மதனகல்யாணி சண்முகானந்தன்

From Tamil Wiki
Revision as of 00:01, 2 April 2022 by Tamizhkalai (talk | contribs)

மதனகல்யாணி சண்முகானந்தன் (5-10-1938) . பிரெஞ்சுமொழியைப் பயிற்றுவிக்கும் பயிற்சிக்குரிய பல சான்றிதழ்கள் பெற்றவர். பிரெஞ்சுக்காரர்கள் பலருக்குத் தமிழ் மொழியையும் தமிழர்கள் பலருக்குப் பிரெஞ்சு மொழியையும் பயிற்றுவித்தவர். பிரெஞ்சு நாட்டுத் தமிழறிஞர் செவியாக் உள்ளிட்டவர்களுக்குப் பேச்சுத் தமிழ் பயிற்றுவித்த பெருமைக்குரியவர். பிரெஞ்சிலிருந்து தமிழுக்கும் தமிழிலிருந்து பிரெஞ்சுக்கும் என இருபதிற்கும் மேற்பட்ட நூல்களை மொழிபெயர்த்தவர். வருகை தரு ஆசிரியராகப் பல நிறுவனங்களில் பணிபுரிந்தவர். லிசே பிரான்சே பள்ளியில் 41 ஆண்டுகள் தமிழ் பயிற்றுவித்தவர். பிரெஞ்சு நாட்டின் மிக உயரிய விருதான் செவாலியே விருதைப் பெற்றவர்

பிறப்பு, கல்வி

மதனகல்யாணி சண்முகானந்தன் அக்டோபர் 5, 1938 அன்று புதுச்சேரியில் காவல்துறை ஆணையர் செ. கிருட்டினசாமி, கி. இராசாம்பாள் தம்பதிகளுக்கு மகளாகப்பிறந்தவர் .

தனி வாழ்க்கை

அவர்தம் கணவர் திரு.த. சண்முகானந்தன் (செய்தி மற்றும் விளம்பரத்துறை அதிகாரி . இவர்களுக்கு மூன்று கழந்தைகள்.