being created

சந்திரிகா: Difference between revisions

From Tamil Wiki
Line 35: Line 35:
* சிறுவர் பாதுகாப்பு
* சிறுவர் பாதுகாப்பு
* தமிழக நாணயவியலின் தந்தை ஆர்கே
* தமிழக நாணயவியலின் தந்தை ஆர்கே
* தில்லை எனும் திருத்தலம்
===== ஆங்கிலம் =====
===== ஆங்கிலம் =====
* Murugan the Universal God
* Murugan the Universal God
Line 43: Line 44:
* AMMA - A Fallen Star and Failed Politician
* AMMA - A Fallen Star and Failed Politician
* Lord of Dance
* Lord of Dance
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* [https://noolaham.org/wiki/index.php/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE,_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D ஆளுமை:சந்திரிகா, சுப்ரமண்யன்: noolaham]
* [https://noolaham.org/wiki/index.php/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE,_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D ஆளுமை:சந்திரிகா, சுப்ரமண்யன்: noolaham]

Revision as of 07:51, 5 January 2023

சந்திரிகா

சந்திரிகா (நவம்பர் 29, 1958) ஈழத்து தமிழ் எழுத்தாளர். துறைசார் நூல்கள் பல எழுதியுள்ளார்.

வாழ்க்கைக் குறிப்பு

சந்திரிகா இலங்கை கொழும்பில் சோமசுந்தரம், மீனாம்பாள் இணையருக்கு நவம்பர் 29, 1958-ல் பிறந்தார். கொழும்பு மகளிர் கல்லூரியில் கல்வியைக் பயின்றார். சென்னை பல்கலைக்கழகத்திலும், அவுஸ்திரேலியாவின் சிட்னி பல்கலைக்கழகத்திலும், குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்திலும், மக்குவாரி பல்கலைக்கழகம், வுல்லாங்காங் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் கல்வி பயின்றார். இதழியல் மற்றும் தொடர்பியல் துறையிலும், சட்டத் துறையிலும் அவுஸ்திரேலியாவில் ஆய்வுப்பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

1978ஆம் ஆண்டு முதல் பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி துறைகளில் ஊடகவியலாளராக ஈடுபட்டு வருகிறார். முப்பது ஆண்டு காலத்துக்கு மேலாக எண்பதுகளில் எம்ஜீஆர் அவர்களின் "தாய்" பத்திரிகையில் நிருபராகத் தொடங்கி பத்திரிகையாளராக இலங்கை வீரகேசரியில் ஆசிரியராகவும் பணிபுரிந்தவர். இலங்கை, இந்தியா மற்றும் அவுஸ்திரேலியாவில் தமிழ் மட்டும் ஆங்கிலத்தில் தலைமைத்துவம், ஊடகம், கல்வி மற்றும் ஆய்வு தொடர்பான நவீன தலைப்புகளில் பயிலரங்குகளை நடத்தி வருகிறார்.

கணினித் துறையில் மைக்ரோசொஃப்ட் மென்பொருள் திறமையாளர் மற்றும் பயிற்சியாளர் அங்கீகாரம் பெற்று பணியாற்றினார். சென்னை, மதுரை மற்றும் இலங்கைப் பல்கலைக்கழகங்களில் தமிழிலும் ஆங்கிலத்திலும் இதழியல் கற்பித்தார். தற்போது மேற்கு சிட்னி பல்கலைக்கழகத்தில் சட்டம் கற்பிக்கிறார். இலங்கை, மலேசியா மற்றும் தமிழ்நாட்டில் ஆங்கிலத்தில் இதழியல் பயிற்சி வகுப்புக்களை நடத்தி வருகிறார்.

இலக்கிய வாழ்க்கை

சந்திரிகா இருபத்தி ஐந்து நூல்களை ஊடகம், தமிழ், ஆன்மீகம், சட்டம், கணினி ஆகிய துறைகளில் எழுதினார். சிட்னி முருகனின் மீது எழுதிய திருப்பள்ளி எழுச்சி முதலாகத் தொடங்கி தாலாட்டில் முடியும் ஏழு பாடல்கள் இசைத் தட்டாக வெளியிட்டார்.

விருதுகள்

  • அயல் நாட்டில் ஆற்றிய தமிழ் தொண்டுக்காக 2018ஆம் ஆண்டில் தமிழக அரசின் உலகத் தமிழ்ச் சங்க தமிழ் அறிஞர் விருது பெற்றார்.
  • 1988ஆம் ஆண்டில் மக்கள் தொடர்பு சாதனமும் மகளிரும் என்ற நூலுக்காக தமிழக அரசின் சிறந்த நூலுக்கான விருது பெற்றார்.
  • பதிப்புத்துறையில் கணினியை பயன்படுத்துவது தொடர்பாக ஜப்பானில் நடத்திய சர்வதேச பயிற்சிப் பட்டறையில் யுனெஸ்கோ புலமைப் பரிசில் பெற்றார்.
  • அகதிகள் தொடர்பான சட்டத்துறை ஆய்வுக்காக 2004இல் பட்டர்வேர்த் விருது
  • சட்ட பணிக்காக Woman of the West Commended Award 2012 University of Western Sydney, Highly commended Award 2011 (Women Lawyers Association), Nominee 2009 Justice Medal விருதுகள் பெற்றார்.

நூல்கள்

  • மக்கள் தொடர்பு சாதனமும் மகளிரும் 1987
  • இன்றைய இதழியல்
  • அபிவிருத்தி இதழியல்
  • தென்னகத் திருக்கோயில்கள்
  • இலங்கைத் தெனாலிராமன் கதைகள்
  • கற்பக விநாயகர்
  • சிறுவர்களுக்குக் கணினி
  • சூரிய நமஸ்காரம்
  • இந்திய ரஷ்ய உறவு - ஒரு பார்வை
  • பெருமைக்குரிய பெண்கள்
  • முதல் மொழி தமிழ் - Mother Tongue Tamil (Bilingual)
  • தில்லை என்னும் திருத்தலம்
  • அம்மா
  • இணையக் குற்றங்களும் இணையவெளிச் சட்டங்களும்
  • கொசு மாமா வீட்டு பாயாசம்
  • சிறுவர் பாதுகாப்பு
  • தமிழக நாணயவியலின் தந்தை ஆர்கே
  • தில்லை எனும் திருத்தலம்
ஆங்கிலம்
  • Murugan the Universal God
  • Mozzie’s Pudding
  • Hand book for Journalists
  • Media Laws in India
  • Digital Journalism
  • AMMA - A Fallen Star and Failed Politician
  • Lord of Dance

உசாத்துணை



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.