under review

யாழ்ப்பாணச் சரித்திரம்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
Line 25: Line 25:
* தொண்டை மண்டலத்திலிருந்து வந்தவர்கள்
* தொண்டை மண்டலத்திலிருந்து வந்தவர்கள்
* 1790-ல் ஆடவர் தொகை
* 1790-ல் ஆடவர் தொகை
== உதவிய நூல்கள் ==
ம.ம.ம. அம்பலவாணர் கெக்காரியாவிடமிருந்து பெற்ற கட்லோட்டுக்காதை நூல், 1887இல் சென்னையில் மாசிலாமணி தேசிகரிடம் பெற்ற யாழ்ப்பாணம் பற்றிய குறிப்புகள், அச்சங்குளம் உடையார் மணியரத்தினம் அனுப்பிய ஓரேட்டுப்பிரதி (சாதிவரிசை பற்றிய குறிப்பு), விசுவ நாத சாஸ்திரியார் எழுதிவைத்த பலதிரட்டுக் குறிப்பு, வட்டுக்கோட்டை நா. சிவசுப்ரமணிய சிவாச்சாரியார், ஆறுமுக உபாத்தியாயர், கத்தோலிக்க பாதுகாவலர் தம்புப்பிள்ளை ஆகியோரிடம் கேட்ட கர்ணபாரம்பரிய சரித்திரம், Boake's Mannar, Ribeiro's ceilao, Obeyesekere's ceylon history, Captain H. Suckling's ceylon, Britto's Jaffna History, Sketches of ceylon History by P. Arunachalam முதலிய நூல்கள் யாழ்ப்பாணச் சரித்திரம் எழுத பயன்பட்டதாக ஆ. முத்துத்தம்பிப் பிள்ளை குறிப்பிடுகிறார்.
== இலக்கிய இடம் ==
”யாழ்ப்பாண பூர்வ சரித்திரத்திற்கு ஆதாரமான நூல்கள் வைபவமாலை, கைலாசமாலை ஆகியவை. பறங்கியர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் ஆகியோரின் காலத்தில் அவர்களால் எழுதப்பட்ட வரலாற்று நூல்கள் உள்ளன. வைபவமாலைக்கு முன் வையைபாடல் என்ற சரித்திரம் இருந்தது. வழக்கொழிந்து போனது. கர்ணபாரம் பரியக்கதை வாய்மொழியில் சொல்பவர்களும் சுருங்கியதால் யாழ்ப்பாணச் சரித்திரம் எழுதுவது முக்கியத்துவம் வாய்ந்தது” என அதன் முன்னுரையில் ஆ. முத்துத்தம்பிப் பிள்ளை குறிப்பிடுகிறார்.
== இணைப்புகள் ==
== இணைப்புகள் ==
* [https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt1lJQ0#book1/21 யாழ்ப்பாணச் சரித்திரம்: tamildigitallibrary]
* [https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt1lJQ0#book1/21 யாழ்ப்பாணச் சரித்திரம்: tamildigitallibrary]
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* யாழ்ப்பாணச் சரித்திரம்: நூலகம்
* யாழ்ப்பாணச் சரித்திரம்: நூலகம்
[[Category:Being Created]]
 
{{Ready for review}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 17:34, 14 December 2022

யாழ்ப்பாணச் சரித்திரம் (1912) ஆ.முத்துத்தம்பிப்பிள்ளை எழுதிய யாழ்ப்பாணத்தின் வரலாற்று நூல்.

எழுத்து, பிரசுரம்

1912இல் யாழ்ப்பாணச் சரித்திரம் நூலின் முதல் பதிப்பு யாழ்ப்பாணம் நாவலர் அச்சுக்கூடத்தில் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது. ஆ.முத்துத்தம்பிப் பிள்ளை எழுதிய வரலாற்று நூல். 1915இல் இரண்டாம் பதிப்பு வெளியிடப்பட்டது. 1933இல் மூன்றாம் பதிப்பு க. வைத்தியலிங்கத்தால் வெளியிடப்பட்டது. 2000இல் க. கணேசலிங்கத்தால் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு நான்காம் பதிப்பு ஸ்கந்தகுமாரால் சிட்னியில் வெளியிடப்பட்டது.

