சித்ரலேகா மௌனகுரு

From Tamil Wiki
சித்ரலேகா மௌனகுரு

சித்ரலேகா மௌனகுரு ( ) இலக்கிய வரலாற்றாசிரியர், இலக்கியத் தொகுப்பாளர், பேராசிரியர். இடதுசாரிச் சிந்தனை கொண்ட இலக்கிய விமர்சகர். ஈழச்சூழலில் பெண்நிலைவாத சிந்தனைகளை அறிமுகம் செய்தவர்

பிறப்பு, கல்வி

சித்திரலேகா மட்டக்களப்பில் வாழ்ந்த தமிழறிஞரும், சமூகத் தொண்டருமான திரு. பி. வி. கணபதிப்பிள்ளையின் மூத்தமகள். இலங்கைப் பல்கலைக்கழகம் - கொழும்பு வளாகத்தின் தமிழ்த்துறைச் சிறப்புப் பட்டதாரி.

தனிவாழ்க்கை

சித்ரலேகா புகழ்பெற்ற ஈழத்து நாடகப்பேராசிரியர் சி.மௌனகுருவின் மனைவி. இவர்களுக்கு சித்தாந்தன் என்னும் மகன் இருக்கிறார். மௌனகுரு- சித்ரலேகா இணையருக்கு ஒரு மகன், சித்தாந்தன்

இலங்கை வானொலியில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராக இருந்தவர்

இலக்கியப் பங்களிப்பு

சித்ரலேகா எம்.ஏ.நுஃமானுடன் இணைந்து ஈழந்த்து இலக்கியவரலாற்றை எழுதியிருக்கிறார். இவர் தொகுத்த ஈழத்துப் பெண்கவிஞர்களின் தொகுப்பான சொல்லாத சேதிகள் புகழ்பெற்ற ஒன்று.

உசாத்துணை

http://www.amrithaam.com/2017/08/blog-post.html

https://noolaham.org/wiki/index.php/%E0%AE%AE%E0%AF%8C%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D_1994.02-04