under review

மெலனாவ்: Difference between revisions

From Tamil Wiki
(Corrected section header text)
No edit summary
Line 1: Line 1:
[[File:Melanau.jpg|thumb|மெலானாவ் மக்கள்]]மெலனாவ் : மலேசிய பழங்குடி இனம். சரவாக் மாநிலத்தில் வாழ்பவர்கள்.
[[File:Melanau.jpg|thumb|மெலானாவ் மக்கள்]]
[[File:Images (1) mel.jpg|thumb|சகோ பனையை வெட்டும் மெலனாவ் பழங்குடி]]
[[File:Download (1) mel.jpg|thumb|மூங்கில் நடனம்]]
[[File:Download mel.jpg|thumb|அலு அலு நடனம்]]
[[File:Capture w.png|thumb|கெலிடேங் தூண்]]
மெலனாவ் : மலேசிய பழங்குடி இனம். சரவாக் மாநிலத்தில் வாழ்பவர்கள்.
==இனப்பரப்பு==
==இனப்பரப்பு==
[[File:Images (1) mel.jpg|thumb|சகோ பனையை வெட்டும் மெலனாவ் பழங்குடி]]சரவாக்கின் பிந்துலு நகரத்திற்கும் இராஜாங் நதிக்கும் இடையில் காணப்படும் தென்-மத்திய கடலோர சதுப்பு நிலங்களில் மெலனாவ் பழங்குடியினர் வாழ்கின்றனர். பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தென்கிழக்கில் உள்ள சில உள்நாட்டு மக்களுடன் கலாச்சார ரீதியாகவும் மொழி ரீதியாகவும் இணைக்கப்பட்டு காடுகளின் உட்புறத்தில் வாழ்ந்து கொண்டிருந்தவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக கடலோர (coastal areas) பகுதிக்குச் செல்லத் தொடங்கினர். சரவாக்கில் வாழும் பெரும்பாலான பழங்குடியினர் மற்ற இடங்களில் இருந்து இடம்பெயர்ந்தவர்கள். ஆனால், மெலனாவ் மக்கள் ஆதிகாலம் தொட்டு சரவாக்கிலேயே வாழ்ந்து வரும் அசல் குடியேறிகள் என்று சொல்லப்படுகின்றனர். மெலனாவ் பழங்குடியினர் சரவாக்கில் உள்ள முக்கா (Mukah) என்னும் பகுதியில் உயரமான வீடுகளை உருவாக்கி அதில் வாழ்ந்து வந்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக அவர்களில் பலர் மலாய் மக்களின் வாழ்க்கை முறையை ஏற்று கம்போங் வகை குடியிருப்புகளில் வாழ்கின்றனர். பாரம்பரியமாக மெலனாவ் மக்கள் மீனவர்கள் ஆவர்.
சரவாக்கின் பிந்துலு நகரத்திற்கும் இராஜாங் நதிக்கும் இடையில் காணப்படும் தென்-மத்திய கடலோர சதுப்பு நிலங்களில் மெலனாவ் பழங்குடியினர் வாழ்கின்றனர். பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தென்கிழக்கில் உள்ள சில உள்நாட்டு மக்களுடன் கலாச்சார ரீதியாகவும் மொழி ரீதியாகவும் இணைக்கப்பட்டு காடுகளின் உட்புறத்தில் வாழ்ந்து கொண்டிருந்தவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக கடலோர (coastal areas) பகுதிக்குச் செல்லத் தொடங்கினர். சரவாக்கில் வாழும் பெரும்பாலான பழங்குடியினர் மற்ற இடங்களில் இருந்து இடம்பெயர்ந்தவர்கள். ஆனால், மெலனாவ் மக்கள் ஆதிகாலம் தொட்டு சரவாக்கிலேயே வாழ்ந்து வரும் அசல் குடியேறிகள் என்று சொல்லப்படுகின்றனர். மெலனாவ் பழங்குடியினர் சரவாக்கில் உள்ள முக்கா (Mukah) என்னும் பகுதியில் உயரமான வீடுகளை உருவாக்கி அதில் வாழ்ந்து வந்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக அவர்களில் பலர் மலாய் மக்களின் வாழ்க்கை முறையை ஏற்று கம்போங் வகை குடியிருப்புகளில் வாழ்கின்றனர். பாரம்பரியமாக மெலனாவ் மக்கள் மீனவர்கள் ஆவர்.
==வரலாறு==
==வரலாறு==
சரவாக் மாநிலத்தில் இசுலாமிய சமயம் பரவுவதற்கு முன்னால் மெலனாவ் மக்கள் [[ஆன்மவாதம்|ஆன்மவாத]] நம்பிக்கைகளைக் கொண்டவர்களாகவும் தத்தம் தனித்தனி குறுங்குழுத் தலைவர்களால் ஆளுகைச் செய்யப்படுவர்களாகவும் இருந்தனர். ரெத்துஸ் பகுதியை துகாவ் எனப்படும் மெலனாவ் இனக்குழுத்தலைவர் ஆட்சி செய்தார். ஒயா, முக்கா ஆகிய பகுதிகளை ஆட்செ செய்த தலைவர்கள் துகாவின் உறவினர்களாகவும் பெலாய்ட், துத்தோங் ஆட்சி செய்தவர்கள் அவருடைய நண்பர்களாகவும் மெலனாவ் சமூகத்தில் பெரும் ஆளுமை மிக்கவராக துகாவ் அமைந்திருந்தார். சரவாக்கின் பல பகுதிகளை ஆண்டு வந்த புரூணை சுல்தான் முகமட்டை துகாவ் போருக்கு அழைத்தார். சுல்தானின் படைகளுடனான இரு போரில் துகாவ் படையினர் தோற்றனர். துத்தோங் முதல் இகான் வரையிலான மெலனாவ் மக்கள் வாழ்நிலம் முற்றிலுமாகப் புரூணை சுல்தானின் ஆளுகைக்குட்பட்ட பகுதியாகியது. அதன் பின்னர், புரூணை சிற்றரசர் மெலனாவ் இனத்தைச் சேர்ந்த பெண்ணொருவரைத் திருமணம் செய்தார். புரூணை சுல்தான்கள் பெருந்தொகையிலான வரியை மெலனாவ் இனத்தவர்களுக்கு விதித்தனர். 19-ஆம் நூற்றாண்டில் புரூக்ஸ் தலைமையிலான சரவாக் ஆட்சிக்குக் கீழ் மெலனாவ் இன மக்கள் வந்தனர்.

