறுகதை, பாடல்கள் எழுதினார். இவரின் ஆக்கங்கள் 'மித்திரன்', 'உதயன்', 'சூரியகாந்தி' ஆகிய நாளிதழ்களில் வெளிவந்துள்ளன. 'நெருஞ்சிமுள்' என்ற சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டார். வட்டக்கச்சி மத்தியக் கல்லூரியின் வைரவிழா கீதத்தையும், வட்டக்கச்சி ஆரம்ப வித்தியாலயத்தின் பாடசாலைக் கீதத்தையும் இயற்றினார்.

விருதுகள்

  • வடமாகாண கல்வி அமைச்சின் குரு பிரதிபா பிரபா நல்லாசிரியர் விருது - 2018

நூல் பட்டியல்

சிறுகதைத் தொகுப்பு
  • நெருஞ்சிமுள்

உசாத்துணை


✅Finalised Page