under review

சாது லாலா ஆத்மானந்த சுவாமிகள்

From Tamil Wiki
Revision as of 12:01, 13 June 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Added First published date)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
ஆத்மானந்தர்

சாது லாலா ஆத்மானந்த சுவாமிகள்: அருப்புக்கோட்டை அருகே வெள்ளக்கோட்டை அருகே வாழ்ந்த இந்து சித்தர்.

வரலாறு

சாது லாலா ஆத்மானந்த சுவாமிகள் அந்தண குலத்தைச் சேர்ந்தவர். அவருடைய பூர்வாசிரமம் பற்றிச் செய்திகளில்லை. இவர் அருப்புக்கோட்டையில் உள்ள வெள்ளக்கோட்டையை அடுத்துள்ள தும்பைக்குளத்தில் ஒரு மரத்தினடியில் தவம் செய்து வந்தார். இதனைக் கண்ட இப்பகுதி மக்கள் அவரை அழைத்து வந்து, சூரிய புஷ்கரணி என்று அழைக்கப்படும் சொக்கநாதர் ஆலயத் தெப்பக்குளத்தின் கரையில் ஓரு குடிசை அமைத்துத் தங்க வைத்துள்ளனர்.

தொன்மம்

பதிணென் சித்தர்களில் ஒருவரான பாம்பாட்டிச்சித்தர், அருப்புக்கோட்டையை அடுத்துள்ள புலியூரானில் தங்கியிருந்த போது, சித்தநாத குருசாமி அவரிடம் தீட்சை பெற்றுச் சீடராக இருந்தார். சித்தநாத குருசாமியிடம் தீட்சை பெற்று, ஞானயோகப் பயிற்சிகளைக் கடந்தவர் தான் ஆத்மானந்த சுவாமிகள் எனப்படுகிறது

ஒருமுறை நிஷ்டையில் அமர்ந்திருந்த சுவாமிகள் தொடர்ந்து பல நாட்களாகக் கண் விழிக்கவில்லை. இதனை அறிந்த மக்கள், பலர் பலவிதமான கருத்துக்களைக் கூறினர். சுவாமிகள் சமாதி நிலையை அடைந்துவிட்டதாக முடிவு செய்து, குளக்கரையில் சமாதிக் குழியைத் தயார் செய்தனர். அவரது உடலுக்கு அபிஷேகம் செய்வதற்கு முன்னர், திடீரென்று ஒருவர், திடீரென்று சுவாமிகளின் தலையில் தேங்காயை உடைத்தார். உடனே ஆத்மானந்த சுவாமிகள் கண்விழித்து, “ஆண்டவனின் சித்தம், சமாதி செய்துவிடுங்கள்” என்று கூறிவிட்டுச் சமாதியானார் எனப்படுகிறது.

சமாதி

ஐப்பசி மாதம், மூல நட்சத்திரத்தில் ஆத்மானந்தர் சமாதியானார். சமாதிப் பீடத்தின் மீது சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது . அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரத்தில் சொக்கநாதர் ஆலயத்தின் தெப்பக்குளம், சூரிய புஷ்கரணியின் மேற்குக் கரையில் சுவாமிகளின் சித்தபீடம் உள்ளது

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 13:39:16 IST