being created

பிரபுலிங்க லீலை

From Tamil Wiki

பிரபுலிங்க லீலை (பொ.யு. 18-ஆம் நூற்றாண்டு) சிவப்பிரகாச சுவாமிகள் மொழிபெயர்த்த நூல்.

நூல் பற்றி

'பிரபுலிங்கலீலை' இறைவனின் அருளுருவாக விளங்கும் அல்லமா பிரபு என்னும் தலைவனைப் போற்றிப் பாடியதாக அமைந்த பாடல். இந்த நூல் 25 கதிகளைக் கொண்டது. 1158 பாடல்கள் இதில் உள்ளன. இது கன்னடத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்டது. பிரபுலிங்கலீலை கன்னடம், தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம், மகாராஷ்டிரம் முதலான வேறு பல மொழிகளிலும் இயற்றப்பட்டுள்ளது

உள்ளடக்கம்

பொ.யு. 12-ஆம் நூற்றாண்டில் வளர்ச்சியடைந்த வீரசைவ சமயத்தின் தத்துவங்களை அடிப்படையாகக் கொண்டது. இம்மத வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைந்த தலைவர்களைப்பற்றிக் கூறுவது. மக்கள் வாழ்க்கைக்கு இன்றியமையாதது இது என்று கூறும் நூல். காப்பியத்தன்மை கூடியது என துரைசாமி ஐயர் கருதினார். அல்லமனை சிவனின் தேவியான இறைவி மாயை, விமலை மூலம் சோதிக்கிறாள். அல்லமன் வசவன், அக்கமாதேவி, கொக்கித்தேவர், சித்தராமர், கோரக்கர் முதலிய வீரசைவ அடியார்கள் பற்றிய செய்திகள் இந்நூலில் உள்ளன.

உரை

19-ஆம் நூற்றாண்டு உரையாசிரியரான சரவணப் பெருமாள் ஐயர் இந்நூலுக்கு உரை இயற்றத் தொடங்கி முழுவதும் நிறைவு செய்யாமலேயே மறைந்தார். சிவஞான பாலய சுவாமிகள் கல்லூரியின் தலைவராக இருந்த சி. துரைசாமி ஐயர் இதற்கு முன்னிருந்த சரவணப்பெருமாள் ஐயரின் உரையைத்தழுவி உரை எழுதினார்.

இணைப்புகள்

  • நல்லாற்றூர் சிவப்பிரகாச சுவாமிகள் திருவாய்மலர்ந்தருளிய பிரபுலிங்க லீலை : மூலமும் - விளக்க உரையும்: tamildigitallibrary



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.