standardised

அமிர்தம் சுந்தரநாதப்பிள்ளை

From Tamil Wiki

அமிர்தம் சுந்தரநாதப்பிள்ளை தமிழ்ப்புலவர். சிற்றிலக்கியப்புலவர். வயலூர் அந்தாதி முக்கியமான படைப்பு.

வாழ்க்கைக் குறிப்பு

திருச்சியில் புலவரான அமிர்தம்பிள்ளைக்கு மகனாகப் பிறந்தார். தந்தையிடம் இலக்கண இலக்கியங்கள் கற்றார். திருச்சி எஸ்.பி.சி. கல்லூரியில் தமிழாசிரியராகப் பணியாற்றினார்.

இலக்கிய வாழ்க்கை

வயலூர் முருகக் கடவுள் மீது நூறு வெண்பாக்களால் ஆன வயலூர் அந்தாதி பாடினார். வயலூர்ப் புராணம், திரிசிராமலைக் கோவை, பெத்தாச்சி செட்டியார் மீது புலவராற்றுப்படை, திருவாடுதுறை அம்பலவாண தேசிகர் மீது பொன் விடுதூது ஆகிய சிற்றிலக்கியப் பாடல்களை இயற்றியுள்ளார். இவரின் நூல்கள் வெளியாக ஆதரவு தந்தவர் இராமநாரயணப்பிள்ளை எனும் செல்வந்தர்.

பாடல் நடை

வயலூர் அந்தாதி

ஆன வயலூரில் ஆர்ந்தமரும் ஆறுமுக
தீனனெனைக் காத்தருளுந் தேசிகளே- கானவொரு
நற்குறத்தி காதலனே நான்களிக்க மாமயில்மேல்
உற்றெனக்கு முன்வா உவர்து

சிறப்புப்பாயிரம் பாடியவர்கள்

  • சதாசிவப் பிரமம்
  • ஸ்ரீரங்கம் உயர்நிலைப்பள்ளி தமிழாசிரியர் குரு சுப்ரமணிய ஐயர்
  • திருச்சி செயிண்ட் ஜோஸப் கல்லூரித் தமிழாசிரியர் ஏ.எம் . சடகோப இராமா துசாச்சாரியார்
  • திருச்சி மு. நடேசமுதலியார்
  • வேங் கடராவ்
  • சோழமாதேவி குப்புச்சாமிப்பிள்ளை
  • மதுரை அழகர்சாமிப் பிள்ளை
  • திருச்சி அ.ம. நாராயணசாமிப்பிள்ளை
  • தேவிகோட்டை பெரிய கருப்பன் செட்டியார்
  • கோ. வைத்தியநாத ஐயர்
  • திண்டமங்கலம் சின்னச்சாமிப்பிள்ளை
  • உறையூர் சானகிராம ஐயர்

நூல் பட்டியல்

  • வயலூர் அந்தாதி
  • பொன் விடுதூது
  • வயலூர்ப் புராணம்
  • திரிசிராமலைக் கோவை
  • புலவராற்றுப்படை

உசாத்துணை


⨮ Standardised


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.