under review

சபாபதி நாவலர்: Difference between revisions

From Tamil Wiki
(Created page with "சபாபதி நாவலர் (1846 - 1903) இலங்கை தமிழ், சைவ அறிஞர். ஈழத்து சிற்றிலக்கியப் புலவர், ஆசிரியர், இதழாளர், மொழிபெயர்ப்பாளர், சொற்பொழிவாளர் என பன்முகம் கொண்டவர். தமிழகத்திலும், இலங்கையிலும்...")
 
Line 29: Line 29:
சைவ சமய வளர்ச்சியின் பொருட்டும் தமிழ்மொழி வளர்ச்சியின் பொருட்டும் பல சொற்பொழிவுகள் செய்தார். திருமயிலை, திருவொற்றியூர், கந்தகோட்டம் முதலிய இடங்களில் சைவ சமயச் சொற்பொழிவுகள் செய்தார். திருவாவடுதுறை பேரவையில் சொற்பொழிவு ஆற்றச் செய்து, சுப்பிரமணிய தேசிகர், இவருக்கு 'நாவலர்' பட்டம் வழங்கினார்.

== மறைவு ==
== இறுதிக்காலம் ==
இறுதிக் காலத்தில் நாவலர் சிதம்பரத்தில தங்கிருத்தார். அங்கும் சைவ சமயச் சொற்பொழிவுகள் பல செய்தார். பிறகு திருத்தில்லையில் தங்கிருந்தபோது, 1903ஆம் ஆண்டில், தமது ஐம்பத்தெட்டாவது அகவையில் இயற்கை எய்தினார்.
தன் இறுதிக் காலத்தில் நாவலர் சிதம்பரத்தில தங்கியிருந்து சைவ சமயச் சொற்பொழிவுகள் செய்தார். 1903-ல் திருத்தில்லையில் ஐம்பத்தெட்டாவது வயதில் காலமானார்.

== நூல்கள் பட்டியல் ==
== நூல்கள் பட்டியல் ==

Revision as of 05:41, 12 February 2022

சபாபதி நாவலர் (1846 - 1903) இலங்கை தமிழ், சைவ அறிஞர். ஈழத்து சிற்றிலக்கியப் புலவர், ஆசிரியர், இதழாளர், மொழிபெயர்ப்பாளர், சொற்பொழிவாளர் என பன்முகம் கொண்டவர். தமிழகத்திலும், இலங்கையிலும் பயணம் செய்து ஆற்றிய சைவச் சொற்பொழிவுகள் முக்கியமான சைவ சமயப் பங்களிப்பாகும்.

வாழ்க்கைக் குறிப்பு

இலங்கை யாழ்ப்பாணத்தில், வடகோவை என்னும் ஊரில் 1846-ல் சுயம்புநாதப் பிள்ளைக்கும் தெய்வயானைக்கும் மகனாக சபாபதி பிறந்தார்.

ஆரம்பகால பள்ளிக் கல்விக்குப் பின், பிரம்மஸ்ரீ ஜெகந்நாதையர், நீர்வேலி சிவசங்கர பண்டிதரிடம் வடமொழியையும் தமிழையும் கற்றார். என்பவரிடம் தமிழையும், வடமொழியையும் கற்றார். அக்கால வழக்கப்படி ஆங்கிலத்தையும் கற்றார்.

ஆசிரியப்பணி

ஆறுமுக நாவலர் சிதம்பரத்தில் நிறுவிய சைவபிரகாச வித்தியாசாலையில், தலைமை ஆசிரியராக சபாபதியை நியமித்தார். சொல்வன்மை மிக்கவர்.

மாணவர்கள்

  • சிதம்பரம் அ. சோமசுந்தர முதலியார்
  • விழுப்புரம் இராமசாமி பிள்ளை
  • மாகறல் கார்த்திகேய முதலியார்
  • மயிலை சு. சிங்காரவேலு முதலியார்
  • மாவை விசுவநாத பிள்ளை
  • சிதம்பரம் சிவராமச் செட்டியார்
  • திருமயிலை பாலசுந்தர முதலியார்
  • கழிபுரம் சிப்பிரகாச பண்டிதர்

