under review

பாடாங் மேஹா தோட்டத் தமிழ்ப்பள்ளி

From Tamil Wiki
Revision as of 15:53, 13 June 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Added First published date)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
பாடாங் மேஹா தோட்டத் தமிழ்ப்பள்ளி.png

பாடாங் மேஹா தோட்டத் தமிழ்ப்பள்ளி மலேசியாவின் கெடா மாநிலத்தின் பாடாங் செராயில் உள்ளது. இப்பள்ளி அரசாங்க பகுதி உதவி பெறும் பள்ளி. பாடாங் மேஹா தோட்டத் தமிழ்ப்பள்ளியின் பதிவு எண் KBD 5066.

வரலாறு

1957-ம் ஆண்டில் பாடாங் மேஹா தோட்ட மஹா மாரியம்மன் ஆலயத்தின் மண்டபத்தில்தான் மாணவர்கள் முதலில் கல்வி பயிலத் தொடங்கினர். இதன்பின்னர் தோட்ட நிர்வாகம் பலகையிலான பள்ளிக் கட்டிடத்தைக் கட்டித் தந்தது.

பள்ளிக்கட்டிடம்

பாடாங் மேஹா தோட்டத் தமிழ்ப்பள்ளி 2.png

ஏப்ரல் 11, 1965-ல் கல்வியமைச்சு பள்ளிக்காக நான்கு வகுப்பறைகள் கொண்ட கட்டிடத்தைக் கட்டியது. 1989-ல் மேலும் நான்கு வகுப்பறைகள் கட்டப்பட்டன. 2004-ல் பாடாங் மேஹா தோட்டத் தமிழ்ப்பள்ளி ஆறு வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டிடத்தைப் பெற்றது. 2011-ல் சிற்றுண்டிச்சாலையும் புதிய கட்டிடமும் கட்டி முடிக்கப்பட்டன. இக்கட்டிடத்தில் கணினி அறை, அறிவியல் கூடம், இசைக்கல்வி அறை, பள்ளி மண்டபம் ஆகியவை அமைந்துள்ளன. பாடாங் மேஹா தோட்டத் தமிழ்ப்பள்ளியில் பாலர் பள்ளியும் செயல்படுகின்றது. தோட்ட நிர்வாகம் பள்ளித் திடலைச் சீரமைத்துக் கொடுத்துள்ளது.

மாணவர் எண்ணிக்கை

பாடாங் மேஹா தோட்டத் தமிழ்ப்பள்ளி 3.png

பாடாங் மேஹா தோட்டத் தமிழ்ப்பள்ளியில் 1970 முதல் 1990 வரை ஏறக்குறைய 300 மாணவர்கள் பயின்றுள்ளனர். 2001-லிருந்து மாணவர் எண்ணிக்கை சற்று குறையத் தொடங்கியது. தற்போது தோட்டத்தில் வசிப்பவர்கள் குறைவானபோதிலும் சுற்றுவட்டாரத்திலுள்ள சிற்றூர் மற்றும் வீடமைப்புப் பகுதிகளிலிருந்து மாணவர்கள் வருகின்றனர்.

தலைமையாசிரியர் பட்டியல்

எண் பெயர் ஆண்டு
1. அ. சுப்ரமணியம் 1959 - ஆகஸ்ட் 14,1978
2. ப. அர்ஜுனன் ஆகஸ்ட் 15,1978 - மே 30,1991
3. அ. சின்னதம்பி ஜனவரி 1, 1992 - பிப்ரவரி 15, 1995
4. சு. முத்துலெண்டி மார்ச் 16, 1995 - ஜூன் 5,1999
5. தி. சுப்ரமணியம் ஜூலை 1, 1999 - மார்ச் 31,2001
6. சு. பழனியப்பன் ஏப்ரல் 01, 2001 - செப்டெம்பர் 02, 2005
7. ப. பிரேமா செப்டெம்பர் 02, 2005 - ஜூன் 30, 2007
8. வேதவல்லி ஜூலை 1, 2007 – டிசம்பர் 1, 2013
9. சி. சுப்ரமணியம் ஜனவரி 1, 2014 – ஏப்ரல், 18,2017
10. ம. ஜெயேந்திரன் ஏப்ரல், 19,2017 – மார்ச் 16, 2019
11. சு. கருணாமூர்த்தி ஜுன் 1, 2019 – பிப்ரவரி 19, 2022
12. மு. நந்தகோபாலன் பிப்ரவரி 19, 2022– மே 2, 2023
13. அ. சுப்பாராவ் மே 2, 2023 – தற்போதுவரை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 21-Feb-2024, 12:03:42 IST