under review

சிவகுமார் முத்தய்யா: Difference between revisions

From Tamil Wiki
(Category:எழுத்தாளர்கள் சேர்க்கப்பட்டது)
No edit summary
Line 30: Line 30:
*[https://www.vikatan.com/arts/literature/131561-short-story நெல்வயல்களுக்கு அப்பால்: சிவகுமார் முத்தய்யா: விகடன்]
*[https://www.vikatan.com/arts/literature/131561-short-story நெல்வயல்களுக்கு அப்பால்: சிவகுமார் முத்தய்யா: விகடன்]
*[http://www.keetru.com/index.php/2018-01-12-07-40-42/2019-10-21-04-18-03/12111-2020-05-19-03-44-26 மாற்றுப்பாதை - சிவகுமார் முத்தய்யா: கீற்று]
*[http://www.keetru.com/index.php/2018-01-12-07-40-42/2019-10-21-04-18-03/12111-2020-05-19-03-44-26 மாற்றுப்பாதை - சிவகுமார் முத்தய்யா: கீற்று]
{{First review completed}}
{{Finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:எழுத்தாளர்கள்]]
[[Category:எழுத்தாளர்கள்]]

Revision as of 18:37, 13 March 2023

சிவக்குமார் முத்தய்யா

சிவகுமார் முத்தய்யா (பிறப்பு: ஜூலை 3, 1978) தமிழில் எழுதி வரும் எழுத்தாளர். பத்திரிக்கையாளர்.

வாழ்க்கைக் குறிப்பு

திருவாரூர் விளமல் தண்டலையில் மாணிக்கம், லோகம்பாள் இணையருக்கு இரண்டாவது மகனாக ஜூலை 3, 1978-ல் பிறந்தார். இளநிலை தமிழ் பட்டம், கூட்டுறவுபட்டயம், கணினிபட்டயம் பெற்றார். மனைவி ராஜலெட்சுமி, மகன் சேகுவேரா மகள் தமிழினி. திருவாரூர் அருகே தாழைக்குடி என்ற ஊரில் வசித்து வருகிறார்.

இதழியல்

2006-ல் தொடங்கி பதினாறு ஆண்டுகள் நாளிதழில் பகுதி நேர நிருபராக பணியாற்றி வருகிறார். மாலை தினசரி இதழில் துணை ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

இலக்கிய வாழ்க்கை

திருவாரில் ’வண்டல் இலக்கிய வட்டம்’ மூலமாக மாதம் இருமுறை, தமிழ் இலக்கியங்கள் குறித்து கூட்டங்களை நடத்தி வருகிறார். தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்ட விவசாயிகள், எளிய மக்களின் வாழ்க்கையை எழுத்தில் பதிவு செய்வகிறார். காப்ரியேல் மார்க்வேஸ், லியோ டால்ஸ்டாய். தாஸ்தவஸ்கி, சதத்ஹசன் மண்டோ, முகம்மது பஷீர் ஆகியோரை ஆதர்ச எழுத்தாளர்களாகக் குறிப்பிடுகிறார்.

விருதுகள்

  • கல்கிவார இதழ் சிறுகதைப்போட்டியில் முதல் பரிசு
  • அனைத்திய தமிழ் எழுத்தாளர்கள் சங்க கதைப்போட்டியில் முதல்பரிசு
  • கலை இலக்கிய, பெருமன்றத்தின் சிறந்த சிறுகதைத் தொகுப்புக்கான பரிசு
  • போடிமாலன் சிறுகதைபோட்டியில் முதல் பரிசு
  • 2016-ல் கணையாழி மாதஇதழ் வழங்கிய சிறந்த சிறுகதை எழுத்தாளருக்கான ஜெயகாந்தன்விருது
  • திருப்பூர் கனவு இலக்கிய விருது
  • பிறம்பு தமிழ்ச்சங்க சிறுகதையாளர் விருது

நூல்கள்

சிறுகதைதொகுப்பு
  • செறவிகளின் வருகை
  • செங்குருதியில் உறங்கும் இசை
  • கிளிகள் வரும்போது
  • இளையராஜாவின் காதலிகள்
பிற
  • ஆற்றோரக் கிராமம் (குறுநாவல்கள்)
  • நினைவுகளின் நாட்குறிப்பு (கட்டுரை)
  • தூண்டில் முள்வளைவுகள் (குறுநாவல்கள்தொகுப்பு 2022)

இணைப்புகள்


✅Finalised Page