being created

இராஜகுமாரி சோதிநாதன்

From Tamil Wiki

இராஜகுமாரி சோதிநாதன் (பிறப்பு: ஏப்ரல் 17, 1944) ஈழத்துப் பெண் இசைக்கலைஞர், இசை ஆசிரியர். தட்சணகான சபையின் நிறுவனர்.

வாழ்க்கைக் குறிப்பு

இராஜகுமாரி சோதிநாதன் இலங்கை மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த இசைக்கலைஞர். வாய்ப்பாட்டிலும், வயலினிலும் சங்கீத கலாவித்தகர் பட்டம் பெற்றார். இலங்கையில் முதல் முதலில் சித்தார் வாத்தியத்தில் சங்கீத கலாவித்திகர் பட்டமும் பெற்றார். திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் சங்கீத ஆசிரியராக இருந்தார். மட்டக்களப்பு கல்விக் கல்லூரி பகுதி நேர ஆசிரியராகவும், மட்டக்களப்பு தொலைக்கல்வி போதனா ஆசியராகவும் பணியாற்றினார். சங்கீத ஆசிரியராகவும், விரிவுரையாளராகவும், சங்கீத சேவைக்கான ஆலோசகராகவும் இவர் பணியாற்றியுள்ளார்.

அமைப்புப் பணிகள்

  • தேசிய கல்வி நிறுவனத்தில் 1963-2011வரை ஆசிரியர் கைநூல் தயாரிப்பில் ஓர் அங்கத்தவராக இருந்தார்.
  • தட்சணகான சபையை ஆரம்பித்து சங்கீத சேவை செய்துள்ளார்.

எழுத்து

இராஜகுமாரி சோதிநாதன் கல்வி பொதுத்தராதர சாதாரணதர மாணவர்களுக்கான வினாவிடை 1ஆம், 2ஆம் (பகுதி) புத்தகமாக அச்சிட்டு வெளியிட்டார்.

நூல் பட்டியல்

  • வினாவிடை 1ஆம், 2ஆம் (பகுதி)

உசாத்துணை



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.