under review

அவதானம் (நினைவுக்கலை): Difference between revisions

From Tamil Wiki
(Removed extra blank characters from template paragraphs)
(Removed bold formatting)
Line 13: Line 13:
==செய்முறை==
==செய்முறை==
அட்டாவதானத்திற்கு இந்த அவதானங்கள், தசாவதானத்திற்கு இந்த அவதானங்கள் என எந்த வரையறையும் தெளிவாக இல்லை. பொதுவாக பல அவதானிகளால் செய்யப்பட்ட அவதானங்கள் என கீழுள்ளவற்றை குறிப்பிடலாம்:
அட்டாவதானத்திற்கு இந்த அவதானங்கள், தசாவதானத்திற்கு இந்த அவதானங்கள் என எந்த வரையறையும் தெளிவாக இல்லை. பொதுவாக பல அவதானிகளால் செய்யப்பட்ட அவதானங்கள் என கீழுள்ளவற்றை குறிப்பிடலாம்:
*'''ஆசுகவி பாடுதல்''' - பாடலின் ஈற்றடியையோ அல்லது முதற் சொல், இறுதிச் சொற்களையோ கொடுத்து உடனேயே பாடச் சொல்லுதல்.
*ஆசுகவி பாடுதல் - பாடலின் ஈற்றடியையோ அல்லது முதற் சொல், இறுதிச் சொற்களையோ கொடுத்து உடனேயே பாடச் சொல்லுதல்.
*'''கிழமை கூறுதல்''' - ஏதேனும் ஒரு வருடத்தில் குறிப்பிட்ட தேதியை கூறினால், அன்றைய கிழமையை கூறுதல். பயிற்சி பெற்ற அட்டாவதானிகள் இரண்டு அல்லது மூன்று நாட்களின் கிழமைகளை முறையாக கூறியிருக்கிறார்கள்.
*கிழமை கூறுதல் - ஏதேனும் ஒரு வருடத்தில் குறிப்பிட்ட தேதியை கூறினால், அன்றைய கிழமையை கூறுதல். பயிற்சி பெற்ற அட்டாவதானிகள் இரண்டு அல்லது மூன்று நாட்களின் கிழமைகளை முறையாக கூறியிருக்கிறார்கள்.
*'''கண்டப் பத்திரிக்கை''' - ஒரு குறிப்பிட்ட வாக்கியத்தை மனதில் வைத்துக் கொண்டு அதன் எழுத்துக்களை மாற்றிக் கொடுத்து குழப்பம் ஏற்படுத்தி இறுதியில் அந்த வாக்கியத்தை சரியாக சொல்லுதல். உதாரணமாக "ஆறுமுகம் பிள்ளை" என்ற வாக்கியத்தில் நான்காம் எழுத்து 'க', இரண்டாம் எழுத்து 'று', ஆறாம் எழுத்து 'பி' என்று கொடுத்து இறுதியில் அந்த பெயரை வினவுதல்.
*கண்டப் பத்திரிக்கை - ஒரு குறிப்பிட்ட வாக்கியத்தை மனதில் வைத்துக் கொண்டு அதன் எழுத்துக்களை மாற்றிக் கொடுத்து குழப்பம் ஏற்படுத்தி இறுதியில் அந்த வாக்கியத்தை சரியாக சொல்லுதல். உதாரணமாக "ஆறுமுகம் பிள்ளை" என்ற வாக்கியத்தில் நான்காம் எழுத்து 'க', இரண்டாம் எழுத்து 'று', ஆறாம் எழுத்து 'பி' என்று கொடுத்து இறுதியில் அந்த பெயரை வினவுதல்.
*'''கண்டத்தொகை''' - கேள்வியாளர் கூறும் தொகையை பதினாறு கட்டங்கள் கொண்ட சதுரத்தில் எப்பக்கம் கூட்டினாலும் அதே தொகை வரும்படி அமைத்து காட்டுவதாகும். இதை, ஒரு கட்டத்தில் அமைந்த எண் மறுபக்கம் வராத வண்ணமும், எழுது கோலின் துணையின்றியும் செய்ய வேண்டும்.
*கண்டத்தொகை - கேள்வியாளர் கூறும் தொகையை பதினாறு கட்டங்கள் கொண்ட சதுரத்தில் எப்பக்கம் கூட்டினாலும் அதே தொகை வரும்படி அமைத்து காட்டுவதாகும். இதை, ஒரு கட்டத்தில் அமைந்த எண் மறுபக்கம் வராத வண்ணமும், எழுது கோலின் துணையின்றியும் செய்ய வேண்டும்.
*'''இலாடச் சங்கிலி கழற்றல்''' - இலாட சங்கிலியை கழற்றியும் பூட்டியும் காண்பித்தல்.
*இலாடச் சங்கிலி கழற்றல் - இலாட சங்கிலியை கழற்றியும் பூட்டியும் காண்பித்தல்.
*'''கல்லெறி எண்ணுதல்''' - முதுகில் முறைப்படி எறியப்படும் சிறுகல், நெல் இவைகளை மொத்தம் சேர்த்து தனித்தனியாக சொல்லுதல்.
*கல்லெறி எண்ணுதல் - முதுகில் முறைப்படி எறியப்படும் சிறுகல், நெல் இவைகளை மொத்தம் சேர்த்து தனித்தனியாக சொல்லுதல்.
*'''முருகன் புகழ் மொழிதல்''' - அவதானம் துவங்கி முடியும் வரை 'சண்முக நாதன்' என்று அடிக்கடி கூறுதல்.
*முருகன் புகழ் மொழிதல் - அவதானம் துவங்கி முடியும் வரை 'சண்முக நாதன்' என்று அடிக்கடி கூறுதல்.
*'''காலக் கணிதம்''' - கணக்குகளை ஒற்றையொழுக்குத் தொகை, இரட்டையொழுக்குத் தொகை, படியடித் தொகை ஆகியவற்றை தனித் தனி ஆயிரத்துக்குள் கேட்டால் மொத்தம் சேர்த்து மொழிதல்.
*காலக் கணிதம் - கணக்குகளை ஒற்றையொழுக்குத் தொகை, இரட்டையொழுக்குத் தொகை, படியடித் தொகை ஆகியவற்றை தனித் தனி ஆயிரத்துக்குள் கேட்டால் மொத்தம் சேர்த்து மொழிதல்.
*'''எட்டெழுத்தாணிச்செய்யுள்''' - இடத்தின் (பதியின்) பெயரும் தெய்வத்தின் பெயரும் முதலெழுத்து கூறினால், அப்பெயர்களை கூறியபடி அமைத்து, வெண்பா, கலித்துறை, கலிவிருத்தம் ஆகிய மூன்று பாக்களுள் அறுவருக்கும், கொம்பில்லா வெண்பா ஒருவருக்கும், குதிரையடி வெண்பா ஒருவருக்குமாக எட்டு செய்யுள் செய்தல்.
*எட்டெழுத்தாணிச்செய்யுள் - இடத்தின் (பதியின்) பெயரும் தெய்வத்தின் பெயரும் முதலெழுத்து கூறினால், அப்பெயர்களை கூறியபடி அமைத்து, வெண்பா, கலித்துறை, கலிவிருத்தம் ஆகிய மூன்று பாக்களுள் அறுவருக்கும், கொம்பில்லா வெண்பா ஒருவருக்கும், குதிரையடி வெண்பா ஒருவருக்குமாக எட்டு செய்யுள் செய்தல்.
மேற் சொன்ன வகைகள் தவிர இராமலிங்க கவிராயர் என்னும் அவதானியார் கீழ் கண்ட வகைகளையும் செய்துள்ளார்
மேற் சொன்ன வகைகள் தவிர இராமலிங்க கவிராயர் என்னும் அவதானியார் கீழ் கண்ட வகைகளையும் செய்துள்ளார்
*அவதானம் காண வருபவர்களை மறவாமல் வாருங்கள் என அழைத்தல்
*அவதானம் காண வருபவர்களை மறவாமல் வாருங்கள் என அழைத்தல்

