மணி திருநாவுக்கரசு

From Tamil Wiki
மணி திருநாவுக்கரசு

மணி சு. திருநாவுக்கரசு முதலியார் (1888 - 1931) மணி திருநாவுக்கரசு முதலியார். தமிழறிர், கல்வியாளர். மரபிலக்கியம் சார்ந்த ஆய்வுநூல்கலை எழுதியிருக்கிறார். இதழாசிரியர்

பிறப்பு, கல்வி

செங்கல்பட்டு மாவட்டம், மணிமங்கலம் என்னும் ஊரைச் சேர்ந்த சுந்தர முதலியாரின் மகனாக 1888ல் பிறந்தார். பூவை கலியாணசுந்தர முதலியார், மறைமலையடிகள் ஆகியோரிடம் கல்விகற்றார்.

தனிவாழ்க்கை

தொடக்கத்தில் கடைகளில் கணக்குப்பிள்ளையாகப் பணியாற்றினார். பின்னர் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக ஆனார்.

இலக்கியவாழ்க்கை

செந்தமிழ்ச் செல்வி, தமிழரசு ஆகிய இதழ்களின் ஆசிரியராகப் பணியாற்றினார். தமிழர் சங்கம் என்ற அமைப்பைத் தோற்றுவித்தார்.

நூல்கள்

இயற்றியவை
தொகுப்பு
  • பாமணிக் கோவை
  • உரைமணிக் கோவை

உசாத்துணை

இணையநூலகம் சென்னை தமிழ்ப்புலவர்கள்