being created

வி.கே. ராமசாமி

From Tamil Wiki
Revision as of 09:47, 7 April 2023 by Ramya (talk | contribs)

வி.கே. ராமசாமி (வி.கே.ஆர்) (1926 – டிசம்பர் 24, 2002) நாடக நடிகர், திரைப்பட நடிகர், இயக்குனர், திரைக்கதையாசிரியர், தயாரிப்பாளர்.

வாழ்க்கைக் குறிப்பு

வி.கே. ராமசாமி 1926-ல் பிறந்தார். 1969-ல் நடிகை ரமணியைத் திருமணம் செய்து கொண்டார். அவருக்கு நான்கு மகன்களும் மூன்று மகள்களும் உள்ளனர்.வி.கே.ஆர்.ரகு என்ற மகன் சில படங்களில் நடித்தார்.

நாடக வாழ்க்கை

வி.கே. ராமசாமி ஏழுவயதில் பாய்ஸ் கம்பெனி நாடகக் குழுவில் இணைந்தார். பதினைந்து வருடங்கள் நாடகங்களில் நடித்தார். தியாக உள்ளம் நாடகத்தில் பேங்கர் சண்முகம் பிள்ளை என்ற அறுபது வயது ஆளாக நடித்தார்.

திரை வாழ்க்கை

1940களில் பாய்ஸ் கம்பெனி நாடகக் குழுவிலிருந்து திரையுலகிற்குள் நுழைந்தார். 1947-ல் தியாக உள்ளம் நாடகtஹ்தை’நாம் இருவர்’ என்ற திரைப்படத்தில் அறுபது வயது வயோதிகனாக நடித்தார். ஐம்பது ஆண்டு திரைவாழ்வில் 500-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். பதினைந்து திரைப்படங்களை தயாரித்தார். அவரது கடைசிப் படம் டும் டும் டும்.

“தியாக உள்ளம்” நாடகத்திலே பேங்கர் சண்முகம் பிள்ளைங்கிற 60 வயசுக்காரர் வேடம் பண்ணினேன். அப்போ எனக்கு வயசு 15. ஏ .வி.எம் செட்டியாரு அந்த நாடகத்த பாத்தாரு.அதையே ‘நாம் இருவர்’ படமா எடுக்கச்சே எனக்கே அந்த வேஷத்தை கொடுத்துட்டாரு. அதுதான் என் முதல் படம். அதுக்கப்பறம் எக்கச்சக்கமான படங்களிலே அப்பாவாகவே நடிச்சுட்டேன்.

பாகவதர், சின்னப்பா, மஹாலிங்கம், எம்.ஜி.ஆர்.சிவாஜி கணேசன் இப்போ புதுசு புதுசா வறவங்க அத்தனை தலைமுறையிலயும் நடிச்சு, நடிச்சுட்டு இருக்குற ஒரே ஆசாமி நான் ஒருத்தன்தான்.

நான் வாழ்க்கையில செட்டில் ஆனது 1969 ல தான்.அதாவது என்னோட என் சம்சாரம் ரமணி இணைஞ்சதுக்கு அப்புறம்தான் எனக்கு உண்மையான வாழ்க்கை ஆரம்பமாச்சு.


கலை வாழ்க்கை

விருது

  • வி.கே. ராமசாமி 1970-ல் தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றார்.

இவரைப்பற்றிய நூல்கள்

  • எனது கலைப்பயணம் (நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்)

உசாத்துணை


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.