being created

பிரளயன்

From Tamil Wiki
Revision as of 04:32, 11 June 2023 by Tamizhkalai (talk | contribs)

பிரளயன்( இயற்பெயர் :சந்திரசேகரன்; பிறப்பு:1960) தமிழ்நாட்டின் நவீன நாடக ஆளுமை, பத்திரிகையாளர், திரைப்பட இயக்குனர். நவீன நாடகம், வீதி நாடகம், குழந்தைகளுக்கான நாடகப் பயிற்சி என நாடகத்துறைக்குப் பல வகைகளில் பங்காற்றுபவர். வீதி நாடகம் என்னும் வடிவத்தின் சாத்தியப்பாடுகளைத் தமிழகமெங்கும் அறியச்செய்தவர்.

பிறப்பு, கல்வி

பிரளயன் திருவண்ணாமலையில் சண்முகசுந்தரம்-கல்யாணசுந்தரி இணையருக்கு மகனாகப் பிறந்தார். தந்தை நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர். உடன்பிறந்தவர்கள் ஒரு சகோதரர் சண்முக அருணாச்சலம், மூன்று சகோதரிகள்.

திருவண்ணாமலையில் பள்ளிக்கல்வியையும், கணிதத்தில் பட்டப்படிப்பையும் முடித்தார்.கல்லூரியில் படித்தபோது தமிழ்மொழிக் கழகம் வாயிலாக நாடகங்களில் நடித்தார். வானவில் பிலிம் சொசைட்டி மூலம் கலை தொடர்பான நடவடிக்கைகளைத் துவங்கியபோது, கல்லூரி ஆசிரியர்களும் அதில் பங்கேற்றிருந்தனர். சர்வதேச படங்களைப் பார்ப்பது, அதை விமர்சனம் செய்வது போன்ற செயல்பாடுகள் இவரின் கலை ஆர்வத்தை வளர்த்தன.

தனி வாழ்க்கை

1981-ல் கணிதத்தில் பட்டப்படிப்பை நிறைவு செய்த பிறகு, சென்னையில் கணினி பயிற்சியை முடித்துவிட்டு இளநிலை பயிற்சியாளராக வேலையில் அமர்ந்தார்.

பிரளயன் மணமானவர். மனைவி ரேவதி, மகன் சிபி.

பயணம் நாடகத்தில் பிரளயன் thehindu.com

கலை வாழ்க்கை

1977-ல் பேராசிரியர் ராமானுஜம் ஏற்பாட்டில் பன்சி கௌல் நடத்திய 70 நாள் நாடகப் பயிலரங்கு, 1979-ல் தஞ்சாவூரில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்திய நாடக விழா. 1980-ல் பாதல் சர்க்கார் சென்னையில் சோழ மண்டலத்தில் நடத்திய நாடகப் பயிலரங்கு.

நவீன நாடக வடிவத்தால் ஈர்க்கப்பட்டு, சென்னைக் கலைக் குழுவை ஆரம்பித்து

என் நாடக வட்டம் பெரிதானது, அதிகாரத்தில் இருக்கிறவர்களையும், மக்கள் மீதான அடக்குமுறை களையும் எதிர்த்த நாடகங்கள் என வரிசையாக என்னுடைய நாடகப் பணி விரியத் துவங்கியது. மக்களாட்சி சகாப்தத்தின், ஜனநாயக வாழ்முறைகளின் கலாசார வெளிப்பாடே இந்த நவீன வீதி நாடகம் என்பது. அதிகாரத்தின் முன் உண்மையை உரக்கச் சொல்ல பல வகைகளில் நாடகங்கள் பயன்பட்டன.   . சாதத் ஹசன் மன்ட்டோ எழுதிய ‘டோபா டேக்சிங்’ கதையை எடுத்து அந்த நாடகத்தைச் செய்தேன். ஸ்ரீநகரில் இடைத்தேர்தல் நடந்த சமயத்தில், ஒரு இளைஞனை மனிதக் கேடயமாகப் பயன்படுத்தி 2017 ஏப்ரலில் ஜீப்பில் கட்டிக்கொண்டுபோன செய்தி பெரிய சர்ச்சையானது. அந்தச் செய்தியைத் தொடர்ந்தபோது ஒரு நாடகமாய் செய்வதற்கான சாத்தியம் தெரிந்தது. ‘டோபா டேக்சிங்’கைப் பயன்படுத்திக்கொண்டேன். தேசம் என்ற கருத்தையே கேள்வி கேட்கும் படைப்பு இது. இன்றைக்குக் கூடுதல் பொருத்தமான நாடகம் அது.



விருதுகள்

புதுவை களம் நாடக இயக்கம் வழங்கிய "நாடகச்சிற்பி" விருது 2006.

Wisdom Magazine  வழங்கிய சிறந்த நாடகாசிரியர் விருது 2007.

News 7 வழங்கிய நாடக ரத்னா விருது 2019iN

மதிப்பிடு

அறிவொளி இயக்க நாடகத் தயாரிப்புகளிலும், அச்செயற்பாட்டிற்காக மாநிலமுழுதும் பல பயிலரங்குகள் நடத்தி பல நாடகக் குழுக்களை உருவாக்குவதிலும் இவரது பங்கு மிகவும் கணிசமானது.

படைப்புகள்

உசாத்துணை

பிரளயன் நேர்காணல்-யாழ்.காம்

பிரளயன் நேர்காணல்-தமிழ்ஹிந்து உரையாடல்-ஷங்கர்ராமசுப்ரமணியன்



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.