சிதம்பர ஞானதேசிகர்

From Tamil Wiki
Revision as of 17:50, 9 April 2022 by Logamadevi (talk | contribs)

சிதம்பர ஞானதேசிகர் (பொ.யு. 19-ஆம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர். துறவி. தமிழ் ஆன்மீகக்கீர்த்தனைகள் பல பாடியவர்.

வாழ்க்கைக் குறிப்பு

பாண்டிய நாடான தேவிக்கோட்டையில் பிறந்தார். இளமையில் துறவு பூண்டார். கோவிலூர் மடத்தின் தலைவராக இருந்தார். மெய்ஞான போதகராக ஆன்மீகப் பணிகள் செய்தார். கொற்றவாளீசர் கோயிலில் திருப்பணி செய்தார்.

மாணவர்கள்
  • பொன்னம்பல அடிகள்
  • ஞானசாமி தேசிகர்
  • காடகநல்லூர் சுந்தர அடிகள்

இலக்கிய வாழ்க்கை

வடமொழியிலிருந்த கோவிலூர்ப் புராணத்தை தமிழில் மொழிபெயர்க்க மீனாட்சி சுந்தரம் பிள்ளையை வேண்டி அரங்கேற்றம் செய்தார். இலட்சணா விருத்தி என்ற வேதாந்த நூலைப் பாடினார். கண்டனூர் முத்துராம அய்யர் ஞானதேசிகருக்கு புகழ் மாலை பாடினார்.

மறைவு

தாது ஆண்டு ஆடி மாதம் நான்காம் நாள் காலமானார். பொன்னம்பல அடிகள், ஞானசாமி தேசிகர், காடக நல்லூர் சுந்தர அடிகள் சிதம்பர ஞானதேசிகரை சமாதி செய்தனர்.

நூல் பட்டியல்

  • இலட்சணா விருத்தி

உசாத்துணை

Template:First Review Completed