Revision as of 10:59, 16 December 2022

To read the article in English: Avadhanam (Memory Art). ‎


அவதானம் (கவனம்) நினைவுக்கலை என பரவலாக குறிப்பிடப்படுகிறது. ஒரே சமயத்தில் பல செயல்களைச் செய்துகாட்டும் சாதனை அவதானம் எனப்படும்.

வரலாறு

நமக்கு கிடைக்கும் சான்றுகளின் படி, அவதானக்கலை 17ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் உருவானது. அவதானக்கலை செய்தவர்கள் அனைவரும் தமிழ் புலவர்களே. இவர்களுள் காலத்தால் முந்தையவர் 'அட்டாவதானியார்' என்ற பெயராலேயே அறியப்படும் புலவரே.

வகைகள்

ஒரே சமயத்தில் செய்யப்படும் செயல்களின் எண்ணிக்கையை வைத்து அவதானம் வகைப்படுத்தப்படுகிறது:

  • ஆறு அவதானங்கள் - சட்டாவதானம்
  • எட்டு அவதானங்கள் - அட்டாவதானம்
  • பத்து அவதானங்கள் - தசாவதானம்
  • பதினாறு அவதானங்கள் - சோடசாவதானம்
  • நூறு அவதானங்கள் - சதாவதானம்

செய்முறை

அட்டாவதானத்திற்கு இந்த அவதானங்கள், தசாவதானத்திற்கு இந்த அவதானங்கள் என எந்த வரையறையும் தெளிவாக இல்லை. பொதுவாக பல அவதானிகளால் செய்யப்பட்ட அவதானங்கள் என கீழுள்ளவற்றை குறிப்பிடலாம்:

