கணேஷ்,வசந்த்

From Tamil Wiki
Revision as of 13:38, 22 March 2022 by Jeyamohan (talk | contribs)
கணேஷ் வசந்த்

கணேஷ்,வசந்த் : எழுத்தாளர் சுஜாதா உருவாக்கிய துப்பறியும் கதாபாத்திரங்கள். கணேஷ் வழக்கறிஞர், வசந்த் அவருடைய துணைவழக்கறிஞர். அவர்கள் தனிப்பட்டமுறையில் குற்றங்களை புலனாய்வு செய்கிறார்கள்.

வரலாறு

கணேஷ் சுஜாதா எழுதிய நைலான் கயிறு நாவலில் ஒரு சிறு கதாபாத்திரமாக அறிமுகமானார். அதில் துப்பறிவாளராக அன்றி குற்றம்சாட்டப்பட்டவரை வாதாடி விடுதலை வாங்கித்தரும் வழக்கறிஞராகவே இருந்தார். அதன்பின் கணேஷ் அனிதா இளம் மனைவி நாவலில் டெல்லியில் வழக்கறிஞராக வேலைபார்ப்பவராகவும், நேரடியாகவே துப்பறிபவராகவும் வந்தார். பாதி ராஜ்யம் என்னும் கதையில் நீரஜா என்னும் உதவியாளர் கணேஷுக்கு இருந்தார். ஒரு விபத்தின் அனாடமி என்ற கதையில் அவர் விரிவுபெற்றார். பின்னர் காணமாலானார்

1973ல் ப்ரியா என்னும் நாவலில் வசந்த் அறிமுகமானார். காயத்ரியில் வசந்த் துப்பறிதலில் உதவுகிறார். தொடக்ககாலத்தில் கணேஷ் மட்டும் வரும் நாவல்களில் பின்னாளில் வசந்தின் குணச்சித்திரமாக வெளிப்படும் நையாண்டியாகப் பேசும் தன்மை போன்றவை கணேஷிடமே இருந்தன

நிர்வாணநகரம் நாவலில் கணேஷ் வசந்த் இருவருடைய குணச்சித்திரங்களும் தெளிவாக வரையறை செய்யப்பட்டுவிட்டன. ஓவியர் ஜெயராஜ் அவர்களுக்கு முகங்களையும் அளித்துவிட்டார்.

குணச்சித்திரங்கள்

கணேஷ் அறிவார்ந்த, அதிகம்பேசாத, கூர்மையான மனிதர். பெண்களிடமிருந்து ஒதுங்கியே இருப்பவர். வசந்த் பேசிக்கொண்டே இருக்கும் இளைஞன். பெண்களை துரத்துபவன். கணேஷ் படிப்படியாக ஆராய்ந்து பார்ப்பது, முற்றிலும் வழக்கத்துக்கு மாறான கோணத்தில் பார்ப்பது ஆகிய அணுகுமுறைகள் கொண்டவன். வசந்த் சட்டென்று உள்ளுணர்வால் புதியவற்றை கண்டடைபவன். கணேஷ் வசந்த் இருவரும் ஒருவரை ஒருவர் நிரப்பும் கதாபாத்திரங்களாக நாவல்களில் வெளிப்படுகிறார்கள்.

உசாத்துணை