being created

மயூரகிரிக்கோவை

From Tamil Wiki
Revision as of 08:46, 15 August 2023 by Jayashree (talk | contribs)

மயூரகிரிக்கோவை (பொ.யு. 19-ஆம் நூற்றாண்டு) மயூரகிரியில் கோவில் கொண்ட ஆறுமுகப் பெருமானைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு இயற்றப்பட்ட கோவை என்னும் சிற்றிலக்கியம்.

ஆசிரியர்

மயூரகிரிக்கோவையை இயற்றியவர் சாந்துப்புலவர். இம்மயூரகிரிக் கோவை மருதரசர்களின் அவையில் (கி.பி.1798) காளயுக்தி ஆண்டு தைத்திங்கள் 27 ஆம் நாள் வெள்ளிக் கிழமை அன்று அரங்கேற்றப்பட்டது. இந்தக் கோவையை பாடிய சாந்துப் புலவருக்கு மருதரசர்கள் ஆடையும், பொன்னும், காளையார் கோயிலுக்கு அருகில் உள்ள "புலவன் மருதங்குடி" என்ற கிராமத்தையும் கொடையாக வழங்கியுள்ளார். இந்நூலை மதுரைத் தமிழ்ச்சங்கத்தின் ஏழாம் ஆண்டு நடந்த வித்துவசபையில் 1908 ஆம் ஆண்டு மே 25 ஆம் நாள் மேதகு பாண்டித்துரைத் தேவர் விருப்பப்படி படிக்கப்பட்டு, மகாவித்துவான் சோழவந்தான் அரசஞ் சண்முகனார் பிரசங்கித்து, கீழ்கண்ட வெண்பா வழங்கினார்.

நூல் அமைப்பு

மயூரகிரி (குன்றக்குடி) பாண்டிய நாட்டில் அமைந்த தேவாரப் பாடல் பெற்ற தலம்.

இக்கோவை 536 கட்டளைக் கலித்துறை பாடல்களை உடையது, இந்நூலில் மருதுபாண்டியரின் திருப்பணிகளும், அறங்களும், புலவர்கட்கு வழங்கிய செய்தியும், ஈகையும், வீரமும் கலந்து பாடப்படுகின்றன.


மயூரகிரிக் கோவையில் சிங்கம் வினாதல், கரடி வினாதல், முயல் வினாதல் என மாணவர் வினாத்தாள் போலப் பல வினாக்கள் வருகின்றன. எல்லா வினாக்களுக்கும் நன் மாணவிபோலத் தோழி எதிர்மொழி பொருந்தச் சொல்லுகின்றாள்.

அன்றியும்‌ பாட்டுடைச்‌ தலைவராகிய குமாரக்கடவுள்‌ தம்‌மைப்‌,பூசித்‌த ௮கத்தியராதிய மெய்த்தவர்கட்கருளிய பெருக்க ர௬ுணைத்‌ இறங்களையும்‌, புராணேதி காசங்களிலுள்ள வினிய சரி தங்களையும்‌, உண்மை காயன்மார்‌ வரலாறுகளையும்‌, வேதாந்த இத்தாந்த சாத்திரக்கருத்துக்களையும்‌, பல நீதிகளையும்‌, அக்கா லத்லுச்‌ சிவகங்கையில்‌ அரசராக விருந்த மருது பாண்டியன்‌ முதலிய மெய்யன்பர்களுடைய திருத்தொண்டின௬மை பெரு பைகளையும்‌ ௮ங்கக்கேயெடுத்துக்கூறுர்தகைமை மிசவும்‌ பாராட்‌ டற்குரியதேயாம்‌.



பாடல் நடை

கரமெது கந்தன் மயூர கிரிக்குத் தொடர்ந்தசரி
சரவணத் திற்கெது வாரி யெதுதிருச் சன்னதிக்கே
யரச வனத்திற் கெதுபட்ட மத்தம்வை யாபுரிக்கே
துரையு மருது துரைசெய் தடாகத்துக் கோர்நெறியே.
(பாடல் - 118)

பாங்கி தலைவற்‌ குடன்போக்‌ குணர்த்தல்‌

அஞ்சப்‌ படைபஞ்‌ சனுப்பிவெஞ்‌ ரூர னணியைவென்றோன்‌
மஞ்சிற்‌ பொலியு மயில்வரை காக்கின்ற மன்னவரே
செஞ்சொற்‌ கிளியையுன்‌ பூங்கா வனத்திற்‌ செறிந்தனன்றாங்,
கொஞ்சத்‌ தனத்துக்குக்‌ கொஞ்சத் தனத்தைக் கொடாரெமரே,


உசாத்துணை


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.