உ. கந்தசாமி முதலியார்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 1: Line 1:
சி.கந்தசாமி முதலியார் (மறைவு 1891) சைவத் தமிழறிஞர். கோவையில் வழக்கறிஞராகப் பணியாற்றினார். சைவ அறிஞரான சி.கே.சுப்ரமணிய முதலியாரின் தந்தை.  
சி.கந்தசாமி முதலியார் (மறைவு 1890) சைவத் தமிழறிஞர். கோவையில் வழக்கறிஞராகப் பணியாற்றினார். சைவ அறிஞரான சி.கே.சுப்ரமணிய முதலியாரின் தந்தை.  


== வாழ்க்கை ==
== வாழ்க்கை ==

Revision as of 17:42, 27 January 2023

சி.கந்தசாமி முதலியார் (மறைவு 1890) சைவத் தமிழறிஞர். கோவையில் வழக்கறிஞராகப் பணியாற்றினார். சைவ அறிஞரான சி.கே.சுப்ரமணிய முதலியாரின் தந்தை.

வாழ்க்கை

கோயம்புத்தூருக்கு தொண்டைமண்டலம் மாங்காட்டிலிருந்து குடியேறிய கொண்டல்கட்டி குடிநெல்விளையார் மரபைச் சேர்ந்தவர் கந்தசாமி முதலியார். கோவையில் வழக்கறிஞராகப் பணியாற்றினார். இவர் மனைவி வரிவம்மாள். இவர் மகன் சைவ அறிஞரான சி.கே. சுப்பிரமணிய முதலியார்

பணிகள்

கந்தசாமி முதலியார் இலங்கை ஆறுமுகநாவலரின் மாணவர். 1866ல் கோவையில் சைவப்பிரசங்க சாலையை உருவாக்கியவர். தமிழில் சிற்றிலக்கியங்களும் புராணங்களும் எழுதினார்.

நூல்கள்

  • பேருர் புராணம்,
  • ஶ்ரீ சுப்ரமணியர் திருவிரட்டைமாலை
  • வெள்ளை வினாயகர் பதிகம்
  • பச்சைநாயகி பிள்ளைத்தமிழ்
  • திருக்கொடுமுடி புராணம்

உசாத்துணை