being created

வீணை தனம்மாள்

From Tamil Wiki

வீணை தனம்மாள் (1868 - அக்டோபர் 15, 1938) வீணைக் கலைஞர். இவர் பாட்டிலும் நடனத்திலும் சிறந்து விளங்கியவர்.

வாழ்க்கைக் குறிப்பு

வீணை தனம்மாள் தஞ்சாவூரில் சுந்தரம்மாளுக்கு மகளாக 1867-ல் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் நாராயணசாமி(வயலின் கலைஞர்), குட்டி(கடம் கலைஞர்), அப்பாக்கண்ணு(வயலின் கலைஞர்), ரூபாவதி. தங்கை ரூபாவதி நடனம், இசைக்கலைஞர். சென்னை ஜார்ஜ் டெளனில் வசித்தார். இசைவேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர். வீணை தனம்மாளின் முன்னோர் தஞ்சை மராட்டியர்களுடைய அரசவைக் கலைஞர்களாக இருந்தவர்கள். இவரது மூதாதையர்களில் ஒருவரான பாப்பம்மாள் தஞ்சை அரசவையின் இசைக் கலைஞர், நடனக் கலைஞர். இவரின் பாட்டி காமாட்சி நடனக்கலைஞர். தாய் வாய்ப்பாட்டுக்கலைஞர். தாய் ஷியாமா சாஸ்திரியின் மகனான சுப்பராய சாஸ்திரியிடம் பாடல் கற்றார். வீணை தனம்மாளின் மகள் லட்சுமி ரத்னம், பேரன் சிர்கா. தஞ்சாவூர் பாலசரஸ்வதி, பிருந்தா, முக்தா போன்றோர் வீணை தனம்மாளின் வழிவந்தவர்கள்.

தன் குடும்பத்தினரிடமிருந்து இசை கற்ற தனம்மாள், பார்வைக்குறைபாடு உள்ள வாலாஜாபேட்டை பாலகிருஷ்ணதாஸிடமும், சாத்தனூர் பஞ்சநாத ஐயரிடமும் இசை கற்றார்.

இசை வாழ்க்கை

அம்மாவிடமும் பாட்டியிடமும் வீணை கற்றார். அழகச்சிங்கரையாதன், தம்பியப்பபிள்ளை தீட்சிதர், முத்தையால்பேட்டை தியாகய்யர் ஆகியோரிடம் இசை கற்றார்.

மாணவர்கள்
  • டி. பிருந்தா
  • டி. முக்தா
  • நாயினாப் பிள்ளை

உசாத்துணை


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.