Line 19: Line 24:
==கலை==
==கலை==
======மூங்கில் நடனம்======
======மூங்கில் நடனம்======
[[File:Download (1) mel.jpg|thumb|மூங்கில் நடனம்]]கவுல் விழாவின் போது மூங்கில் நடனம் ஆடப்படும். நீண்ட வீடுகளின் முற்றத்தில் குறுக்கு வெட்டாகப் பிடித்திருக்கும் மூங்கில் கழிகளினூடே மூங்கில் நடனம் ஆடப்படும்.
கவுல் விழாவின் போது மூங்கில் நடனம் ஆடப்படும். நீண்ட வீடுகளின் முற்றத்தில் குறுக்கு வெட்டாகப் பிடித்திருக்கும் மூங்கில் கழிகளினூடே மூங்கில் நடனம் ஆடப்படும்.
======அலு அலு நடனம்======
======அலு அலு நடனம்======
மெலனாவ் இன மக்களின் இறப்புச்சடங்கின் போது இரவு நேரங்களில் அலு அலு நடனம் ஆடப்படும். இந்நடனத்தின் உச்சமாக நீண்ட மூங்கில் கழியின் உச்சியில் வயிற்றைப் பதித்து இசைத்தாளத்துக்கேற்ப சுழலும் அசைவுகள் இடம்பெறும்.
மெலனாவ் இன மக்களின் இறப்புச்சடங்கின் போது இரவு நேரங்களில் அலு அலு நடனம் ஆடப்படும். இந்நடனத்தின் உச்சமாக நீண்ட மூங்கில் கழியின் உச்சியில் வயிற்றைப் பதித்து இசைத்தாளத்துக்கேற்ப சுழலும் அசைவுகள் இடம்பெறும்.
[[File:Download mel.jpg|thumb|அலு அலு நடனம்]]
 
முற்காலத்தில் மெலனாவ் இனச் சமூகப்படிநிலையில் உயர்குடிகளாகக் கருதப்படுவர்களின் உடல் சவப்பெட்டியில் கிடத்தப்படும். பெலியான் எனப்படும் மரத்தில் குடையப்பட்ட படகு போன்ற இரண்டு மீட்டர் உயரத் தூணின் மீது வைக்கப்படும். இந்நினைவுத்தூண் தொங்கும் நினைவுத்தூண் என்றழைக்கப்படுகிறது.