சைவப்பணி

திருவாவடுதுறையில் பதினாறாம் பட்டத்து ஆசிரியராக இருந்த சுப்பிரமணிய தேசிகரிடம் அருளுரை பெற்று பன்னிரண்டு ஆண்டுகள், அறிவு நூல்கள், இலக்கிய, இலக்கணங்கள், வேதாந்த சித்தாந்த நூல்களைக் கற்றார். "மாபாடியம்" என்று புகழப்படும் சிவஞானபோதம் என்ற சிறந்த சைவ சித்தாந்த நூலை தேசிகர் சபாபதிக்கு அளித்து கற்கச் செய்தார். இராமநாதபுரத்துச் சேதுமன்னர் பாஸ்கர சேதுபதியின் வேண்டுதலின் பேரில் இராமநாதபுரம் சென்று சைவப்பணி செய்தார். உத்தரகோசமங்கையில் வேத நெறி தழைத் தோங்க என்னும் பெரியபுராணச் செய்யுள் அடியைத் தலைப்பாகக் கொண்டு சொற்பொழிவு ஆற்றினார். திருச்செந்தூர், தூத்துக்குடி, திருக்குற்றாலம் ஆகிய இடங்களிலும் சைவச் சொற்பொழிவு செய்தார்.

இலக்கிய வாழ்க்கை

சென்னையில் அச்சகம் ஒன்றை நிறுவி, அதிலிருந்து ஞானாமிர்தம் என்னும் இதழை வெளியிட்டார். 1895-ல் "ஏம சபாநாத மான்மியம்" என்னும் வடமொழி நூலைத் தமிழில் மொழிபெயர்த்துச் சிதம்பரம் சபாநாத புராணம் என்னும் பெயரில் 893 செய்யுட்கள் கொண்ட நூலாக வெளியிட்டார். 168 செய்யுட்களாலான, ஏசு மத நிராகரணம் என்ற நூல் எழுதி, கிறிஸ்துவக் கொள்கைகளை மறுத்தார். சென்னையில் அச்சகம் ஒன்றை நிறுவி, அதிலிருந்து ஞானாமிர்தம் என்னும் இதழை வெளியிட்டார்.

சொற்பொழிவுகள்

சைவ சமய வளர்ச்சியின் பொருட்டும் தமிழ்மொழி வளர்ச்சியின் பொருட்டும் பல சொற்பொழிவுகள் செய்தார். திருமயிலை, திருவொற்றியூர், கந்தகோட்டம் முதலிய இடங்களில் சைவ சமயச் சொற்பொழிவுகள் செய்தார். திருவாவடுதுறை பேரவையில் சொற்பொழிவு ஆற்றச் செய்து, சுப்பிரமணிய தேசிகர், இவருக்கு 'நாவலர்' பட்டம் வழங்கினார்.

இறுதிக்காலம்

தன் இறுதிக் காலத்தில் நாவலர் சிதம்பரத்தில தங்கியிருந்து சைவ சமயச் சொற்பொழிவுகள் செய்தார். 1903-ல் திருத்தில்லையில் ஐம்பத்தெட்டாவது வயதில் காலமானார்.

நூல்கள் பட்டியல்

அந்தாதி
  • திருச்சிற்றம்பலயமக அந்தாதி
  • திருவிடைமருதூர் பதிற்றுப்பத்தந்தாதி
  • மாவை அந்தாதி
அமிருதம்
  • சிவகர்ணாமிர்தம்
மாலை
  • வடகோவைச் செல்வ விநாயகர் இரட்டை மணிமாலை
நிராகரணம்
  • ஏசுமத சங்கற்ப நிராகரணம்
பதிகம்
  • நல்லை சுப்பிரமணியக் கடவுள் பதிகம்
  • வதரிநகர்த் தண்டபாணிக் கடவுள் பதிகம்
  • புறவார் பனங்காட்டூர்ப் புறவம்மை பதிகம்
புராணம்
  • சிதம்பர சபாநாதர் புராணம்
பிரகாசிகை
  • திராவிடப் பிரகாசிகை
சங்கிரகம்
  • பாரத தார்ப்பரிய சங்கிரகம்
பிற
  • ஏசு மத நிராகரணம்
  • ஞான சூடாமணி
மொழிபெயர்ப்பு
  • சிதம்பர சபாநாத புராணம்
  • ஏம சபாநாத மான்மியம்
  • பாரத தாற்பரிய சங்கிரகம்
  • இராமாயண தாற்பரிய சங்கிரகம்
  • சிவகர்ணாமிர்தம்

உசாத்துணை

Ready for review

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.