ஆர்.பொன்னம்மாள்

From Tamil Wiki
ஆர்.பொன்னம்மாள்

ஆர்.பொன்னம்மாள் (1937- ) தமிழ் ஆன்மிக எழுத்தாளர். குழந்தைகளுக்கான கதைகளும் வாழ்க்கை வரலாறுகளும் எழுதியவர். சோதிட நூல்களும் எழுதியிருக்கிறார்.

பிறப்பு, கல்வி

ஆர்.பொன்னம்மாள் சென்னை திருவல்லிக்கேணியில் 21 மே 1937ல் ராமசுப்ரமணியம் லக்ஷ்மி இணையருக்கு பிறந்தார். எட்டாம் வகுப்பு வரை மட்டுமே கல்விகற்றார். குடும்பம் கல்லிடைக்குறிச்சிக்கு இடம்பெயர்ந்த போது படிப்பு நின்றது. பின்னர் தானாகவே இதழ்களை படித்து இலக்கிய அறிமுகமும் மொழிப்பயிற்சியும் பெற்றார்.

தனிவாழ்க்கை

ஆர்.பொன்னம்மாள் 1958ல் ராமசுப்ரமணியத்தை மணந்தார். கணவரின் உதவியுடன் சம்ஸ்கிருதம், சோதிடம் ஆகியவற்றை கற்றார். இலக்கிய விமர்சகரும் சொல்வனம் இணைய இதழின் ஆசிரியருமான பாஸ்டன் பாலாஜி இவருடைய மகன்.

இலக்கியவாழ்க்கை

ஆர். பொன்னம்மாள் இளமையிலேயே தோழிகளிடம் கதைகள் சொல்லும் வழக்கம் கொண்டிருந்தார். தோழி ருக்மிணியிடம் சொன்ன ஒரு கதையை அவர் ஊக்கப்படுத்தியதனால் எழுதி தமிழ்நாடு இதழ் நடத்திவந்த சிறுகதைப்போட்டிக்கு அனுப்பினார். 1957ல் இரட்டைப்பரிசு என்னும் அக்கதை பரிசுபெற்றது. அன்புமனம், இன்பரகசியம், விதி சிரித்தது, சந்தேகப்பேய், கண் திறந்தது போன்ற கதைகளை தமிழ்நாடு இதழிலேயே எழுதினார். அதன்பின் திருமணமாகி குழந்தைகள் ஆனபின் எழுதுவது நின்றுவிட்டது. நீண்ட இடைவேளைக்குப்பின் 1976ல் தினமணி வார இதழுடன் இணைந்து தமிழ்நாடு குழந்தை எழுத்தாளர் சங்கம் நடத்திய சிறுகதைப்போட்டிக்கு கடவுளின் கருணை என்னும் கதையை அனுப்பி பரிசுபெற்றார்.

மீண்டும் சிலகாலம் எழுதாமலிருந்த ஆர்.பொன்னம்மாள் 1983 ல் கோகுலம் சிறார் இதழ் நடத்திய சிறுகதைப்போட்டியில் கருணைவிழிகள் என்னும் கதைக்காக தங்கப்பதக்கம் பெற்றார். அதன்பின் தொடர்ச்சியாக குழந்தைகளுக்கான கதைகளும், ஆன்மிகக்கதைகளும்,பெண்களின் உலகம் சார்ந்த கதைகளும் எழுதத் தொடங்கினார். கோகுலம் போன்ற சிறுவர் இதழ்களிலும் காமகோடி போன்ற ஆன்மிக இதழ்களிலும் தொடர்ந்து எழுதினார்.

ஆர்.பொன்னம்மாள் எழுதிய முதல் நூல் கடவுளின் கருணை சிறார் சிறுகதை தொகுதி பழனியப்பா பிரதர்ஸ் நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. அவருடைய மிகச்சிறந்த நூலாக ஆயிரம் பக்கங்களுக்குமேல் நீளும் பாண்டுரங்க மகிமை என்னும் நூல் கருதப்படுகிறது. கிரி டிரேடிங் கம்பெனி இந்நூலை வெளியிட்டிருக்கிறது.