==இறப்புச்சடங்குகள்==
==இறப்புச்சடங்குகள்==
[[File:Capture w.png|thumb|கெலிடேங் தூண்]]மெலனாவ் இன மக்களின் வழக்கப்படி இறப்புச்சடங்குகள் படகுப்பயணத்துடன் தொடங்குகிறது. இப்பயணத்தில் tou (தோவ்) எனப்படும் மறையாற்றல் பரலோகத்துக்கு வழிகாட்டும் என நம்பப்படுகிறது. இறப்புச் சடங்கின் போது மந்திரங்கள், சடங்குகள், விளையாட்டுகள் ஆகியவை நடத்தப்பட்டு இறந்தவரின் ஆன்மா பாதுகாப்பாகப் பயணம் மேற்கொள்வதை உறுதி செய்யப்படும்.  வெள்ளம் போன்ற இயற்கைப் பேரிடர்களில் பாதிப்பு ஏற்படாமல் இருக்கவே உயரமான தூண்களில் சவப்பெட்டிகள் வைக்கப்பட்டன. தொங்கும் நினைவுத்தூண்களிலிருந்து வெளியெடுக்கப்படும் சவப்பெட்டி 15 மீட்டர் உயரம் கொண்ட கெலிடேங் அல்லது ஜெருனாய் எனப்படும் மற்றொரு தூண்களின் மீது வைக்கப்படுகிறது.பெலியான் மரத்தில் வட்ட வடிவில் குடையப்படுகின்ற தூணைச் சுற்றிலும் புலிகள், யாழிகள், பாம்புகள், எலிகள் ஆகிய உருக்களைக் கொண்டமரச்செதுக்கு வேலைப்பாடுகள் செய்யப்படுகின்றன.
மெலனாவ் இன மக்களின் வழக்கப்படி இறப்புச்சடங்குகள் படகுப்பயணத்துடன் தொடங்குகிறது. இப்பயணத்தில் tou (தோவ்) எனப்படும் மறையாற்றல் பரலோகத்துக்கு வழிகாட்டும் என நம்பப்படுகிறது. இறப்புச் சடங்கின் போது மந்திரங்கள், சடங்குகள், விளையாட்டுகள் ஆகியவை நடத்தப்பட்டு இறந்தவரின் ஆன்மா பாதுகாப்பாகப் பயணம் மேற்கொள்வதை உறுதி செய்யப்படும்.  வெள்ளம் போன்ற இயற்கைப் பேரிடர்களில் பாதிப்பு ஏற்படாமல் இருக்கவே உயரமான தூண்களில் சவப்பெட்டிகள் வைக்கப்பட்டன. தொங்கும் நினைவுத்தூண்களிலிருந்து வெளியெடுக்கப்படும் சவப்பெட்டி 15 மீட்டர் உயரம் கொண்ட கெலிடேங் அல்லது ஜெருனாய் எனப்படும் மற்றொரு தூண்களின் மீது வைக்கப்படுகிறது.பெலியான் மரத்தில் வட்ட வடிவில் குடையப்படுகின்ற தூணைச் சுற்றிலும் புலிகள், யாழிகள், பாம்புகள், எலிகள் ஆகிய உருக்களைக் கொண்டமரச்செதுக்கு வேலைப்பாடுகள் செய்யப்படுகின்றன.
பெண் உயர் குடியினரின் தூண்களில் மரங்கள், கொடிகள், தாவரங்கள், பூக்கள் கொண்ட மரச்செதுக்கு வேலைப்பாடுகள் அமைந்திருக்கின்றன. இந்த மரத்தூண்களில் மூன்று பெருந்துளைகள் இடப்படுகின்றன. மூன்றாம் துளையிலும் நடுத்துளையிலும் இறந்தவரின் உடல் அல்லது எலும்புகளும் அவர்களின் விலையுயர்ந்த அணிகளும் வைக்கப்படுகின்து. தூணின் முதற்துளையில் இறந்த உயர்குடி நபர் உயிருடனிருக்கும் போது தன்னுடனான பரலோக வாழ்க்கைக்குத் துணையாக வருவதற்குத் தெரிவு செய்யப்பட்ட பணியாட்கள் அல்லது மற்றவர்களைப் பலியிட்டு அவர்களின் உடல் கிடத்தி வைக்கப்படுகிறது. நினைவுத் தூணின் மேல்மாடத்தில் ஒன்றிரண்டு பணியாளர்களின் உடல்கள் கயிற்றால் பிணைக்கப்பட்டு உணவும் நீரின்றி பலியிடப்படுகின்றனர். இச்சடங்கை, சரவாக் மாநிலத்தை ஆண்ட ஜேம்ஸ் புரூக்ஸ் 1842 ஆம் ஆண்டு தடை செய்தார். பின்னாளில், கிருஸ்துவ, இசுலாமிய சமயங்களைத் தழுவிய மெலனாவ் மக்கள் தங்கள் இறப்புச்சடங்குகளை அச்சமய வழக்கங்களுக்கேற்ப மாற்றிக்கொண்டனர்.

