under review

ச.வைத்தியலிங்கம்பிள்ளை: Difference between revisions

From Tamil Wiki
(changed template text)
Line 26: Line 26:


== நூல்கள் ==
== நூல்கள் ==
====== எழுதியவை ======
====== எழுதியவை ======
* செல்வச் சந்நிதி முறை
* செல்வச் சந்நிதி முறை
* சிந்தாமணி நிகண்டு (1876)
* சிந்தாமணி நிகண்டு (1876)
Line 35: Line 33:
* சாதி நிர்ணய புராணம்
* சாதி நிர்ணய புராணம்
* சைவ மாகாத்மியம்
* சைவ மாகாத்மியம்
* சைவ மகத்துவ திக்கார நிக்கிரகம்
* கள்ளுகுடி சிந்து (இரண்டு பாகங்கள்)
* கள்ளுகுடி சிந்து (இரண்டு பாகங்கள்)
* மாதரொழுக்க தங்கச் சிந்து.
* மாதரொழுக்க தங்கச் சிந்து
* கணிதசாரம்
* கணிதசாரம்
* நிம்பியாகப் பொருள்
* நிம்பியாகப் பொருள்
====== உரைகள் ======
====== உரைகள் ======
* கந்தபுராணத்து அண்டகோசப்படலவுரை
* கந்தபுராணத்து அண்டகோசப்படலவுரை
* தெய்வயானை திருமணப்படலவுரை
* கந்தபுராணம்-அண்ட கோசப் படலவுரை
* வள்ளியம்மை திருமணப்படலவுரை
* கந்தபுராணம்-தெய்வயானை திருமணப் படலவுரை
* சூரபத்மன் வதைப்படலம்
* கந்தபுராணம்-வள்ளியம்மை திருமணப் படலவுரை
* கந்தபுராணம்-சூரபன்மன் வதைப் படலவுரை(இது முற்றுப்பெறவில்லை)
* சிவராத்திரி புராணம்
* சிவராத்திரி புராணம்
* கல்வளை அந்தாதி
* கல்வளையந்தாதியுரை
* கந்தரலங்காரவுரை
===== பதித்த நூல்கள் =====
* நாற்கவி ராச நம்பியகப் பொருளுரை
* சிவராத்திரி புராணம் (1881)
* சூடாமணி நிகண்டு (1875)


== உசாத்துணை ==
== உசாத்துணை ==

Revision as of 06:04, 15 December 2022

ச.வைத்திலிங்கம் பிள்ளை

ச.வைத்தியலிங்கம்பிள்ளை (1843 - செப்டெம்பர் 3, 1901) இலங்கையைச் சேர்ந்த தமிழறிஞர். சைவ அறிஞர். பழந்தமிழ் நூல் பதிப்பாளர் மற்றும் தமிழாசிரியர். இயற்றமிழ் போதகர் என அழைக்கப்பட்டார்.

பிறப்பு, கல்வி

ச.வைத்திலிங்கம் பிள்ளை வல்வெட்டித்துறையில் சங்கரப்பிள்ளைக்கு (சங்கரநாதப்பிள்ளை) மகனாக 1843-ல் (மாசி மாதம் பூர நட்சத்திரம்) பிறந்தார். உடுப்பிட்டி சிவசம்பு புலவரிடம் தமிழ் பயின்றார். நல்லூர் ஆறுமுக நாவலரின் மாணவர்களில் ஒருவர்.

இலக்கியப்பணி

வைத்திலிங்கம் பிள்ளை யாழ்ப்பாணத்தில் பாரதி நிலைய முத்திராட்சகசாலை என்ற அச்சகத்தை நிறுவி சைவ, தமிழ் நூல்களை அச்சிட்டு வெளியிட்டார். அருகிலேயே தமிழிலக்கியமும் இலக்கணமும் கற்ப்பிக்கும் பாடசாலையையும் நடத்தினார்.

