first review completed

பிரவாகினி: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
Line 13: Line 13:

== உள்ளடக்கம் ==
== உள்ளடக்கம் ==
பிரவாகினி பெண்கள் கல்வி ஆய்வு செயல் திட்டங்கள், பெண்கள் கல்வி ஆய்வு நிறுவன வெளியீடுகள், வெளிவர இருக்கும் நூல்கள், பெண்களுக்கான விளக்கங்கள், சிறு செய்திகள் அடங்கலாக இந்த இதழ் வெளியாகிறது. பெண்களின் நிலை பற்றி ஆய்வு, பால் வேறுபாடு காட்டுவதால் வரும் விளைவுகள், பெண் விடுதலை, பெண்களுக்கான பிரச்சனைகள், பெண்களுக்கான திட்டங்கள் பற்றிய செய்திகள் போன்றவற்றை உள்ளடக்கிய விழிப்புணர்வு இதழ்.
பிரவாகினி பெண்கள் கல்வி ஆய்வு செயல் திட்டங்கள், பெண்கள் கல்வி ஆய்வு நிறுவன வெளியீடுகள், வெளிவர இருக்கும் நூல்கள், பெண்களுக்கான விளக்கங்கள், சிறு செய்திகள் அடங்கலாக இந்த செய்திமடல் வெளியாகிறது. பெண்களின் நிலை பற்றி ஆய்வு, பால் வேறுபாடு காட்டுவதால் வரும் விளைவுகள், பெண் விடுதலை, பெண்களுக்கான பிரச்சனைகள், பெண்களுக்கான திட்டங்கள் பற்றிய செய்திகள் போன்றவற்றை உள்ளடக்கிய விழிப்புணர்வு செய்திமடல்.
 
== இணைப்புகள் ==
== இணைப்புகள் ==
* [https://noolaham.org/wiki/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF பிரவாகினி செய்திமடல்கள்: நூலகம்]

Revision as of 07:42, 12 January 2023

பிரவாகினி(செய்தி மடல்)

பிரவாகினி(செய்தி மடல்) (1993) இலங்கையிலிருந்து வெளிவரும் பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனத்தின் மாதம் ஒரு முறை செய்தி மடல்.

வெளியீடு

பிரவாகினி செய்தி மடல் 1993 வருடம் ஆகஸ்ட் மாதத்திலிருந்து வெளிவருகிறது. ”பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம் 17 பராக் அவென்யு கொழும்பு” என்ற முகவரியிலிருந்து வெளிவருகிறது. பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனத்தாரால் நிவேதினி என்ற இதழும் வெளியிடப்பட்டது.

நோக்கம்

பிரவாகினி செய்தி மடல் ”பெண்கள், கல்வி, ஆய்வு நிறுவனம் அரசுசார்பற்ற பெண்களுக்கான ஸ்தாபனம். அது சமூகங்களுக்கிடையே ஒற்றுமை, சமூக மாற்றங்கள் மற்றும் சகல சமூகங்களைச் சார்ந்த பெண்களின் முன்னேற்றம் ஆகியவற்றிற்காக உழைக்க முற்படுகிறது” என்ற செய்தியை முதல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

  • இலங்கையில் பெண்களின் நிலை பற்றிய பல்வேறு விதமான அம்சங்களையும் நன்கு கற்று ஆய்வு செய்தல். பால் வேறுபாடு காரணமாக ஏற்படும் விளைவுகள் பற்றி இந்நாட்டு மக்களின் உணவுகளைத் தூண்டுதல்.
  • பெண்கள் தங்களை எழுத்தாளர்களாகவும், ஆராய்ச்சியாளர்களாகவும், கவிஞர்களாகவும், நாவலாசிரியர்களாகவும் வெளிப்படுத்த வாய்ப்பளிக்கக் கூடிய ஓர் அரங்கை ஏற்படுத்துவதோடு பெண்களால் எழுதப்படும் தமிழ், சிங்கள, ஆங்கில நூல்களை வெளியிடுதல்.
  • பெண் விடுதலை சம்பந்தப்பட்ட விடயங்களைப் பரப்புவதும், பெண் நலம் சம்பந்தப்பட்ட விடயங்களில் பெண்களுக்கு பிரசுரங்கள், கருத்தரங்குகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல், வருடமிருமுறை ஒரு செய்திக் கோவையை வெளியிடுவது.
  • வருடமிருமுறை பெண்கள் சம்பந்தப்பட்ட விடயங்களைத் தொகுத்து ஒரு பெண் நிலைவாத சஞ்சிகையை வெளியிடுவது. உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பெண் கலணியைப் பலப்படுத்தல்.
  • இலங்கையிலுள்ள ஒடுக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட குழுக்களின்(அகதிகள், வேலையற்றோர், சேரிவாசிகள்) மீளக்குடியமர்வு முயற்சிகளுக்கு ஒத்துழைப்பையும் ஊக்கத்தையும் வழங்குதல்.

உள்ளடக்கம்

பிரவாகினி பெண்கள் கல்வி ஆய்வு செயல் திட்டங்கள், பெண்கள் கல்வி ஆய்வு நிறுவன வெளியீடுகள், வெளிவர இருக்கும் நூல்கள், பெண்களுக்கான விளக்கங்கள், சிறு செய்திகள் அடங்கலாக இந்த செய்திமடல் வெளியாகிறது. பெண்களின் நிலை பற்றி ஆய்வு, பால் வேறுபாடு காட்டுவதால் வரும் விளைவுகள், பெண் விடுதலை, பெண்களுக்கான பிரச்சனைகள், பெண்களுக்கான திட்டங்கள் பற்றிய செய்திகள் போன்றவற்றை உள்ளடக்கிய விழிப்புணர்வு செய்திமடல்.

இணைப்புகள்

உசாத்துணை

🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.