== உசாத்துணை ==
== உசாத்துணை ==

Revision as of 08:06, 31 December 2022

மெலானாவ் மக்கள்
சகோ பனையை வெட்டும் மெலனாவ் பழங்குடி
மூங்கில் நடனம்
அலு அலு நடனம்
கெலிடேங் தூண்

மெலனாவ் : மலேசிய பழங்குடி இனம். சரவாக் மாநிலத்தில் வாழ்பவர்கள்.

இனப்பரப்பு

சரவாக்கின் பிந்துலு நகரத்திற்கும் இராஜாங் நதிக்கும் இடையில் காணப்படும் தென்-மத்திய கடலோர சதுப்பு நிலங்களில் மெலனாவ் பழங்குடியினர் வாழ்கின்றனர். பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தென்கிழக்கில் உள்ள சில உள்நாட்டு மக்களுடன் கலாச்சார ரீதியாகவும் மொழி ரீதியாகவும் இணைக்கப்பட்டு காடுகளின் உட்புறத்தில் வாழ்ந்து கொண்டிருந்தவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக கடலோர (coastal areas) பகுதிக்குச் செல்லத் தொடங்கினர். சரவாக்கில் வாழும் பெரும்பாலான பழங்குடியினர் மற்ற இடங்களில் இருந்து இடம்பெயர்ந்தவர்கள். ஆனால், மெலனாவ் மக்கள் ஆதிகாலம் தொட்டு சரவாக்கிலேயே வாழ்ந்து வரும் அசல் குடியேறிகள் என்று சொல்லப்படுகின்றனர். மெலனாவ் பழங்குடியினர் சரவாக்கில் உள்ள முக்கா (Mukah) என்னும் பகுதியில் உயரமான வீடுகளை உருவாக்கி அதில் வாழ்ந்து வந்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக அவர்களில் பலர் மலாய் மக்களின் வாழ்க்கை முறையை ஏற்று கம்போங் வகை குடியிருப்புகளில் வாழ்கின்றனர். பாரம்பரியமாக மெலனாவ் மக்கள் மீனவர்கள் ஆவர்.

