first review completed

சின்னத்தம்பிப் புலவர்: Difference between revisions

From Tamil Wiki
(changed template text)
(Reset to Stage 1)
Line 31: Line 31:
* ஈழ நாட்டின் தமிழ் சுடர் மணிகள் – தென்புலோலியூர் மு. கணபதிப்பிள்ளை
* ஈழ நாட்டின் தமிழ் சுடர் மணிகள் – தென்புலோலியூர் மு. கணபதிப்பிள்ளை
* சிற்றிலக்கிய புலவர் அகராதி: ந. வீ. ஜெயராமன்
* சிற்றிலக்கிய புலவர் அகராதி: ந. வீ. ஜெயராமன்
* [http://kanaga_sritharan.tripod.com/sittilakkiyam.htm#2 17ம் - 20ம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த ஈழத்து சிற்றிலக்கியப் புலவர்கள், தொகுப்பு: கனக ஸ்ரீதரன் ஆஸ்திரேலியா|யாழ்ப்பாணச் சரித்திரம் - நாவலர் கோட்டம் ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை (1912)|சிற்றிலக்கியப் புலவர் அகராதி - ந.வீ.செயராமன் (1983)|இந்துக் கலைக்களஞ்சியம் - கலாகீர்த்தி பொ பூலோகசிங்கம் (1990)]
* [http://kanaga_sritharan.tripod.com/sittilakkiyam.htm#2 17ம் - 20ம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த ஈழத்து சிற்றிலக்கியப் புலவர்கள், தொகுப்பு: கனக ஸ்ரீதரன் ஆஸ்திரேலியா]
* [https://noolaham.org/wiki/index.php/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்|மு.கணபதிப்பிள்ளை|பாரி நிலையம் வெளியீடு, 1967]
* [https://noolaham.org/wiki/index.php/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்|மு.கணபதிப்பிள்ளை|பாரி நிலையம் வெளியீடு, 1967]
{{First review completed}}
{{First review completed}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:ஈழத்து ஆளுமைகள்]]
[[Category:ஈழத்து ஆளுமைகள்]]

Revision as of 08:11, 16 December 2022

இணுவில் சிவகாமியம்மை கோவில்

சின்னத்தம்பிப் புலவர் (இணுவில்) (19-ஆம் நூற்றாண்டு) இலங்கை தமிழ், சைவ அறிஞர், ஈழத்து சிற்றிலக்கியப் புலவர் மற்றும் நாடக ஆசிரியர். இவர் பாடிய பஞ்சவன்னத் தூது முக்கியமான படைப்பாகும்.

வாழ்க்கைக் குறிப்பு

இலங்கை யாழ்ப்பாணம் இணுவிலில் சிதம்பர நாதருக்கு மகனாக 19-ஆம் நூற்றாண்டில் பிறந்தார். கதிர்காமசேகரமானா முதலியார் என்பது இயற்பெயர். டச்சு அரசில் தொம்பு(சாதனம்) எழுதும் பணியில் இருந்தார். இணுவில் சிவகாமி அம்மையை நாளும் வழிபாடு செய்தவர்.

இலக்கிய வாழ்க்கை

இளமையில் கவி பாடும் திறன் பெற்றிருந்தார். புலவரை டச்சு ஆட்சியாளர்கள் தவறான குற்றச்சாட்டினால் நகர் காவலில் வைத்தனர். சிவகாமி அம்மை மீது பதிகம் பாடியதால் காவலர்கள் அவரை விடுதலை செய்தானர். அம்மையின் அருளினால் சிறை மீண்டதை சிறை நீக்கு பதிகமாக பாடினார். இணுவை சிவகாமி அம்மையை பாட்டுடைத்தலைவியாகக் கொண்டு சிவகாமியம்மை பிள்ளைத்தமிழ், சிவகாமியம்மை துதி, இணுவைச் சிவகாமசுந்தரி பதிகம், இணுவிற் சிவகாமியம்மை திருவூசல் ஆகியவற்றைப் பாடினார். பஞ்சவன்னத் தூது புதுமையான தூது சிற்றிலக்கிய வடிவத்தைச் சார்ந்த நூல்.

டச்சு மற்றும் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் சிவகாமி அம்மை கோயிலின் அருகே சிறந்த நாடக அரங்கு ஒன்று இருந்தது. இத்தலம் சமயத்தை மட்டுமன்றி தமிழையும் வளர்த்தது. புலவர் நொண்டி நாடகம், கோவலன் நாடகம், அனிருத்த நாடகம் போன்ற நாடகங்களை எழுதினார்.

நூல்கள் பட்டியல்

தூது
  • காலிங்கராயன் பஞ்சவன்னத் தூது
பதிகம்
  • இணுவைச் சிவகாமசுந்தரி பதிகம்
புராணம்
  • இளந்தாரி புராணம்
சதகம்
  • இரட்டை மணிமாலை சதகம்
திருவூசல்
  • இணுவிற் சிவகாமியம்மை திருவூசல்
நாடகம்
  • நொண்டி நாடகம்
  • கோவலன் நாடகம்
  • அனிருத்த நாடகம்

உசாத்துணை


🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.