under review

கா. அப்பாச்சாமி ஐயர்: Difference between revisions

From Tamil Wiki
(changed template text)
(Reset to Stage 1)
Line 42: Line 42:
* [https://noolaham.org/wiki/index.php/%E0%AE%A8%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D நகுலகிரிப் புராணம்]
* [https://noolaham.org/wiki/index.php/%E0%AE%A8%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D நகுலகிரிப் புராணம்]
*[https://noolaham.net/project/586/58560/58560.pdf நகுலகிரிப் புராணம் மூலமும் உரையும், கீர்மலைச் சிவநெறிக் கழக வெளியீடு, இலங்கை, 1980]
*[https://noolaham.net/project/586/58560/58560.pdf நகுலகிரிப் புராணம் மூலமும் உரையும், கீர்மலைச் சிவநெறிக் கழக வெளியீடு, இலங்கை, 1980]
* [http://kanaga_sritharan.tripod.com/sittilakkiyam.htm#2 17ம் - 20ம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த ஈழத்து சிற்றிலக்கியப் புலவர்கள், தொகுப்பு: கனக ஸ்ரீதரன் ஆஸ்திரேலியா|யாழ்ப்பாணச் சரித்திரம் - நாவலர் கோட்டம் ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை (1912)|சிற்றிலக்கியப் புலவர் அகராதி - ந.வீ.செயராமன் (1983)|இந்துக் கலைக்களஞ்சியம் - கலாகீர்த்தி பொ பூலோகசிங்கம் (1990)]
* [http://kanaga_sritharan.tripod.com/sittilakkiyam.htm#2 17ம் - 20ம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த ஈழத்து சிற்றிலக்கியப் புலவர்கள், தொகுப்பு: கனக ஸ்ரீதரன் ஆஸ்திரேலியா]


{{Finalised}}
{{Finalised}}

Revision as of 08:11, 16 December 2022

நகுலகிரிப் புராணம்

கா. அப்பாச்சாமி ஐயர் (1845-1925) இலங்கையின் சிற்றிலக்கியக் கவிஞர்களில் ஒருவர். அர்ச்சகர், கவி பாடுபவர், புலவர், உரையாளர், ஆசிரியர் என பன்முகம் கொண்டவர். இவர் இயற்றிய நகுலகிரிப் புராணம் முக்கியமான நூல்.

பிறப்பு, கல்வி

கி.பி. 1845-ல் காசி நாத ஐயருக்கும், பொன்னம்மாளுக்கும் மகனாக இலங்கையின் வடமாகாணத்தில் யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ள வசாவிளான் (வயாவிளான்) எனும் கிராமத்தில் கா. அப்பாச்சாமி ஐயர் பிறந்தார்.

ச. கதிர்காம ஐயரிடம் கல்வி பயின்று மரபு வழி அந்தணராகத் தேர்ச்சி பெற்றார். வித்துவ சிரோன்மணி பொன்னம்பலப் பிள்ளையவர்கள் வண்ணார்பண்ணையில் பிச்சுவர் ஐயர் இல்லத்தில் நடத்தி வந்த திண்ணைப் பள்ளியில் பயின்றார். இளவயதில் கவிபாடும் ஆற்றல் பெற்றிருந்தார்.

தனிவாழ்க்கை

சா. சோமையரின் மகளை மணந்தார். இவர்களுக்கு புத்திர பாக்கியம் இல்லை. ஞான வைரவர் கோவில் அர்ச்சகராக பணிபுரிந்து வந்தார்.

இலக்கிய வாழ்க்கை

சிற்றிலக்கியக் கவிஞர்களில் ஒருவர். புராணம் எனும் சிற்றிலக்கிய வகைமைகளில் நகுலகிரிப் புராணம் எழுதியுள்ளார். கந்தபுராணம், திருவாதவூரடிகள் புராணம், திருச்செந்தூர் புராணம் ஆகியவற்றுக்கு பொருள் சொல்வதில் வல்லவர். முக்கியமான ஏடுகளைப் பிரதி எடுத்தல், வெள்ளேடு தயாரித்தல் என பெரும்பாலான நேரங்களை செலவு செய்தவர்.

மாணவர்கள்
  • ஆசுகவி வேலுப்பிள்ளை
  • சுதேச நாட்டியப் பத்திராதிபர் சு. நல்லதம்பி

நகுலகிரிப் புராணம்

கீரிமலைச் சிவநெறிக் கழகம் வெளியிட்டது. 1980-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. 324 பக்கங்களைக் கொண்டது. இதில் பிரம்மஶ்ரீ கா. அப்பாச்சாமி ஐயர் அவர்களின் வாழ்க்கை வரலாறு உள்ளது. அறுபத்தியெட்டு விருத்தங்களால் ஆனது.

படலங்கள்
  • திருநாட்டுப்படலம்
  • திருநகரப் படலம்
  • பாயிரப் படலம்
  • தலவிசேடமுரைத்த படலம்
  • தீர்த்த விசேடமுரைத்த படலம்
  • மூர்த்தி விசேடமுரைத்த படலம்
  • நகுலமுனி யாத்திரைப் படலம்
  • இராம யாத்திரைப் படலம்
  • நளன் யாத்திரைப் படலம்
  • அருச்சுனன் யாத்திரைப் படலம்
  • மாருதப் புரவீக வல்லி யாத்திரைப் படலம்

மறைவு

தன் இறுதி நாள் வரை சைவ சமயத்திற்கு தொண்டாற்றினார். 1925-ல் காலமானார்.

நூல் பட்டியல்

  • நகுலகிரிப் புராணம்

உசாத்துணை


✅Finalised Page