வரலாறு

சரவாக் மாநிலத்தில் இசுலாமிய சமயம் பரவுவதற்கு முன்னால் மெலனாவ் மக்கள் ஆன்மவாத நம்பிக்கைகளைக் கொண்டவர்களாகவும் தத்தம் தனித்தனி குறுங்குழுத் தலைவர்களால் ஆளுகைச் செய்யப்படுவர்களாகவும் இருந்தனர். ரெத்துஸ் பகுதியை துகாவ் எனப்படும் மெலனாவ் இனக்குழுத்தலைவர் ஆட்சி செய்தார். ஒயா, முக்கா ஆகிய பகுதிகளை ஆட்செ செய்த தலைவர்கள் துகாவின் உறவினர்களாகவும் பெலாய்ட், துத்தோங் ஆட்சி செய்தவர்கள் அவருடைய நண்பர்களாகவும் மெலனாவ் சமூகத்தில் பெரும் ஆளுமை மிக்கவராக துகாவ் அமைந்திருந்தார். சரவாக்கின் பல பகுதிகளை ஆண்டு வந்த புரூணை சுல்தான் முகமட்டை துகாவ் போருக்கு அழைத்தார். சுல்தானின் படைகளுடனான இரு போரில் துகாவ் படையினர் தோற்றனர். துத்தோங் முதல் இகான் வரையிலான மெலனாவ் மக்கள் வாழ்நிலம் முற்றிலுமாகப் புரூணை சுல்தானின் ஆளுகைக்குட்பட்ட பகுதியாகியது. அதன் பின்னர், புரூணை சிற்றரசர் மெலனாவ் இனத்தைச் சேர்ந்த பெண்ணொருவரைத் திருமணம் செய்தார். புரூணை சுல்தான்கள் பெருந்தொகையிலான வரியை மெலனாவ் இனத்தவர்களுக்கு விதித்தனர். 19-ஆம் நூற்றாண்டில் புரூக்ஸ் தலைமையிலான சரவாக் ஆட்சிக்குக் கீழ் மெலனாவ் இன மக்கள் வந்தனர்.

மொழி

மெலனாவ் மக்கள் மெலனாவ் மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள். மெலனாவ் மொழி அஸ்திரோனேசியன் மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த மேற்கு மலாயோ-போலினேசியன் வகையைச் சேர்ந்த மொழியாகக் கருதப்படுகிறது. மெலனாவ் மொழி ஆங்கில எழுத்துருக்களைக் கொண்டே எழுதப்படுகிறது.மெலனாவ் பழங்குடியினர் வாழும் நிலப்பரப்பின் வடகிழக்குப் பகுதியின் பேச்சுவழக்குகள் தென்மேற்கில் வாழும் மக்களிடம் இருந்து முற்றிலும் வேறுபடுகின்றன. மெலனாவ் மொழி பேசும் சில மக்கள் தங்களின் பேச்சுவழக்குகளை தனி ஒரு மொழியாகவே மாற்றியுள்ளனர்.

வாழ்க்கை முறை

மெலனாவ் பழங்குடியினர் தங்கள் கிராமங்களைச் சுற்றியுள்ள சகோ பனைகளில் (sago palms) இருந்து மாவுச்சத்து (starch) உற்பத்தி செய்வதில் கைதேர்ந்தவர்கள் என குறிப்பிடப்படுகின்றனர். மெலனாவ் மக்களின் நடனங்களில் கூட இசைவழி சகோ செய்யும் நுட்பங்கள் இணைக்கப்பட்டுள்ளன. படகு கட்டுதல் மற்றும் கைவினைப்பொருட்களை உருவாக்குதலில் சிறந்தவர்களாக திகழ்கின்றனர்.

சமயம்

மெலனாவ் மக்களில் பெரும்பாலானோர் இசுலாமியச் சமயத்தைச் சார்ந்தவர்கள். அதைத் தவிர கிருஸ்துவச் சமயத்தைச் சார்ந்தவர்களும் மெலனாவ் இனத்தில் வாழ்கின்றனர். இவ்விரு சமயங்களைத் தவிர ஏனையோர் இன்னும் மெலனாவ் பழங்குடி இனத்தின் ஆன்மவாதம் சார்ந்த பூர்வநம்பிக்கைகளைப் பின்பற்றி வருகின்றனர். மெலனாவ் இனத்து மக்களுக்கு வரும் நோய்களுக்கு பிலும் எனப்படும் ஆற்றல்களே காரணம் என நம்பப்படுகிறது.  மெலனாவ் சமூகத்தில் வாழும் பூசகர்கள் நோய்க்குக் காரணமான ஆற்றலை உடலில் பச்சை குத்துவர். அதைத் தவிர, தீயாற்றல்களை விரட்டுவதற்காக காவுல் எனப்படும் சுத்திகரிப்புச் சடங்கினை ஆண்டுதோறும் செய்வர்.

