being created

இன்ஷிராஹ் இக்பால்

From Tamil Wiki
இன்ஷிராஹ் இக்பால்

இன்ஷிராஹ் இக்பால் (பொ.யு 20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி) ஈழத்துப் பெண் எழுத்தாளர், கவிஞர், கட்டுரையாளர், ஆசிரியர்.

வாழ்க்கைக் குறிப்பு

இன்ஷிராஹ் இக்பால் இலங்கை கேகாலை மாவனல்லை கிருங்கதெனியவில் ஏ.சி.எம்.இக்பால், சுலைமா சமி இக்பால் இணையருக்குப் பிறந்தார். இலங்கையின் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் இளங்கலைப்பட்டம் பெற்றார். மீரா பாலிகா நேஷனல் பள்ளியில் தகவல் தொழில்நுட்பப் பட்டதாரி ஆசிரியர். இன்ஷிராஹ் இக்பால் ஜூலை 9, 2017-இல் ஷாகி ஷகீலை மணந்தார்.

இலக்கிய வாழ்க்கை

பாடசாலைக் காலத்திலேயே கவிதை, கட்டுரை, சிறுகதை எழுதும் ஆற்றல் கொண்டவர் எழுத்தாளர். பாடசாலை மட்டத்திலும், தேசிய மட்டதிலும் பல போட்டிகளில் கலந்துகொண்டு பரிசில்களையும் சான்றிதழ்களையும் பெற்றார். 2009-இல் “பூ முகத்தில் புன்னகை” என்ற சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டார். 2013இல் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் போது உயர் கல்வி அமைச்சு, பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்கள் மத்தியில் நடாத்திய தேசிய ரீதியிலான ஆற்றல் நிகழ்ச்சியில் இவர் எழுதிய ”நிழலைத் தேடி” என்ற சமூக நாவல் முதற் பரிசு பெற்றது. இதற்காக இவர் விருதும் ஒரு இலட்சம் ரூபாய் பணமும் வழங்கி கௌரவிக்கப்பட்டார். இந்த நாவல் 2014ஆம் ஆண்டு தென்கிழக்குப் பல்கலைக்கழகத் தமிழ்ச் சங்கத்தினால் வெளியிடப்பட்டது. இவரின் சிறுகதைகளையும், நாவலையும் இலங்கையின் பார்வையற்றோர் சங்கம் என்ற அமைப்பு குரல் வடிவில் இறுவட்டாகப் பதிவு செய்துள்ளது.

விருதுகள்

  • அகில இலங்கை தேசிய கவி சம்மேளனம் 2013ஆம் ஆண்டு நடத்திய விருது விழாவில் காவியப் பிரதீப கவிச்சுடர் பட்டம்.

நூல் பட்டியல்

  • பூ முகத்தில் புன்னகை (சிறுகதைத் தொகுப்பு)
  • நிழலைத் தேடி (நாவல்)

உசாத்துணை



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.