  • ஆசுகவி பாடுதல் - பாடலின் ஈற்றடியையோ அல்லது முதற் சொல், இறுதிச் சொற்களையோ கொடுத்து உடனேயே பாடச் சொல்லுதல்.
  • கிழமை கூறுதல் - ஏதேனும் ஒரு வருடத்தில் குறிப்பிட்ட தேதியை கூறினால், அன்றைய கிழமையை கூறுதல். பயிற்சி பெற்ற அட்டாவதானிகள் இரண்டு அல்லது மூன்று நாட்களின் கிழமைகளை முறையாக கூறியிருக்கிறார்கள்.
  • கண்டப் பத்திரிக்கை - ஒரு குறிப்பிட்ட வாக்கியத்தை மனதில் வைத்துக் கொண்டு அதன் எழுத்துக்களை மாற்றிக் கொடுத்து குழப்பம் ஏற்படுத்தி இறுதியில் அந்த வாக்கியத்தை சரியாக சொல்லுதல். உதாரணமாக "ஆறுமுகம் பிள்ளை" என்ற வாக்கியத்தில் நான்காம் எழுத்து 'க', இரண்டாம் எழுத்து 'று', ஆறாம் எழுத்து 'பி' என்று கொடுத்து இறுதியில் அந்த பெயரை வினவுதல்.
  • கண்டத்தொகை - கேள்வியாளர் கூறும் தொகையை பதினாறு கட்டங்கள் கொண்ட சதுரத்தில் எப்பக்கம் கூட்டினாலும் அதே தொகை வரும்படி அமைத்து காட்டுவதாகும். இதை, ஒரு கட்டத்தில் அமைந்த எண் மறுபக்கம் வராத வண்ணமும், எழுது கோலின் துணையின்றியும் செய்ய வேண்டும்.
  • இலாடச் சங்கிலி கழற்றல் - இலாட சங்கிலியை கழற்றியும் பூட்டியும் காண்பித்தல்.
  • கல்லெறி எண்ணுதல் - முதுகில் முறைப்படி எறியப்படும் சிறுகல், நெல் இவைகளை மொத்தம் சேர்த்து தனித்தனியாக சொல்லுதல்.
  • முருகன் புகழ் மொழிதல் - அவதானம் துவங்கி முடியும் வரை 'சண்முக நாதன்' என்று அடிக்கடி கூறுதல்.
  • காலக் கணிதம் - கணக்குகளை ஒற்றையொழுக்குத் தொகை, இரட்டையொழுக்குத் தொகை, படியடித் தொகை ஆகியவற்றை தனித் தனி ஆயிரத்துக்குள் கேட்டால் மொத்தம் சேர்த்து மொழிதல்.
  • எட்டெழுத்தாணிச்செய்யுள் - இடத்தின் (பதியின்) பெயரும் தெய்வத்தின் பெயரும் முதலெழுத்து கூறினால், அப்பெயர்களை கூறியபடி அமைத்து, வெண்பா, கலித்துறை, கலிவிருத்தம் ஆகிய மூன்று பாக்களுள் அறுவருக்கும், கொம்பில்லா வெண்பா ஒருவருக்கும், குதிரையடி வெண்பா ஒருவருக்குமாக எட்டு செய்யுள் செய்தல்.

மேற் சொன்ன வகைகள் தவிர இராமலிங்க கவிராயர் என்னும் அவதானியார் கீழ் கண்ட வகைகளையும் செய்துள்ளார்

  • அவதானம் காண வருபவர்களை மறவாமல் வாருங்கள் என அழைத்தல்
  • இடையில் ஒருவர் கூறிய தமிழ்ச் சொல்லை பின்பு அவர் கேட்கும் போது சரியாக சொல்லுதல்
  • ஒற்றை வினாக்கணக்கு தீர்த்து விடை சொல்லுதல்
  • சதுரங்கம் விளையாடுதல்
  • செய்யுள்களை மனப்பாடமாக சொல்லி அதன் பொருள் விளக்குதல்

இது தவிர "திருக்குறள் அவதானியர்" என்ற ஒரு வகையினரும் இருந்துள்ளனர். இவர்களது அட்டாவதானத்தில் கேள்விகள் திருக்குறள் சார்ந்தே இருக்கும். மேலும் "அட்சராவதானி" என்றும் ஒரு புலவர் சிறப்பிக்கப் படுகிறார். ஆயிரம் அட்சரங்களை எவ்விதம் மாற்றி கொடுத்தாலும், அவற்றை முறையாக அமைத்து படிக்கும் பாங்கில் இவர் சிறந்தவராக கருதப் படுகிறார்.

அவதானிகள்

  • சரவணப்பெருமாள் கவிராயர், செய்குத்தம்பிப் பாவலர் போன்றோர் சதாவதானம் செய்தவர்கள்.
  • சீறாப்புராண ஆசிரியர் உமறுப்புலவரின் பேரர் அப்துல்காதர் அட்டாவதானி.
  • வினோதரசமஞ்சரி நூலாசிரியர் வீராசாமிச் செட்டியார் கூட ஓர் அவதானிதான்.

தமிழகத்தில் அவதானம் செய்தவர்களாக 160க்கும் மேற்பட்டவர்கள் இருந்தனர்.

உசாத்துணைகள்


✅Finalised Page