நம்பிக்கைகள்

சடங்குகள்

மெலனாவ் நாட்காட்டியின்படி ஒவ்வொரு ஆண்டும் ஆத்மாக்களின் மாதம் (Bulan Pengejin-The Month Of The Spirits) எனச்சொல்லப்படும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில் மெலனாவ் மக்களால் கவுல் திருவிழா (Kaul Festival) கொண்டாடப்படுகிறது. இவ்விழா வருவதற்கு ஒரு மாதத்திற்கு முன் அதிகமாக காற்று வீசும், தொடக்கத்தில் லேசான சாரல் மழை பின், காற்று படிப்படியாக வலுவடையும் எனச் சொல்லப்படுகிறது. மேலும், இச்சமயம் சூரியன் வடக்கு நோக்கி நகர்ந்து சந்திரன் சூரியனின் அசல் இருப்பிடத்தை மாற்றும் எனப்படுகிறது. இந்த திருவிழா மழைக்காலத்தின் முடிவு மற்றும் மீன்பிடி பருவத்தின் வருகை அல்லது தொடக்கத்தை குறிக்கிறது. இக்காலக்கட்டத்தில் கடலில் ஏராளமான மீன்கள் காணப்படும். இந்த நேரத்தை அவர்கள் ஆண்டின் தொடக்கமாகவும், ஆத்மாக்களின் முதல் மாதமாகவும் (The First Month Of Pengejin) குறிப்பிடுகிறார்கள்.

ஐப்போக் (Ipok) என அழைக்கப்படும் கடல் ஆத்மா அல்லது பாதுகாவலர் என்று மெலனாவ் பழங்குடியினரால் நம்பப்படும் சக்தியை வேண்டி நன்றி கூறும் விதமாக இத்திருவிழா நடத்தப்படுகிறது. இந்த நாளில், செராஹாங் (Serahang) என்ற உணவு ஐபோக் பாதுகாவலருக்காக விருந்தாகப் படைக்கப்படும். மூங்கில் இலைகள் மற்றும் நிபா இலைகளுக்குள் தானியம், கோழி முட்டை, மஞ்சள் பசையம் அரிசி, புகையிலை மற்றும் வெற்றிலை ஆகிய அனைத்தையும் ஒன்று சேர வைத்து பூஜைக்கான இவ்வுணவு செய்யப்படும். அவர்கள் செராஹாங் உணவை கடலுக்கு எடுத்துச் சென்று ஐப்போக் கடவுளை வணங்கி அவர்களை தங்கள் விருந்தில் பங்கேற்க அழைப்பார்கள். விருந்துக்குப் பிறகு, பாதுகாவலர்கள் மற்றும் மற்ற ஆத்மாகள் அவர்களுடன் எடுத்துச் செல்வதற்காக விருந்தில் படைக்கப்பட்ட அனைத்து உணவுகளும் பானங்களும் கடற்கரையில் விடப்படுகின்றனர். இது நம்பிக்கையின் அடிப்படையில் கடல் பாதுகாவலர்கள் மற்று ஆத்மாக்களுக்காக படைக்கப்படுகின்ற உணவு என்பதால் மனிதர்கள் அதனை எடுத்து கொள்வதற்கோ சாப்பிடுவதற்கோ அனுமதி இல்லை.

இந்த விழாவின் போது, அவர்கள் “திபோ” என்று அழைக்கப்படும் பெரிய ஊஞ்சலைக் கட்டி, அதைக் கட்டும் போது திபோ மந்திரத்தைப் பாடி, ஏராளமான மலர்கள், ஏராளமான பழங்கள் மற்றும் கடலில் ஏராளமான மீன்கள் கிடைக்க வேண்டும் என்று தங்கள் காவல் தெய்வங்களை வேண்டி ஆசீர்வாதத்தைப் பெறுவார்கள்.

கலை

மூங்கில் நடனம்

கவுல் விழாவின் போது மூங்கில் நடனம் ஆடப்படும். நீண்ட வீடுகளின் முற்றத்தில் குறுக்கு வெட்டாகப் பிடித்திருக்கும் மூங்கில் கழிகளினூடே மூங்கில் நடனம் ஆடப்படும்.

