under review

மதுரைப் பொன்செய் கொல்லன்: Difference between revisions

From Tamil Wiki
(Category:புலவர்கள் சேர்க்கப்பட்டது)
(Moved categories to bottom of article)
Line 31: Line 31:
* [https://www.tamildigitallibrary.in/book-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt1k0l3&tag=%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88#book1/3 சங்கத் தமிழ்ப் புலவர் வரிசை: தமிழ் இணைய கல்விக் கழகம்]

[[Category:Tamil Content]]
 
{{Finalised}}
{{Finalised}}
[[Category:புலவர்கள்]]
[[Category:புலவர்கள்]]
[[Category:Tamil Content]]

Revision as of 15:38, 29 December 2022

மதுரைப் பொன்செய் கொல்லன் சங்க காலப் புலவர். இவர் பாடிய பாடல் ஒன்று அகநானூற்றில் உள்ளது.

வாழ்க்கைக் குறிப்பு

மதுரையில் பொன்செய் கொல்லனாக தொழில் செய்தார்.

இலக்கிய வாழ்க்கை

மதுரைப் பொன்செய் கொல்லன் "பிரிவிடை வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது" என்ற துறையில் அகநானூற்றில் 363-வது பாடல் பாடினார். காற்று அடிக்க உதிர்ந்த நெல்லிக் கனிகள் பொன்னால் செய்த காசுகள் போல் காட்சி தருவதாகக் கூறுகிறார்.

பாடல் நடை

  • அகநானூறு 363

நிரை செலல் இவுளி விரைவுடன் கடைஇ,
அகல் இரு விசும்பில் பகல் செலச் சென்று,
மழுகு சுடர் மண்டிலம் மா மலை மறைய,
பொழுது கழி மலரின், புனையிழை! சாஅய்,
அணை அணைந்து இனையை ஆகல் கணை அரைப்
புல் இலை நெல்லிப் புகர் இல் பசுங் காய்
கல் அதர் மருங்கில் கடு வளி உதிர்ப்ப,
பொலம் செய் காசின் பொற்பத் தாஅம்
அத்தம் நண்ணி, அதர் பார்த்து இருந்த
கொலை வெங் கொள்கைக் கொடுந் தொழில் மறவர்
ஆறு செல் மாக்கள் அரு நிறத்து எறிந்த
எஃகு உறு விழுப்புண் கூர்ந்தோர் எய்திய,
வளை வாய்ப் பருந்தின், வள் உகிர்ச் சேவல்
கிளை தரு தௌ விளி கெழு முடைப் பயிரும்
இன்னா வெஞ் சுரம் இறந்தோர், முன்னிய
செய் வினை வலத்தர் ஆகி, இவண் நயந்து,
எய்த வந்தனரே தோழி! மை எழில்
துணை ஏர் எதிர் மலர் உண்கண்
பிணை ஏர் நோக்கம் பெருங் கவின் கொளவே.

உசாத்துணை

✅Finalised Page