under review

திருவிரிஞ்சைப் புராணம்

From Tamil Wiki
Revision as of 03:59, 14 August 2023 by Tamizhkalai (talk | contribs)
திருவிரிஞ்சை மார்க்கபந்தீஸ்வரர் ஆலயம் நன்றி:மாலைமலர்

திருவிரிஞ்சைப் புராணம் (பொ.யு. 16-ஆம் நூற்றாண்டு) சைவ எல்லப்ப நாவலர் இயற்றிய, வேலூர் மாவட்ட திரிவிரிஞ்சைபுரத்தின் தல மகிமையையும், மார்க்கபந்தீஸ்வரரின் அருளையும் பாடும் நூல்.

ஆசிரியர்

திருவிரிஞ்சைப் புராணத்தை இயற்றியவர் சைவ எல்லப்ப நாவலர்.

நூல் அமைப்பு

தமிழ் இணைய கல்விக் கழகம்

திருவிரிஞ்சைப் புராணம் வேலூர் விரிஞ்சிபுரம் ஸ்ரீ மார்க்கபந்தீசுவரர் ஆலயத்தையு, அங்கு கோவில் கொண்ட மார்க்கப்ந்தீஸ்வரரையும் பாடியது. திருவண்ணாமலையில் ஜோதியாய் நின்ற ஈசனின் திருமுடியைக் கண்டதாக பொய் சொன்ன பிரம்மனுக்கு, சிவபெருமான் சாபமிட்டார். அந்த சாபத்தை நீக்கும் பொருட்டு, பிரம்மதேவன் வழிபட்ட தலம் விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் ஆலயம். பிரம்மனுக்கு விரிஞ்சன் என்ற பெயரும் உண்டு. வணிகனுக்கு வழித்துணையாக வந்து அருள் புரிந்ததால் 'வழித்துணை நாதர்' (மார்க்கபந்தீஸ்வரர்) என்ற பெயர் பெற்றார்.

திருவிரிஞ்சைப் புராணத்தில் பாயிரம் தவிர எட்டு சருக்கங்களில் 370 பாடல்கள் உள்ளன.

  • நைமிசாரணியச் சருக்கம் -தலச்சிறப்பும் , தீர்த்தச்சிறப்பும் கூறப்பட்டுள்ளன.
  • கௌரிபுரி சருக்கம் - பராசக்தி வழிபட்டதால் கௌரிமாபுரம் எனப் பெயர்பெற்ற வரலாறு பாடப்பட்டது.
  • விண்டுபுரி சருக்கம்-விஷ்ணுவால் உண்டாக்கப்பட்ட மாதவத் தீர்த்தத்தின் சிறப்பு
  • கரபுரி சருக்கம்- தலத்தில் வழிபடும்போது செய்யக்கூடியவையும், செய்யக் கூடாதவையும். வழிபாட்டினால் அடையும் பயன்கள்.
  • விரிஞ்சபுரி சருக்கம் -பிரம்மன் மார்க்கபந்தீஸ்வரரை வழிபட்டு மீட்சி பெற்ற வரலாறு
  • வழித்துணை சருக்கம்-மார்க்கபந்தீஸ்வரர் தனபாலன் என்னும் வணிகனுக்கு வழித்துணையாக வந்து காத்த வரலாறு கூறப்படுகிறது
  • பரலோக சருக்கம்-சிவபெருமான் சவித்திரன் என்ற அந்தணனுக்கு கைலாயப் ப்ராப்தி அளித்த வரலாறு கூறப்படுகிறது
  • பாலனுக்குத் திருமுடி வளைந்த சருக்கம்-பூசை செய்த பாலகனுக்காக திருமுழுக்காட்டைத் தன் தலையக் குனிந்து மார்க்கபந்தீஸ்வரர் ஏற்ற வரலாறு கூறப்படுகிறது.
  • என்னும் எட்டு சருக்கங்கள் உள்ளன.

பாடல் நடை

பாலிநதியின் சிறப்பு

முக்தியைக் கொடுக்கும் பாலிநிதியிலே முழுகினார்க்குச்
சித்தியு மெளிதாமிம்மை மறுமையின் வினையுந் தீரு
மத்தகுநிதியினீரால் விளைந்த நெல் லமுதுண்டாருக்
குத்தமரல்லா ரில்லத் துண்ட தீவினையுந் தீரும்”7

வழித்துணை நாதரின் சிறப்பு

அந்திப்போதழகுறவே நடித்தருளும் வழித்துண்வர் அருளுங்கோவை
வந்திப்போர் நினைத்தபடிமயிலேறி அயிலெடுத்து வருஞ்செவி வேளைச்
சந்திப்போம்மலர்சொரிவோம்புகழ்ந்திடுவோம் அவன்கமலத் தாளும் தோளும்
சிந்திப்போம்.ஆதலினால் நமதுபழ வினைகளெல்லாம் சிந்திப்போமே.

உசாத்துணை

திருவிரிஞ்சைப்புராணம், தமிழ் இணைய கல்விக் கழகம்


இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.