being created

எம்.எம். தண்டபாணி தேசிகர்

From Tamil Wiki

எம். எம். தண்டபாணி தேசிகர் (ஆகஸ்ட் 27, 1908 - ஜூன் 26, 1972) தமிழிசைக் கலைஞர், இசைப்பாடகர், நடிகர். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் இசைத்துறைத் தலைவராக 15 ஆண்டுகள் பணியாற்றினார். தமிழ்த் திரைப்படங்களிலும் நடித்தார்.

பிறப்பு,கல்வி

தண்டபாணி தேசிகர் நன்னிலத்துக்கு அருகில் உள்ள திருச்செங்காட்டங்குடியில் முத்தையா தேசிகர், ஆலயங்களில் பரம்பரையாக ஓதுவார் குடும்பத்தில் முத்தையா தேசிகருக்கு மகனாகப் பிறந்தார். மாணிக்க தேசிகர், கும்பகோணம் ராசமாணிக்கம் பிள்ளை ஆகியோரிடம் இசைப் பயிற்சி பெற்றார். கோயிலில் தன்னுடைய தந்தையார் தேவாரம், திருவாசகம் இசைப்பதைக் கேட்டு வளர்ந்தவர் தன் தந்தையிடமே இசைப் பயிற்சி பெற்றார். சட்டையப்ப நாயனக்காரர், தன்னுடைய சிறிய தந்தை மாணிக்க தேசிகர், வயலின் வித்வான் கும்பகோணம் ராஜமாணிக்கம் பிள்ளை ஆகியோரிடம் தமிழிசை, கர்னாடக இசை பயின்றார்.

தண்டபாணி தேசிகருக்கு 14 வயதில் திருமருகல் கோயிலில் அரங்கேற்றம் நடைபெற்றது. சிறு வயதிலிருந்தே கச்சேரிகள் செய்துவந்தார்.

தனி வாழ்க்கை

சிதண்டபாணி தேசிகர் மதுரை ஒக்கூர் லட்சுமணன் செட்டியார் தேவாரப் பாடசாலைக்கு ஆசிரியராக 18 வயதில் பணியில் சேர்ந்தார். தமிழிப் பண்களுக்கும், கர்நாடக இசைக்கும் வேர்கள் ஒன்றே எனக் கண்டறிந்தார்.

தண்டபாணி தேசிகரின் மனைவி தேவசேனா. இவர்களுக்குக் குழந்தைகள் இல்லை.

இசை வாழ்க்கை

தண்டபாணி தேசிகர் மதுரையில் வாழ்ந்த காலத்தில், வடக்குச் சித்திர வீதியில் நடைபெறும் மீனாட்சியம்மை உற்சவத்தில், அம்பாள் குறித்து தமிழில் இயற்றிப் பாடிய 9 பாடல்கள் மக்களால் விரும்பப்பட்டு புகழ்பெற்றன. தேசிகரின் கச்சேரிகளும் இசைத் தட்டுகளும் விக விரும்பப்பட்டன.

அந்தக் காலங்களில் திரைப்படங்களில் பின்னணி பாடும் வழக்கம் இல்ல. நடிகர்கள் இசையிலும் தேர்ந்தவர்களாக இருக்க வேண்டியிருந்தது. தண்டபாணி தேசிகர் வேல் பிக்சர்ஸ் நிறுவனத்தின் அழைப்பின் பேரில் ‘பட்டினத்தார்’ படத்தில் பாடி நடித்தார். திரைப்படத்தில் இடம்பெற்ற 52 பாடல்களில் பெரும்பான்மையானவற்றை அவரே பாடினார். படம் வெற்றி பெற்றது.

தேசிகர் அடுத்து 'வல்லாள மகாராஜா' படத்தில் நடித்தார். அது வெற்றி பெறவில்லை.

திரைத்துறை

விருதுகள்/சிறப்புகள்

மதிப்பீடு

உசாத்துணை


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.