under review

சாத்வதம்

From Tamil Wiki
Revision as of 05:53, 4 June 2024 by Madhusaml (talk | contribs) (Finalised)
சாத்வத சம்ஹிதை

சாத்வதம் (சாத்வத சம்ஹிதா) வைணவ ஆகமமான பாஞ்சராத்ரத்தின் ஒரு விளக்கநூல்.

ஆகமம்

ஆகமம் என்பது மதநெறிகளை வகுத்துரைக்கும் நூல். வைணவ ஆகமங்கள் வைகானஸம், பாஞ்சராத்ரம் என இரு வகை. இவற்றில் பாஞ்சராத்ர ஆகமங்களில் சாத்வதம், பௌஷ்கரம், ஜெயாக்யம் ஆகியவை மும்மணிகள் (ரத்னத்ரயம்) எனப்படுகின்றன.

காலம்

சாத்வத சம்ஹிதை பொயு 5 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என ஊகிக்கப்படுகிறது.

உள்ளடக்கம்

வைணவ வழிபாட்டை இந்நூல் முன்வைக்கிறது. ஈஸ்வர சம்ஹிதை இதன் சுருக்கமான எளிய வடிவமாக கருதப்படுகிறது.

உரை

இதற்கு அளசிங்க பட்டர் பொயு 19 ஆம் நூற்றாண்டில் உரை எழுதியிருக்கிறார்

உசாத்துணை



✅Finalised Page