வெண்முகில் நகரம் (வெண்முரசு நாவலின் ஆறாம் பகுதி)
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.
வெண்முகில் நகரம் (‘வெண்முரசு’ நாவலின் ஆறாம் பகுதி) இந்திரப்பிரஸ்தம் உருவாவதற்கான பின்புலத்தை விரிந்த புனைவுவெளியாக இது காட்டுகிறது. இந்திரப்பிரஸ்தம் விண்நிறைந்த முகில்நிரையை ஆளும் இந்திரன் பெயரால் அமைந்த நகரம். திரௌபதி அஸ்தினபுரியின் அரசியென ஆகி, இந்திரப்பிரஸ்தத்தை அமைக்க ஆணையிடுகிறாள். பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் பகை முற்றுகிறது. பாண்டவர்கள் ‘இந்திரபிரஸ்தம்’ என்ற நகரை அமைக்கின்றனர். அந்த நகரைப் பற்றியும் ஸ்ரீ கிருஷ்ணர் உருவாக்கிய துவாரகை நகரைக் குறித்தும் இது விரிவாகக் கூறுகிறது.
பதிப்பு
இணையப் பதிப்பு
‘வெண்முரசு’ நாவலின் ஆறாம் பகுதியான ‘வெண்முகில் நகரம்’ எழுத்தாளர் ஜெயமோகனின் இணையதளத்தில் பிப்ரவரி 2015 முதல் ஒவ்வொரு நாளும் ஓர் அத்யாயம் என வெளியிடப்பட்டு மே 2015இல் நிறைவுற்றது. இது அவரது இணைய தளத்தில் முற்றிலும் இலவசமாகப் படிக்கக் கிடைக்கிறது. இணையத்தில் மின் பதிப்பாகவும் இது விலைக்குக் கிடைக்கிறது.
அச்சுப் பதிப்பு
கிழக்கு பதிப்பகம் வெண்முகில் நகரை அச்சுப் பதிப்பாக வெளியிட்டுள்ளது.
ஆசிரியர்
‘வெண்முரசு’ நாவலை எழுதியவர் எழுத்தாளர் ஜெயமோகன். இவர் இந்திய தமிழ் மரபை நவீனக் காலகட்டத்தின் அறத்துக்கு ஏற்ப மறு வரையறை செய்தவர்.
கதைச்சுருக்கம் / நூல்சுருக்கம்
புலோமையின் கதையுடன் தொடங்கிய கதை, திரௌபதியின் மங்கள இரவுகள், பாண்டவர்களின் பிற மண நிகழ்வுகள், துரியோதனன் மற்றும் பிற கௌரவர்களின் மண நிகழ்வுகள், பானுமதி, தேவிகை, விஜயை என்ற மூன்று இளவரசிகள்; சாத்யகி, பூரிசிரவஸ் என்ற இரண்டாம் கட்ட ஆளுமைகள் என்ற வர்ணக் கலவையாக நடந்து முடிந்துள்ளது.
கதை மாந்தர்
பிறவடிவங்கள்
வெண்முகில் நகரத்தைத் தம் குரல்பதிவில் யூடியூப்பில் வெளியிட்டுள்ளார் மனோபாரதி விக்னேஷ்வர்.
உசாத்துணை
- https://venmurasu.in/venmugil-nagaram/chapter-1
- https://www.jeyamohan.in/145170/
- https://venmurasudiscussions.blogspot.com/
- https://www.jeyamohan.in/?s=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA.+%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D
- https://rengasubramani.blogspot.com/2016/03/blog-post.html
- https://www.haranprasanna.in/tag/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81/
இணைப்புகள்
- மனோபாரதி விக்னேஷ்வர் - வெண்முகில் நகரம் - குரல் பதிவு - https://www.youtube.com/watch?v=ecMksfTtHSw&list=PLvWdiqurBsABU34SwoBQ3PZPisodrbvDI&index=1
[[Category:Tamil Content]]