being created

ப. சுப்பராயன்

From Tamil Wiki
Revision as of 23:58, 1 April 2024 by Tamizhkalai (talk | contribs)

ப.சுப்பராயன் (பரமசிவ சுப்பராயன்) (P. Subbarayan)(செப்டம்பர் 11, 1889 – அக்டோபர் 6, 1962) சென்னை மாகாணத்தின் முன்னாள் முதல்வர். சென்னை மாகாணத்தின் உள்ளாட்சித் துறை அமைச்சர், கல்வி மற்றும் சட்ட அமைச்சர், உள்துறை அமைச்சர், சட்டமன்ற மேலவை உறுப்பினர், இந்தோனேசியாவிற்கான இந்தியத் தூதுவர், இந்திய நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர், மாநிலங்கவை உறுப்பினர், மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர், மகாராஷ்டிர மாநில ஆளுநர் போன்ற பல பதவிகளை வகித்தார். திருச்செங்கோட்டுக்கு அருகிலுள்ள குமாரமங்கலம் கிராமத்தின் ஜமீந்தார்.

பிறப்பு, கல்வி

சுப்பராயன் 1889 ஆம் ஆண்டு நாமக்கல் மாடட்டம்(அப்போதைய சேலம் மாவட்டம்) திருச்செங்கோட்டுக்கு அருகிலுள்ள போக்கம்பாளையத்தில் குமரமங்கலம் கிராமத்தின் ஜமீன்தார் பரமசிவ கவுண்டர், பாவாயி இணையருக்குப் பிறந்தார். சென்னை மாநிலக் கல்லூரியில் இளங்கலைப் பட்டமும், ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமும், அயர்லாந்து டப்ளின் பல்கலைக்கழகத்தில் சட்டப்பயிற்சி பட்டமும் (LLD) பெற்றார். 1918 முதல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றினார்.

தனி வாழ்க்கை

சுப்பராயன் மாநிலக் கல்லூரியில் தன்னுடன் படித்த ராதாபாய் குல்முத்-ஐ பிரம்ம சமாஜ முறைப்படி குடும்பத்தினரின் சம்மதமின்றித் த் திருமணம் செய்து கொண்டார். ராதாபாய் பின்னர் நாடளுமன்ற உறுப்பினராகவும் பெண்கள் நலப் போராளியாகவும் இருந்தார். இருந்தார். பிள்ளைகள்:பிரபாகர் குமாரமங்கலம்( இந்தியத் தரைப்படையின் முதன்மைத் தளபதி, கோபால் குமாரமங்கலம், மோகன் குமாரமங்கலம்(இந்திரா காந்தி அமைச்சரவையில் எஃகு மற்றும்சுரங்கத்துறை மத்திய அமைச்சர்) , பார்வதி கிருஷ்ணன் (நான்கு முறை நாடாளுமன்ற உறுப்பினர்), சுப்பராயனின் பேரன் ரங்கராஜன் குமாரமங்கலம்








🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.