ஏ.பி.பெரியசாமி புலவர்

From Tamil Wiki
பெரியசாமி புலவர்

ஏ.பி. பெரியசாமி புலவர் (1881- 1939) பௌத்த அறிஞர். அயோத்திதாச பண்டிதருடன் பௌத்தத்தை தழுவினார். திருப்பத்தூரில் பௌத்த விகாரையை நிறுவினார்.

பிறப்பு, கல்வி

ஏ.பி.பெரியசாமி புலவர் 14- மார்ச்- 1881ல் திருப்பத்தூரில் பிறந்தார். கரந்தை தமிழ்ச்சங்கத்தில் புலவர் பட்டம் பெற்றார்

தனிவாழ்க்கை

ஏ.பி.பெரியசாமி புலவரின் மகன் புகழ்பெற்ற தலித் சிந்தனையாளரான தி.பெ.கமலநாதன்

பௌத்தப்பணிகள்

அயோத்திதாச பண்டிதர் தொடங்கிய தமிழ்பௌத்த மறுமலர்ச்சிப் பணிகளில் உடன் நின்று பணியாற்றினார். , 1907ஆம் ஆண்டு நூற்றுக்கணக்கானவர்களோடு பௌத்தத்தைத் தழுவினார். 1909 ஆம் ஆண்டு, மே மாதம் 18 ஆம் தேதியில், திருப்பத்தூர் துணை ஆட்சியர் அலுலகத்திற்கு அருகில், 'யதார்த்த பிராமணர் யார்?' எனும் தலைப்பில், பிக்கு விசுதா தலைமையில் மாநாடு ஒன்றை நடத்தினார். கோலார், பெங்களூர், சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் இருபத்திரெண்டு பௌத்த மாநாடுகளை வெற்றிகரமாக நடத்தினார்.1922 இல், திருப்பத்தூரில் பௌத்த விகாரை நிறுவினார். அயோத்திதாசர் நடத்திய தமிழன் இதழில் தொடர்ந்து எழுதி வந்தார். பின்னர் ஈ.வெ.ராமசாமிப் பெரியார் நடத்திய திராவிட இயக்க ஆதரவாளராக ஆனார்.

மறைவு

ஏ.பி.பெரியசாமி புலவர் 1939 ல் மறைந்தார்.

நூல்கள்

ஸ்தௌத்யப் பத்து இணையநூலகம்

உசாத்துணை