under review

துய்ப்ளேக்ஸ் (இதழ்)

From Tamil Wiki
Revision as of 07:45, 17 May 2024 by Logamadevi (talk | contribs)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

துய்ப்ளேக்ஸ் (1930), புதுச்சேரியிலிருந்து வெளிவந்த தமிழ் மாத இதழ். தமிழர் நலன் சார்ந்த பல செய்திகளை இவ்விதழ் வெளியிட்டது.

பிரசுரம், வெளியீடு

தமிழர் நலன் சார்ந்து புதுச்சேரியில் இருந்து வெளிவந்த இதழ் துய்ப்ளேக்ஸ். இதன் ஆசிரியர், வெளியீட்டாளர் பற்றிய விவரங்களை அறிந்துகொள்ள இயலவில்லை. இது 1930-லிருந்து வெளிவந்தது என்றும், 1933 முதல் வெளிவந்ததது என்றும் இரு வேறு குறிப்புகள் உள்ளன. புதுச்சேரி காசுக்கடை அருகில் உள்ள துய்ப்ளேக்ஸ் காரியாலத்தில் இருந்து இவ்விதழ் அச்சிடப்பட்டது. தனிப்பிரதி இதழின் விலை 1 அணா. ஆண்டுச் சந்தா: 1 ரூபாய். ஆறு மாதச் சந்தா: 12 அணா.

உள்ளடக்கம்

இந்நூல் பற்றி சுகாபிருவித்தினி இதழில், “துய்ப்ளேக்ஸ், இப்பெயர் பூண்ட தமிழ் வாரப் பத்திரிகை 4 மாத காலமாகப் பிரெஞ்சிந்தியாப் புதுவையில் உலவி வருகின்றது. பிரிட்டிஷிந்தியா மக்களுக்கும் இப்பத்திரிகை யத்தியாவசியமென்று சொல்லலாம் இத்தகைய பத்திரிகைகளைச் சோரவிடாது சகோதரர்கள் ஆதரிக்க வேண்டியது கடமையாகும். இப்பத்திரிகையின் சந்தா ரூ. 1.00. 3/6 மாதத்திற்கு 12 - 0. தனிப் பத்திரிகை அணா 1. முன்பணம் கட்டிப் பெற்றுக் கொள்ள வேண்டும்.” என்ற குறிப்பு இடம்பெற்றது.

இதழ் நிறுத்தம்

துய்ப்ளேக்ஸ் இதழ் எவ்வளவு ஆண்டுகாலம் வெளியானது என்பது போன்ற விவரங்களை அறிய இயலவில்லை.

மதிப்பீடு

தமிழர் நலன் சார்ந்து வெளியான புதுச்சேரி இதழ்களுள் ஒன்றாக துய்ப்ளேக்ஸ் இதழ் அறியப்படுகிறது.

உசாத்துணை

  • தமிழில் இதழியல், இ.சுந்தரமூர்த்தி, மா.ரா. அரசு, உலகத்தமிழாராய்ச்சி நிறுவன வெளியீடு, முதல் பதிப்பு: 2011


✅Finalised Page