under review

செல்வேந்திரன்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
(Incorrect stage template removed)
Line 1: Line 1:
{{being created}}
[[File:Selventhiran.jpg|thumb|செல்வேந்திரன்]]
[[File:Selventhiran.jpg|thumb|செல்வேந்திரன்]]
{{Read English|Name of target article=Selventhiran|Title of target article=Selventhiran}}  
{{Read English|Name of target article=Selventhiran|Title of target article=Selventhiran}}  
செல்வேந்திரன் (22.08.1982) தமிழில் எழுதிவரும் எழுத்தாளர், கட்டுரையாளர் மற்றும் சொற்பொழிவாளர். இதழியலாளராக பணிபுரிந்தவர் தற்போது ஊடக ஒருங்கிணைப்பாளராக இருக்கிறார்.  
செல்வேந்திரன் (22.08.1982) தமிழில் எழுதிவரும் எழுத்தாளர், கட்டுரையாளர் மற்றும் சொற்பொழிவாளர். இதழியலாளராக பணிபுரிந்தவர் தற்போது ஊடக ஒருங்கிணைப்பாளராக இருக்கிறார்.  



Revision as of 13:04, 11 February 2022

செல்வேந்திரன்

To read the article in English: Selventhiran. ‎

செல்வேந்திரன் (22.08.1982) தமிழில் எழுதிவரும் எழுத்தாளர், கட்டுரையாளர் மற்றும் சொற்பொழிவாளர். இதழியலாளராக பணிபுரிந்தவர் தற்போது ஊடக ஒருங்கிணைப்பாளராக இருக்கிறார்.

தனிவாழ்க்கை

செல்வேந்திரன் ஆகஸ்ட் மாதம் 22, 1982 தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சாத்தான்குளத்தில் பிறந்தார். கதிரேசன் மற்றும் மெர்ஸி பாப்பா தம்பதியினருக்கு கடைசி மகன். உடன் பிறந்தவர்கள் இரண்டு அண்ணன்கள் மற்றும் இரண்டு அக்காக்கள். சாத்தான்குளம் தூய இருதய ஆண்கள் பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை பயின்றார். பின்னர் குடும்பச் சூழல் காரணமாக பள்ளிப்படிப்பு பாதியில் தடைபட்டது. அப்பாவின் தீப்பெட்டி ஆபீசில் வேலை பார்த்தார். அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் தொடர்கல்வி திட்டத்தில் இளங்கலை அரசியல் அறிவியலில் தேர்ச்சி பெற்றார். மனைவி திருக்குறளரசி. பிள்ளைகள் இளவெயினி மற்றும் இளம்பிறை.

இலக்கிய வாழ்க்கை

2004-2008 வரை ஆனந்த விகடனின் சர்குலேஷன் பிரிவிலும், 2009-2020 வரை தி ஹிண்டு (ஆங்கில நாளிதழ்) விற்பனை மற்றும் விநியோகப் பிரிவில் பணியாற்றினார். இந்த கால கட்டங்களில் அரசியல், சமூகம், இலக்கியம் சார்ந்த கட்டுரைகளை எழுதியிருக்கிறார். இளமை காலத்தில் ”செம்புலம்” எனும் கையெழுத்துப் பிரதியை நடத்தினார். ஆனந்த விகடன், தி ஹிந்து தமிழ் போன்ற இதழ்களில் கட்டுரைகள் எழுதினார்.

விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவர்.. திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு திரைக்கதை, வசனங்கள் எழுதுகிறார். அர்த்தமண்டபம் என்ற நிறுவனத்தின் மூலம் இலக்கியம், வணிகம், சினிமா மற்றும் பிற துறைகளில் சாதித்தவர்களுக்கு தன்வரலாற்று நூல்கள் வெளிவர உதவுகிறார். வாசிப்பு, இலக்கியம் மற்றும் விற்பனை குறித்த பல உரைகளை ஆற்றி வருகிறார்.

ஆவணப்படம்

  • அஜிதனுடன் இணைந்து எழுத்தாளர் ஜெயமோகனுக்கான “நீர், நிலம், நெருப்பு” ஆவணப்படத்தைக் கொணர்ந்தார்.
  • வண்ணதாசனுக்காக “நதியின் பாடல்” எனும் ஆவணப்படத்தை இயக்கினார்.

அரசியல் செயல்பாடுகள்

அரசியல் கட்சிகளுக்கு அரசியல் வியூக அலோசகராக செயல்பட்டு வருகிறார்.

அமைப்புச் செயல்பாடுகள்

கோவையில் மொழிபெயர்ப்பாளர் நரேனுடன் இணைந்து சொல்முகம் என்ற வாசகர் வட்டத்தை உருவாக்கி மாதக் கூடுகைகள் நடத்தி வருகிறார். இதில் தமிழ் இலக்கியத்தின் முக்கியமான படைப்புகள் மற்றும் எழுத்தாளர்களைப் பற்றிய கலந்துரையாடல் நடைபெறுகிறது.

இலக்கிய இடம்

மெல்லிய கேலியும் பகடியும்கொண்ட நடையில் பயணக்கட்டுரைகள், தன்முன்னேற்றக் கட்டுரைகள் மற்றும் சமூகஆய்வுக்கட்டுரைகளை எழுதிவருபவர் செல்வேந்திரன். இவர் எழுதிய வாசிப்பது எப்படி என்னும் நூல் வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்துவதற்கான வழிமுறைகளை ஒரு தமிழ் இலக்கிய வாசகராக அதிலிருந்து பெற்ற அனுபவத்தின் வாயிலாகக் கண்டடைந்தவற்றைப் பகிர்ந்து கொள்வது. பாலை நிலப்பயணம் எழுத்தாளர் ஜெயமோகன் மற்றும் பன்னிரெண்டு நண்பர்களுடன் ராஜஸ்தான் ஜெய்பூரிலிருந்து குஜராத் கட்ச் வரையான பயணத்தைப் பற்றிய ஒரு பயணியின் குறிப்புகள் அடங்கிய நூல். பாலைப்பயணமும், அதன் பண்பாடு, கலாச்சாரம் மற்றும் வரலாற்றுக் குறிப்புகளும் உள்ளடங்கியது.

படைப்புகள்

  • வாசிப்பது எப்படி – ஜூலை 2020
  • பாலை நிலப்பயணம் – ஜூலை 2020
  • நகுமோ லே பயலே – ஆகஸ்ட் 2020
  • உறைப்புளி – ஏப்ரல் 2020

மொழிபெயர்க்கப்பட்டவை

  • How to Read – ஆங்கிலம்

இணைப்புகள்



Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.