being created

முகுந்தராஜ் சுப்ரமணியன்

From Tamil Wiki

முகுந்தராஜ் சுப்ரமணியன்

வாழ்க்கைக் குறிப்பு

இவர் நாமக்கல் அருகிலுள்ள சேந்தமங்கலம்என்னும் சிற்றூரில் 1972-ல் பிறந்தவர். தந்தையார் சுப்பிரமணி, தாயார் அமராவதி ஆவர். சேந்தமங்கலத்தில் உள்ள சைனிக்குப் பள்ளியில் படித்தவர். சென்னை விவேகானந்தர் கல்லூரியில் பட்டப்படிப்பை நிறைவு செய்தவர். பின்னர் அண்ணாமலைப்பல்கலைக் கழகத்திற்கு உட்பட்ட எம்.ஐ.டி கல்லூரியில் இளநிலை பொறியியல் பட்டம் பட்டம் பெற்றவர்(1994-97). தற்பொழுது ஆஸ்திரேலியா நாட்டில் பிரிஸ்பேனில் ஒரு தனியார் நிறுவணத்தில் மென்பொருள் பொறியாளராகப் பணிபுரிந்து வருகிறார்.

இலக்கிய வாழ்க்கை

தமிழ் கணிணிக்கு செய்த பங்களிப்புகள்

தமிழா! கணிமைத்திட்டம்

தமிழ் கட்டற்ற மென்பொருள் ஆர்வலர்களை ஒருங்கிணைத்து தமிழருக்குப் பயன்படும் கட்டற்ற மென்பொருட்களை தயாரிக்கும் நோக்கத்துடன் தமிழா திட்டம் ஆரம்பிக்கபட்டது. இதில் ஓரளவிற்கு வெற்றியையும் அடைந்துள்ளார்கள். இதை மலேசியாவிலுள்ள இளஞ்செழியன் என்பவருடன் சேர்ந்து ஆரம்பித்து தற்போது ஒருங்கிணைத்து செயல்படுத்துகிறார்.. தமிழா திட்டத்தின் வலைத்தளம்: http://thamizha.com தமிழா திட்டத்தின் மென்பொருட்களின் மூலநிரல்களை இந்தப் பக்கத்தில் காணலாம்: https://github.com/thamizha

எகலப்பை

விண்டோஸ் கணினிகளில் தமிழில் தட்டச்சிட உதவும் ஒரு கருவி. இதனை கொண்டு அனைத்து விண்டோஸ் செயலிகளிலும் நேரடியாக தமிழ் தட்டச்ச முடியும். இதன் வலைத்தளம்: http://thamizha.com/project/ekalappai

தமிழ் விசை பயர்பாக்ஸ் நீட்சி:

பயர்பாக்சு இணைய உலாவிக்குள் எந்த வலைப்பக்கத்தில் உலாவினாலும் (உதாரணமாக ஜி-மெயில், யாகூமெயில்) அதற்குள் தமிழில் தட்டச்சிட உதவும் பயர்பாக்சு நீட்சி இது. இதனை ஆசிரியர் உருவாக்கியுள்ளார். பிறகு வாய்ஸ் ஆன் விங்க்சு அவர்களால் மேம்படுத்தப்பட்டது. தற்போது இந்த நீட்சியினை கோபி அவர்கள் மேம்படுத்தி பராமரித்து வருகிறார். இதன் வலைத்தளம்: https://addons.mozilla.org/en-US/firefox/addon/tamilvisai-tamilkey/

தமிழா! சொல்திருத்தி பயர்பாக்ஸ் நீட்சி; பயர்பாக்ஸ் உலாவியில் பயன்படுத்த உதவும் தமிழ் சொல்திருத்தி. இதன் உருவாக்கத்தில் இதர பல தமிழார்வலர்களுடன் சேர்ந்து பங்களித்து வருகிறார். இதன் வலைத்தளம்: https://addons.mozilla.org/en-US/firefox/addon/thamizha-solthiruthi/


சமூகத் திட்டங்களில் பங்களிப்பு: தற்போது பிரிஸ்பேனில் தாய்த் தமிழ்ப் பள்ளி குயீன்ஸ்லாந்து என்ற பெயரில் ஒரு வார இறுதி தமிழ்ப்பள்ளியை ஆரம்பித்து இங்குள்ள தமிழ் நண்பர்கள் உதவியுடன் நடத்தி வருகிறார்.http://www.facebook.com/thaai.tamil.school.qld

வலைப்பதிவு:

உசாத்துணை

இணைப்புகள்


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.