அலு அலு நடனம்

மெலனாவ் இன மக்களின் இறப்புச்சடங்கின் போது இரவு நேரங்களில் அலு அலு நடனம் ஆடப்படும். இந்நடனத்தின் உச்சமாக நீண்ட மூங்கில் கழியின் உச்சியில் வயிற்றைப் பதித்து இசைத்தாளத்துக்கேற்ப சுழலும் அசைவுகள் இடம்பெறும்.

முற்காலத்தில் மெலனாவ் இனச் சமூகப்படிநிலையில் உயர்குடிகளாகக் கருதப்படுவர்களின் உடல் சவப்பெட்டியில் கிடத்தப்படும். பெலியான் எனப்படும் மரத்தில் குடையப்பட்ட படகு போன்ற இரண்டு மீட்டர் உயரத் தூணின் மீது வைக்கப்படும். இந்நினைவுத்தூண் தொங்கும் நினைவுத்தூண் என்றழைக்கப்படுகிறது.

இறப்புச்சடங்குகள்

மெலனாவ் இன மக்களின் வழக்கப்படி இறப்புச்சடங்குகள் படகுப்பயணத்துடன் தொடங்குகிறது. இப்பயணத்தில் tou (தோவ்) எனப்படும் மறையாற்றல் பரலோகத்துக்கு வழிகாட்டும் என நம்பப்படுகிறது. இறப்புச் சடங்கின் போது மந்திரங்கள், சடங்குகள், விளையாட்டுகள் ஆகியவை நடத்தப்பட்டு இறந்தவரின் ஆன்மா பாதுகாப்பாகப் பயணம் மேற்கொள்வதை உறுதி செய்யப்படும்.  வெள்ளம் போன்ற இயற்கைப் பேரிடர்களில் பாதிப்பு ஏற்படாமல் இருக்கவே உயரமான தூண்களில் சவப்பெட்டிகள் வைக்கப்பட்டன. தொங்கும் நினைவுத்தூண்களிலிருந்து வெளியெடுக்கப்படும் சவப்பெட்டி 15 மீட்டர் உயரம் கொண்ட கெலிடேங் அல்லது ஜெருனாய் எனப்படும் மற்றொரு தூண்களின் மீது வைக்கப்படுகிறது.பெலியான் மரத்தில் வட்ட வடிவில் குடையப்படுகின்ற தூணைச் சுற்றிலும் புலிகள், யாழிகள், பாம்புகள், எலிகள் ஆகிய உருக்களைக் கொண்டமரச்செதுக்கு வேலைப்பாடுகள் செய்யப்படுகின்றன. பெண் உயர் குடியினரின் தூண்களில் மரங்கள், கொடிகள், தாவரங்கள், பூக்கள் கொண்ட மரச்செதுக்கு வேலைப்பாடுகள் அமைந்திருக்கின்றன. இந்த மரத்தூண்களில் மூன்று பெருந்துளைகள் இடப்படுகின்றன. மூன்றாம் துளையிலும் நடுத்துளையிலும் இறந்தவரின் உடல் அல்லது எலும்புகளும் அவர்களின் விலையுயர்ந்த அணிகளும் வைக்கப்படுகின்து. தூணின் முதற்துளையில் இறந்த உயர்குடி நபர் உயிருடனிருக்கும் போது தன்னுடனான பரலோக வாழ்க்கைக்குத் துணையாக வருவதற்குத் தெரிவு செய்யப்பட்ட பணியாட்கள் அல்லது மற்றவர்களைப் பலியிட்டு அவர்களின் உடல் கிடத்தி வைக்கப்படுகிறது. நினைவுத் தூணின் மேல்மாடத்தில் ஒன்றிரண்டு பணியாளர்களின் உடல்கள் கயிற்றால் பிணைக்கப்பட்டு உணவும் நீரின்றி பலியிடப்படுகின்றனர். இச்சடங்கை, சரவாக் மாநிலத்தை ஆண்ட ஜேம்ஸ் புரூக்ஸ் 1842 ஆம் ஆண்டு தடை செய்தார். பின்னாளில், கிருஸ்துவ, இசுலாமிய சமயங்களைத் தழுவிய மெலனாவ் மக்கள் தங்கள் இறப்புச்சடங்குகளை அச்சமய வழக்கங்களுக்கேற்ப மாற்றிக்கொண்டனர்.

உசாத்துணை

✅Finalised Page