சீயமங்கலம் குடைவரைக்கோயில்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 5: Line 5:
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வட்டம் சீயமங்கலம் என்னும் சிற்றூரில் அமைந்துள்ளது. வேலூரிலிருந்து செல்ல சேத்துப்பட்டு வழியாக தேசூர் அடைந்தவுடன் 2 கி.மீ. தொலைவில் சீயமங்கலம் உள்ளது.பல்லவ மன்னன் மகேந்திரவர்மனின் தந்தை சிம்மவிஷ்ணுவின் நினைவாக வைக்கப்பட்ட சிம்மவிஷ்ணு சதுர்வேதிமங்கலம் சீயமங்கலமாக மருவி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. முதலாம் நரசிம்மவர்ம பல்லவனின் நினைவாக வைக்கப்பட்ட சிம்மமங்கலம் சீயமங்கலமாக மருவி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=1191
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வட்டத்தில் சீயமங்கலம் எனும் ஊர் உள்ளது. வந்தவாசியிலிருந்து 23 கி.மீ. தொலைவில் இவ்வூர் அமைந்துள்ளது. இவ்வூரில் பல்லவர் கால குடைவரைக் கோயில் ஒன்றுள்ளது. இக்குடைவரை முதலாம் மகேந்திரவர்ம பல்லவர் காலத்தில் குடையப்பட்டதாகும். அதனால் இக்குடவரையின் காலம் கி.பி. 7 ஆம் நூற்றாண்டாகும்.

https://patrikai.com/details-of-seeyamangalam-cave-temple/#
குடவரையின் கருவறை மண்டபம் முகப்பில் தெற்குப் பகுதியில் உள்ள தூணில் முதலாம் மகேந்திரவர்மரின் கிரந்தக் கல்வெட்டுள்ளது. அக்கல்வெட்டில் லலிதாங்குரன் எனும் மன்னர் “அவனி பாஜன பல்லவேசுவரம்” எனும் பெயருடைய இக்கோயில் கட்டப்பட்டதாகக் கூறுகிறது. மேலும் நற்செயல் என்கிற புண்ணிய இரத்தினங்களால் ஆன ஆபரணப் பெட்டி என்றும் இக்கோயிலைப் புகழ்ந்துரைக்கிறது. லலிதாங்குரன் என்பது முதலாம் மகேந்திரவர்மரின் சிறப்புப் பெயரில் ஒன்றே.

[https://munnurramesh.wordpress.com/2020/06/25/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81/ சீயமங்கலம்- ரமேஷ்/]
இக்குடைவரையில் அர்த்தமண்டபம், முன்மண்டபம், திருச்சுற்று மாளிகை, மகாமண்டபம் ஆகியவைகள் காணப்படுகின்றது. இக்கோயிலின் முகமண்டபம் ஊற்றுக்காட்டுக் கோட்டத்து பெரும்பாலை எனும் ஊர் அருகே உள்ள திருப்பாலையூரின் தலைவர் அடைவி என்பவர் பல்லவரசின் சிற்றரசர் கங்கரையர் நேர்குட்டி என்பவரிடம் அனுமதி பெற்று தன் தாயார் நங்கனி நங்கையார் அவர்களின் நினைவாகக் கட்டியதாகக் மூன்றாம் நந்திவர்மரின் மூன்றாவது ஆட்சியாண்டுக் கல்வெட்டுக் கூறுகிறது.
 
இக்கோயிலின் மகாமண்டப தென்மேற்குத் துணை சூடாமணி சோழமாராயன் என்பவரின் மகன் தடாமயன் என்பவரின் மனைவி குந்தக்க மாதேவி என்பவர் செய்தளித்துள்ளார். அதே போல் முதலாம் பராந்தக சோழர் காலத்தில் செறு முக்கரையர் சேதன் கொண்டி அரையர் என்பவரின் மகன் பொரிமையன் என்பவர் திருச்சுற்று மாளிகையில் உள்ள தென்கிழக்குத் தூணை எடுத்துள்ளார். இவரது மனைவி ஜல்லவை என்பவர் திருச்சுற்று முன்மண்டபத்தூணை செய்துள்ளார். இக்கோயிலின் வடக்கு திருச்சுற்று மாளிகை எடுப்பித்தவர் குலோத்துங்கசோழ சம்புவராயர் ஆவார்.
 
விருப்பண்ண உடையார் என்ற விசயநகர மன்னரின் ஆட்சியில் தான்தோன்றிசுரமுடையான் தன்மதியர் என்ற துறவி இக்கோயிலில் திருச்சுற்றுமாளிகை எடுப்பித்து சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகியோர் உருவச்சிலைகளையும் எடுத்துள்ளார். இக்கோயில் திருநிலை வாசல் “மன்னன் கலிங்கத்தரையன் திருவாசல்” என்றுள்ளது. இம்மன்னரின் பெயரில் கோயிலின் நுழைவு வாயில் கட்டப்பட்டு அதற்கு அவரதுப பெயரே வைக்கப்பட்டுள்ளது.
 