விருதுகள்

  • தமிழக அரசு குழந்தை எழுத்தாளர் விருது
  • குழந்தை எழுத்தாளர் சங்க விருது
  • ஏ.வி.எம்.தங்கப்பதக்கம்
  • ஸ்டேட் வங்கி பரிசு
  • அழ.வள்ளியப்பா குழந்தையிலக்கிய பரிசு

நூல்கள்

சிறுவர் நூல்கள்
  • கருணைவிழிகள்
  • இராஜராஜ சோழன் வரலாறு
  • பறவைகள் பலவிதம்
  • பொன்மனம்
  • திருக்குறள் கதைகள்
  • பாட்டி சொன்ன கதைகள்
  • தாயின் அருமை
  • நாரதர்
  • பரமசிவன்
  • முருகன்
  • விஸ்வாமித்திரர்
  • மகாபாரதக் கதைகள்
  • சிரிப்பூட்டும் சிறுவர் கதைகள்
  • மறைமலை அடிகள் வரலாறு
  • மூதுரை கதைகள்
  • அறிவியல் பூங்கா
  • தான மகிமை
  • நகைச்சுவைக் கதைகள்
  • இன்னா நாற்பதும் இனிய கதைகளும்
  • பொன்னான காலம்
  • நன்னெறிக்கதைகள்
  • எட்டையபுரத்து தங்கம்
  • தங்கத்தாமரை
  • ஹோஜா கதைகள்
  • நீதிவெண்பா கதைகள்
  • மண்மலர்கள்
  • மரியாதைராமன் கதைகள்
  • வல்லவனுக்கு வல்லவன்
  • தங்கமயில்
  • அன்னத்தின் நட்பு
  • வெற்றிப்பதக்கம்
  • பேசும்குதிரை
  • திருந்திய நெஞ்சம்
  • ராஜநாகம்
  • எட்டையபுரத்து தங்கம்
  • பார்வைபெற்ற சிற்பி
  • விவேகசிந்தாமணி கதைகள்
  • தீரன் மகிமை
  • தங்கவாழைக் கன்று
  • வாழ்வின் இலக்கணம்
  • விதியின் பின்னல்
  • அறிவைத்தரும் ஈசாப் கதைகள்
பக்திநூல்கள்
  • ஸ்ரீமத் நாராயணீயம்
  • தேவி திருவிளையாடல்
  • ஸ்ரீராகவேந்திரர்
  • ஸ்ரீ ஷிர்டி சாய்பாபாவின் சரித்திரம்
  • பாகவத புருஷோத்தமர் கதைகள்
  • பண்டிகைகளும் விரதங்களும்
  • கருணை வள்ளல்
  • அன்பிற் சிறந்த அடியார்கள்
  • அரிச்சந்திர புராணம்
  • கருடபுராணம்
  • ஸ்ரீமத் பாண்டுரங்க விஜயம்
  • வட்டமிட்ட கருடன்
  • பாண்டுரங்க மகிமை
  • சகலகாரிய சித்தி தரும் ஸ்ரீமத் சுந்தரகாண்டம்
  • நாலாயிர திவ்ய பிரபந்த விளக்கம்
  • பரமாச்சாரியாள் பாதையில்
  • சிவலீலை
  • குருரத்தினங்கள்
  • சத்ய சாயி வரலாறு
  • மகாபாரதக் கதைகள்
  • மங்கையர் குல மாணிக்கங்கள்
  • காவல்தெய்வங்கள்
  • சென்னை சிவஸ்தலங்கள்
  • கிராமதேவதைகள்
  • ராமாயணம்
  • தசாவதாரம்
  • திருவிளையாடல் புராணம் என்னும் சிவலீலைகள்
  • ஸ்ரீமத் ராமானுஜ வைபவம்
  • லக்ன ஆராய்ச்சி
  • எண்கள் என்னும் பொக்கிஷம்

உசாத்துணை