being created

ஏ.என். கிருஷ்ணவேணி

From Tamil Wiki

ஏ.என். கிருஷ்ணவேணி (பிறப்பு: நவம்பர் 3, 1954) ஈழத்துப் பெண் எழுத்தாளர், ஆய்வாளர்,

வாழ்க்கைக் குறிப்பு

ஏ.என். கிருஷ்ணவேணி இலங்கை யாழ்ப்பாணத்தில் வட்டுக்கோட்டையில் தம்பிப்பிள்ளை, செல்லமுத்து இணையருக்குப் பிறந்தார். தெல்லிப்பளை யூனியன் கல்லூரியிலும், சுழிபுரம் விக்ரோரியா கல்லூரியிலும் கற்றார். 1974இல் விக்ரோரியா கல்லூரியில் இருந்து களனி பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டார். சிறப்பு கலைமாணி பட்டத்தினை முதலாம் வகுப்பில் பெற்றார். கலைமாணி பட்டப்படிப்பில் சிறப்பு பாடமாக இந்து நாகரிகத்தையும் உதவிப் பாடமாக தொல்பொருளியலையும் தெரிவு செய்தார். 1978-1985ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியில் இந்துநாகரிகத்தை இந்து நாகரிகத்தை தனியார் நிறுவனங்களில் உயர்த்ரம் வகுப்புக்களுக்கு கற்பித்தார். சென்னை பல்கலைக்கழகத்தில் மெய்யியல் துறையில் முதுகலைமாணி, முதுதத்துவமாணி ஆகிய பட்டங்களைப் பெற்றார். 1989-இல் யாழ்ப்பல்கலைக்கழகத்தில் இந்து நாகரீகத்துறையில் உதவி விரிவுரையாளராக பதவி வகித்தார். பின்னர் 1990ஆம் ஆண்டு பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி துறைத்தலைவராக இருந்த காலப் பகுதியில் விரிவுரையாளராக நியமிக்கப்பட்டார்.

ஆய்வு வாழ்க்கை

ஏ.என். கிருஷ்ணவேணியின் முதுதத்துவமாணி பட்டம் ”Philosophy of beauty” என்ற கற்கையை அடிப்படையாகக் கொண்டது. இவர் பக்தியும் அதன் தாக்கமும் கலைகளில் எவ்வாறு வெளிப்படுத்தப்பட்டது என்பதனை தென்னிந்திய விரியன் கலைவடிவங்களை அடிப்படையாக கொண்டு ஆய்வு மேற்கொண்டார். 1997-2000 வரையான காலப் பகுதியில் கலாநிதிப் பட்டத்தை பெற்றார். சிறப்பாக ரஸக்கொள்கையை தமிழ் இலக்கிய மரபினை அடிப்படையாக கொண்டு ஆய்வு மேற்கொண்டார். யாழ்ப்பல்லைக்ழககத்தில் நீண்டகாலம் நுண்கலைத்துறை தலைவராக பணியாற்றினார். இவர் இக்காலப் பகுதியில் இலங்கை, இந்தியா, மலேசியா, பிரான்ஸ் போன்ற நாடுகளில் இடம்பெற்ற உலக சைவ மாநாடு 3ஆம், 4ஆம் ஐரோப்பிய மாநாடுகளில் பங்குபற்றி ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்தார். சுவிட்சர்லாந்திலும், லண்டனிலும் நடைபெற்ற முருகபக்தி மாநாடு, திருக்குறள் மாநாடு போன்றவற்றிலும் கட்டுரையை சமர்ப்பித்தார்.

கொழும்பு இந்துகலாசார அமைச்சினால் வருடாந்தம் நடாத்தப்படும் சர்வதேச மாநாடுகளில் ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளதுடன் தலைமைதாங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. அமைச்சினால் வெளியிடப்படும் பண்பாடு என்ற ஆய்வுச் சஞ்சிகையில் கணிதம், தத்துவம், அழகில் சார்ந்த பல்வேறு ஆய்வுக்கட்டுரைகளையும் எழுதினார்.

இலக்கிய வாழ்க்கை

ஏ.என். கிருஷ்ணவேணி பல நூல்களுக்கு வெளியீட்டு உரை, மதிப்பீட்டு உரை எழுதியுள்ளார். தமிழ் அழகியல், இந்திய அழகியல், சைவசித்தாந்தம் ஓர் அறிமுகம் ஆகிய நூல்களையும் ”The concept of Bhakti and arts Monograph – The theory refer” ஆகியவற்றையும் வெளியிட்டார். பல நினைவு பேருரைகளை நிகழ்த்தினார்.

நூல் பட்டியல்

  • தமிழ் அழகியல்
  • இந்திய அழகியல்
  • சைவசித்தாந்தம் ஓர் அறிமுகம்
  • The concept of Bhakti and arts Monograph – The theory refer

உசாத்துணை



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.