சோழர்கள் காலத்தில் இவ்வூர் பல்குன்றக் கோட்டத்தில் தென்னாற்றூர் நாட்டு சீயமங்கலம் என்றும் இறைவன் “திருக்கற்றளி மகாதேவர்” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளார். இராஷ்டிரக்கூட மன்னரான கன்னரதேவரின் மகள் அக்கயதேவி என்பவர் இப்பகுதியின் நிர்வாகத்தினை மேற்கொண்டிருந்ததாக இம்மன்னரின் கல்வெட்டு கூறுகிறது.
 
பிற்கால சோழர்கள் காலத்தில் சீயமங்கலம் குலோத்துங்கசோழ நல்லூர் என்றும் இறைவன் ” உடையார் தூணாண்டார்” என்றும் இக்கோயில் தூணாண்டார் கோயில் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கோயிலுக்கு சோழர்கள், இராஷ்டிரக்கூடர், பிற்கால பாண்டியர்கள், விசயநகர அரசர்கள் காலத்தில் தானங்கள் நிறைய வழங்கப்பட்டுள்ளதை இங்குள்ள கல்வெட்டுகள் மூலம் அறியமுடிகிறது.
 
இக்கோயிலின் தனிச்சிறப்பு பல்லவர் காலத்திய நடராஜர் சிற்பமே. தமிழகத்தில் எங்கும் காணாத வடிவத்தில் ஆதி நடராஜராக செதுக்கப்பட்டுள்ளது தனிச்சிறப்பு.
 
இக்குடைவரைக்கு முன்னுள்ள ஏரியின் நடுவில் தூண்போன்ற அமைப்பில் நிலைக்குத்தாகப் பாறைகள் காணப்படுவதால், இக்குடைவரைக் கோயிலில் உள்ள இறைவனை வடமொழியில் "ஸ்தம்பேஸ்வரர்" எனவும் தமிழில் "தூணாண்டவர்" என்றும் அழைப்பதுண்டு.
 
இக்குடைவரையில் காணப்படும் கல்வெட்டு இக்கோயில் அக்காலத்தில் "அவனிபாஜன பல்லவேஸ்வரம்" என அழைக்கப்பட்டதைக் காட்டுகின்றன. இக்கோயில் பல்லவர் காலத்தில் அமைக்கப்பட்டபோதிலும், பிற்காலத்திலும் பல்வேறு கால கட்டங்களில் இதில் விரிவாக்க வேலைகள் இடம்பெற்றுள்ளன.
 
இதில் உள்ள மண்டபத்தில் இரண்டு வரிசைகளில், வரிசைக்கு இரண்டு முழுத்தூண்களும், பக்கச் சுவர்களை அண்டி இரண்டு அரைத்தூண்களும் காணப்படுகின்றன. தூண்களின் கீழ்ப் பாகமும் மேல் பாகமும் சதுர வெட்டுமுகம் கொண்டவை. நடுப்பகுதி எட்டுப் பட்டை வடிவம் கொண்டது.
 
உட்தூண்களின் சதுரப் பக்கங்களில் தாமரைச் சிற்பங்கள் அமைந்திருக்க, முகப்புத் தூண்களின் சதுரங்களில் சிறப்பு அம்சங்களோடு கூடிய பல்வேறு சிற்பங்கள் காணப்படுகின்றன. மண்டப முகப்பில் இரண்டு அரைத்தூண்களுக்கும் அப்பால் போர் வீரர்களின் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. பின்புறச் சுவரில் ஒரேயொரு கருவறை குடையப்பட்டுள்ளது. கருவறை வாயிலின் இருபுறமும் வாயிற் காவலர் புடைப்புச் சிற்பங்கள் உள்ளன.
 
== உசாத்துணை ==
 
* http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=1191
* https://patrikai.com/details-of-seeyamangalam-cave-temple/#
* [https://munnurramesh.wordpress.com/2020/06/25/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81/ சீயமங்கலம்- ரமேஷ்/]
* https://youtu.be/mDv1Z-J4pEI
* [https://www.dinamani.com/tamilnadu/2019/nov/13/%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-1500-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-3278187.html சீயமங்கலம் நடுகற்கள்]

Revision as of 18:22, 11 February 2022

சீயமங்கலம் குடைவரை (பொயு 7-8 ஆம் நூற்றாண்டு) இது திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ள குடைவரை கோயில். முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் உருவாக்கியது.அவனிபாஜன பல்லவேஸ்வரம் என்று இதன் பழைய பெயர். இதன் அருகே சீயமங்கலம் ஜினப்பள்ளி அமைந்துள்ளது.

இடம்

உசாத்துணை