சிவக்கொழுந்து தேசிகர்

From Tamil Wiki
Revision as of 11:41, 13 March 2022 by Madhusaml (talk | contribs) (லட்சுமி நாராயணன் (கத்தார்) அளித்த பதிவு)

சிவக்கொழுந்து தேசிகர் 19-ம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப்புலவர். பதிப்பாசிரியர். இவர் காலத்தில் திருவாசகம் முதன் முறையாக அச்சில் பதிப்பிக்கப்பட்டது

வாழ்க்கைக் குறிப்பு

கும்பகோணம் என அழைக்கப்படும் திருகுடந்தைக்கு அருகில் உள்ள கொட்டையூரில் பிறந்தார். தந்தை தண்டபாணி தேசிகர். வைத்தியநாத தேசிகரின் வழிவந்தோரிடம் கல்வி பயின்றார். கொட்டியூரில் தமிழ் ஆசிரியராக பணியாற்றினார். இரு மனைவியர். ஏழு குழந்தைகள். 96ம் வயதில் இறந்தார்.

இவரது பிறப்பு மறைவு வருடங்கள் தெளிவாக அறியப்படவில்லை.

இலக்கியப் பங்களிப்பு

தஞ்சையில் சரபோஜி மன்னரின் ஆட்சியின் போது, அமைக்கப்பட்ட நூலாராய்ச்சிக்குழுவில் பணியாற்றினார். பின்னர் சென்னையில் தாண்டவராய முதலியார் தலைமையில் அமைந்த சென்னை கல்வி சங்கத்தில் தமிழ்த்துறையில் பணியாற்றினார்.

உ.வே.சாமிநாதர் ஐயர் பதிப்பித்த சிவக்கொழுந்து தேசிகர் இயற்றிய பிரபந்தங்கள் தொகுப்பில் கோடீச்சுரக்கோவை, சரபேந்திரர் பூபால குறவஞ்சி நாடகம், தஞ்சைப் பெருவுடையார் உலா ஆகியவை இடம்பெற்றுள்ளன. கொட்டியூர் உலா கிடைக்கவில்லை.

நூல் பட்டியல்

  • கொட்டையூர் உலா
  • சரபேந்திரர் வைத்திய முறைகள்
  • சரபேந்திரர் சன்னிரோக சிகிச்சைகள்
  • சரபேந்திரர் வைத்தியம்
  • சரபேந்திரர் பூபால குறவஞ்சி நாடகம்
  • கோடீச்சுரக்கோவை
  • திருவிடைமருதூர்ப் புராணம்
  • தஞ்சைப் பெருவுடையார் உலா
  • ஆச்சாபுரத் தலபுராணம்

உசாத்துணை