ச.வைத்திலிங்கம் பிள்ளை யாழ்ப்பாணம் நல்லூர் வி.சின்னத்தம்பி புலவர் எழுதிய கல்வளை அந்தாதிக்கு உரையெழுதினார். சுன்னாகம் வரத பாண்டியர் எழுதிய சிவராத்திரி புராணம் நூலை பதிப்பித்தார். 1878-ல் "நம்பியகப் பொருள்" என்ற இலக்கண நூலுக்கு விளக்கம் எழுதினார். 1876-ல் இவர் எழுதிய சிந்தாமணி நிகண்டு இவருடைய முதன்மை நூல்.இந்நூலுக்காக சென்னையில் சி.வை.தாமோதரம் பிள்ளை ஒரு விழா எடுத்துப் பாராட்டினார்.

கண்டன இலக்கியம்

சி.வை.தாமோதரம்பிள்ளை எழுதிய "சைவமகத்துவ விளக்கம்" நூலுக்கு எழுந்த கண்டன நூலான சைவ மகத்துவ ஆபாச விளக்கம் என்னும் நூலை மறுத்து "சைவமகத்துவ பானு அல்லது சைவ மகத்துவ ஆபாச விளக்க மறுப்பு’ என்னும் நூலை எழுதியவர்.

மாணவர்கள்

மட்டக்களப்பு வித்வான் ச.பூபாலபிள்ளை இவரது மாணவர். உடுப்பிட்டி போதகர் ரெவெ.ஹோலண்ட் (Rev.Hoaland) இவரிடம் தமிழ் கற்றார். சி.ஆறுமுகம் பிள்ளை (அப்புக்குட்டி உபாத்யாயர்) போன்றவர்கள் இவரது புகழ்பெற்ற மாணவர்கள்

இதழியல்

சைவ அபிமானி என்ற பத்திரிகையை பாரதி நிலைய முத்திராக்ஷர சாலை அச்சகம் வெளியீடாக மாதமொருமுறை இவர் வெளியிட்டார். வல்வை மாணவன் என்றா பெயரில் அதில் கட்டுரைகள் எழுதினார்

மறைவு

செப்டெம்பர் 3, 1901 அன்று (ஆவணிமாதம் மூலம் நட்சத்திரம்) மறைந்தார்

இலக்கிய இடம்

ச.வைத்திலிங்கம் பிள்ளை யாழ்பாணம் ஆறுமுக நாவலருக்குப் பின்னர் இலங்கையில் உருவான சைவமீட்பு இயக்கம் மற்றும் தமிழ் மறுமலர்ச்சி இயக்கத்தின் ஆளுமைகளில் ஒருவர்

நூல்கள்

எழுதியவை
  • செல்வச் சந்நிதி முறை
  • சிந்தாமணி நிகண்டு (1876)
  • வல்வை வைத்தியேசர் பதிகம்
  • வல்வை வைத்தியேசர் ஊஞ்சல்
  • சாதி நிர்ணய புராணம்
  • சைவ மாகாத்மியம்
  • சைவ மகத்துவ திக்கார நிக்கிரகம்
  • கள்ளுகுடி சிந்து (இரண்டு பாகங்கள்)
  • மாதரொழுக்க தங்கச் சிந்து
  • கணிதசாரம்
  • நிம்பியாகப் பொருள்
உரைகள்
  • கந்தபுராணத்து அண்டகோசப்படலவுரை
  • கந்தபுராணம்-அண்ட கோசப் படலவுரை
  • கந்தபுராணம்-தெய்வயானை திருமணப் படலவுரை
  • கந்தபுராணம்-வள்ளியம்மை திருமணப் படலவுரை
  • கந்தபுராணம்-சூரபன்மன் வதைப் படலவுரை(இது முற்றுப்பெறவில்லை)
  • சிவராத்திரி புராணம்
  • கல்வளையந்தாதியுரை
  • கந்தரலங்காரவுரை
பதித்த நூல்கள்
  • நாற்கவி ராச நம்பியகப் பொருளுரை
  • சிவராத்திரி புராணம் (1881)
  • சூடாமணி நிகண்டு (1875)

உசாத்துணை


✅Finalised Page