under review

மங்கையர் மலர்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
Line 12: Line 12:
நவராத்திரி , பொங்கல் , தீபாவளி , புத்தாண்டு என விழாக் காலங்களிலும், திருமண ஸ்பெஷல், சுற்றுலா ஸ்பெஷல் என மங்கையர் மலருடன் இலவச இணைப்பு வழங்கப்படும். இவை கட்டுரை, துணுக்கு, சமையல் குறிப்பு, அழகுக் குறிப்பு, பெண் கல்வி, சிறுகதை போன்ற பல்வேறு அம்சங்களைக் கொண்டு மூல நூல் அமைப்பிலேயே வெளிவந்தன

== இலக்கிய இடம் ==
== இலக்கிய இடம் ==
மகளிரை வெளியுலகிற்கு அறிமுகப்படுத்தல், பொதுப் பணியில் ஈடுபட வைக்கத் துணைநிற்றல், மகளிர் பலரைப் படைப்பாளராக்கி ஊக்கம் தருதல், பல்வேறு படைப்பாக்கங்களில் மகளிரைப் பங்கு
”மகளிரை வெளியுலகிற்கு அறிமுகப்படுத்தல், பொதுப் பணியில் ஈடுபட வைக்கத் துணைநிற்றல், மகளிர் பலரைப் படைப்பாளராக்கி ஊக்கம் தருதல், பல்வேறு படைப்பாக்கங்களில் மகளிரைப் பங்கு
கொள்ளச்செய்தல், பிரச்சினைகளை எதிர்த்து ஆக்கபூர்வமாகச் செயல்படுதல் போன்ற பணிகளை இதழில் முன்னிருத்தியது.
கொள்ளச்செய்தல், பிரச்சினைகளை எதிர்த்து ஆக்கபூர்வமாகச் செயல்படுதல் போன்ற பணிகளை இதழில் முன்னிருத்தியது” என முனைவர் சா. கீதா குறிப்பிடுகிறார்.
 
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* [https://archive.org/stream/dli.jZY9lup2kZl6TuXGlZQdjZM8luQy.TVA_BOK_0005864/TVA_BOK_0005864_%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_djvu.txt மகளிர் இதழ்கள்: உலக தமிழாராய்ச்சி நிறுவனம்: இதழியல் ஆய்வு தொகுதி 9: முனைவர் சா. கிருட்டினமூர்த்தி]

Revision as of 12:07, 9 December 2022

மங்கையர் மலர்

மங்கையர் மலர் (1994) பெண்களுக்கான தமிழ் மாத இதழ். பெண்களின் முன்னேற்றத்தை முதன்மை நோக்கமாகக் கொண்ட இதழ்.

வெளியீடு

மங்கையர் மலர் இதழ் 1994 முதல் பெண்களின் முன்னேற்றத்திற்கான பல்வேறு செய்திகளையும் உள்ளடக்கிய மாத இதழாக வெளிவந்து கொண்டிருக்கிறது.

நோக்கம்

மகளிர்க்கு தன்னம்பிக்கை ஊட்டல் என்பது அடிப்படைக் கோட்பாடாகக் கொண்டது. மகளிர் அனைத்துத் துறைகளிலும் மகளிர் விழிப்புணர்ச்சி பெறுவதையும் நோக்கமாகக் கொண்டது.

உள்ளடக்கம்

மங்கையர் மலரில் சமூகநலம், பொருளாதாரம், சமயம், மருத்துவம், கலை, விளையாட்டு, சமையல், மகளிர் வாழ்வியல், மகளிர் சிறப்பு, மாதர் தம் அடிப்படைப் பிரச்சினைகள், மகளிர்க்கான பொழுதுபோக்கு, மகளிர்க்கான ஆலோசனை, அழகுக்குறிப்பு, புடவை, நகை, இசை, நாடகம், நாட்டியம், கைத்தொழில் போன்ற பல்வேறு பொருள்களின் அடிப்படையில் மகளிருக்குப் பயன்படும் பல கட்டுரைத் தலைப்புகளை உள்ளடக்கியது.

கட்டுரைகள்

மகளிருக்குத் தன்னம்பிக்கை ஊட்டும் கட்டுரைகள், சமுதாயத்தில் பெண்கள் முன்னேறுவதற்கரிய கருத்துகள், தன் வாழ்வில் அவ்வாறு முன்னேறியவர்களின் பட்டறிவையும் பகிர்ந்து கொள்ளும் நேர்காணல்கள், மகளிருக்குப் பயன்படும் மருத்துவக் குறிப்புகள் ஆகிய கட்டுரைகள் வெளிவந்தன. சமூக நலம், பொருளாதாரம், கலை, விளையாட்டு, சமயக் கட்டுரைகள் ஆகியவை வெளிவந்தன.

இலவச இணைப்பு

நவராத்திரி , பொங்கல் , தீபாவளி , புத்தாண்டு என விழாக் காலங்களிலும், திருமண ஸ்பெஷல், சுற்றுலா ஸ்பெஷல் என மங்கையர் மலருடன் இலவச இணைப்பு வழங்கப்படும். இவை கட்டுரை, துணுக்கு, சமையல் குறிப்பு, அழகுக் குறிப்பு, பெண் கல்வி, சிறுகதை போன்ற பல்வேறு அம்சங்களைக் கொண்டு மூல நூல் அமைப்பிலேயே வெளிவந்தன

இலக்கிய இடம்

”மகளிரை வெளியுலகிற்கு அறிமுகப்படுத்தல், பொதுப் பணியில் ஈடுபட வைக்கத் துணைநிற்றல், மகளிர் பலரைப் படைப்பாளராக்கி ஊக்கம் தருதல், பல்வேறு படைப்பாக்கங்களில் மகளிரைப் பங்கு கொள்ளச்செய்தல், பிரச்சினைகளை எதிர்த்து ஆக்கபூர்வமாகச் செயல்படுதல் போன்ற பணிகளை இதழில் முன்னிருத்தியது” என முனைவர் சா. கீதா குறிப்பிடுகிறார்.

உசாத்துணை

இணைப்புகள்

Ready for review

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.