உள்ளடக்கம்

  • யாழ்ப்பாணமும் ஈழமணடலமும்
  • ஏலேலனும் யாழ்ப்பாடியும்
  • யாழ்ப்பாடிக்குப் பின்
  • சிங்கயாரியன் வழி அரசு
  • சிங்கள தமிழ் அரசுகள்
  • ஆரியச் சக்கரவர்த்தியும் பிறரும்
  • வரராசசேகரன் ஆட்சி
  • சங்கிலி அரசனாதல்
  • போர்த்துகேசர், பறங்கியர்
  • சங்கிலி பறங்கிகள் யுத்தம்
  • பறங்கிகள் கொடுமை
  • ஒல்லாந்தர், பூதத்தம்பி மறைவு
  • கூழ்ங்கைத் தம்பிரானும் பிறரும்
  • வழக்குகள், மாற்றங்கள்
  • ஆங்கிலேயர் காலம்
  • அமைதியும், வளர்ச்சியும்
  • கிறுஸ்தவர், நாவலர்
  • பூர்வ தற்கால நிலைகள்
  • யாழ்ப்பாண பூமியமைப்பு
  • 1796-ல் யாழ்ப்பாணத்து உத்தியோகஸ்தர்கள்
  • தொண்டை மண்டலத்திலிருந்து வந்தவர்கள்
  • 1790-ல் ஆடவர் தொகை

உதவிய நூல்கள்

ம.ம.ம. அம்பலவாணர் கெக்காரியாவிடமிருந்து பெற்ற கட்லோட்டுக்காதை நூல், 1887இல் சென்னையில் மாசிலாமணி தேசிகரிடம் பெற்ற யாழ்ப்பாணம் பற்றிய குறிப்புகள், அச்சங்குளம் உடையார் மணியரத்தினம் அனுப்பிய ஓரேட்டுப்பிரதி (சாதிவரிசை பற்றிய குறிப்பு), விசுவ நாத சாஸ்திரியார் எழுதிவைத்த பலதிரட்டுக் குறிப்பு, வட்டுக்கோட்டை நா. சிவசுப்ரமணிய சிவாச்சாரியார், ஆறுமுக உபாத்தியாயர், கத்தோலிக்க பாதுகாவலர் தம்புப்பிள்ளை ஆகியோரிடம் கேட்ட கர்ணபாரம்பரிய சரித்திரம், Boake's Mannar, Ribeiro's ceilao, Obeyesekere's ceylon history, Captain H. Suckling's ceylon, Britto's Jaffna History, Sketches of ceylon History by P. Arunachalam முதலிய நூல்கள் யாழ்ப்பாணச் சரித்திரம் எழுத பயன்பட்டதாக ஆ. முத்துத்தம்பிப் பிள்ளை குறிப்பிடுகிறார்.

இலக்கிய இடம்

”யாழ்ப்பாண பூர்வ சரித்திரத்திற்கு ஆதாரமான நூல்கள் வைபவமாலை, கைலாசமாலை ஆகியவை. பறங்கியர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் ஆகியோரின் காலத்தில் அவர்களால் எழுதப்பட்ட வரலாற்று நூல்கள் உள்ளன. வைபவமாலைக்கு முன் வையைபாடல் என்ற சரித்திரம் இருந்தது. வழக்கொழிந்து போனது. கர்ணபாரம் பரியக்கதை வாய்மொழியில் சொல்பவர்களும் சுருங்கியதால் யாழ்ப்பாணச் சரித்திரம் எழுதுவது முக்கியத்துவம் வாய்ந்தது” என அதன் முன்னுரையில் ஆ. முத்துத்தம்பிப் பிள்ளை குறிப்பிடுகிறார்.

இணைப்புகள்

உசாத்துணை

  • யாழ்ப்பாணச் சரித்திரம்: நூலகம்

இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்

Ready for review

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.