being created

தமிழ்ப் பொழில் (இதழ்): Difference between revisions

From Tamil Wiki
(Para Added: Image Added)
(No difference)

Revision as of 19:33, 6 January 2023

தமிழ்ப் பொழில் இதழ்: 1925
தமிழ்ப் பொழில் இதழ் - 1957

தமிழ்ப் பொழில் ( சித்திரை 1, 1925), இலக்கிய ஆய்விதழ். கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பாக வெளிவந்தது. ஆர். வேங்கடாசலம் பிள்ளை இதன் ஆசிரியர். மதுரை தமிழ்ச் சங்கத்து இதழான ‘செந்தமிழ்’ இதழை தனக்கான முன் மாதிரியாகக் கொண்டு இவ்விதழ் செயல்பட்டது.

பதிப்பு, வெளியீடு

கரந்தைத் தமிழ்ச் சங்கம் தோன்றியபோது அதன் தலைவராக இருந்த த. வே. உமாமகேசுவரன் பிள்ளை, சங்கத்தின் சார்பாகத் தனி இதழ் ஒன்றை வெளியிட விரும்பினார். மதுரைத் தமிழ்ச் சங்கத்திற்கெனச் 'செந்தமிழ்’ இதழ் இருப்பதுபோலக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்திற்கும் ஓர் இதழ் இருக்கவேண்டும் என விரும்பினார் அதற்காக, இராதாகிருட்டினப் பிள்ளை, ஐ. குமாரசாமிப் பிள்ளை, பெரியசாமிப் பிள்ளை, நா. சீதாராமப் பிள்ளை, சோமநாதராவ் என்னும் ஐவர் குழு அமைக்கப்பட்டது. ஆயினும் பல ஆண்டு முயற்சிகளுக்குப் பின்னரே தமிழிப் பொழில் இதழ் தோற்றுவிக்கப்பட்டது. குரோதன ஆண்டு சித்திரைத் திங்கள் முதல்நாள் (1925 ஏப்ரல்) முதல் ’தமிழ்ப் பொழில்’ இதழ் வெளிவந்தது. ஆர். வேங்கடாசலம் பிள்ளை இதன் ஆசிரியராக இருந்தார்.

நோக்கம்

தமிழ்ப் பொழில் இதழின் நோக்கம் பற்றி, ஆசிரியர் ஆர். வேங்கடாசலம் பிள்ளை, "இவ்விதழ் தமிழ்ச் சங்கத்தின் ஒரு வெளியீடு எனும் தகுதிக்கேற்பத் தமிழ் வளர்ச்சியும் தமிழர் மேம்பாடும் பற்றிய அருமைக் கட்டுரைகளையே தன்னகத்துக் கொண்டு வெளிவரும். சிறந்த கட்டுரைகள் ஆங்கிலம், ஆரியம், தமிழ் மொழிகளில் வல்லார் பலராற் கற்றாரேயன்றிக் கற்பார்க்கும் பயனுறத்தக்க நெறியில் தெள்ளிய (எளிய) இனிய தீந்தமிழ் நடையில் எழுதப்பெறும். ஒருவரை, ஒரு குழுவினரை, ஒரு சமயத்தைச் சுட்டி இகழும் மாறுபாட்டுரைகளும், வேற்றுமையை உண்டாக்கும் உரைகளும் இதன்கண் அறவே காணப்படா. சங்கமே அரசியல் நெறியிற் கலவாத தொன்றாகவே,அதன் சார்பினதாகிய இவ்விதழ்,அரசியல் நெறியிற் சிறிதும் விரவாததொன் றென்பதைக் கூறலும் வேண்டா" என்று குறிப்பிட்டிருந்தார்.

உள்ளடக்கம்

தமிழ்மொழி வரலாறு, தமிழர் வரலாறு, தமிழ்ச் சொல்லாக்கம், தமிழ் நூலாராய்ச்சி, பழந்தமிழ்நூல் வெளியீடு, அரிய நூல்களின் தமிழ் மொழிபெயர்ப்பு, தமிழ்த் தனிச்செய்யுட்கள் வெளியீடு, தமிழ்நூல் மதிப்புரை, தமிழ்ச்சங்க நிகழ்ச்சிகள் போன்றவற்றைக் கொண்டதாக தமிழ்ப்பொழில் இதழ் வெளிவந்தது.

பங்களிப்பாளர்கள்

ஆவணம் வரலாற்று இடம்

உசாத்துணை









🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.