மங்கையர் மலர்: Difference between revisions
No edit summary |
|||
Line 14: | Line 14: | ||
== உசாத்துணை == | == உசாத்துணை == | ||
* [https://archive.org/stream/dli.jZY9lup2kZl6TuXGlZQdjZM8luQy.TVA_BOK_0005864/TVA_BOK_0005864_%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_djvu.txt மகளிர் இதழ்கள்: உலக தமிழாராய்ச்சி நிறுவனம்: இதழியல் ஆய்வு தொகுதி 9: முனைவர் சா. கிருட்டினமூர்த்தி] | * [https://archive.org/stream/dli.jZY9lup2kZl6TuXGlZQdjZM8luQy.TVA_BOK_0005864/TVA_BOK_0005864_%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_djvu.txt மகளிர் இதழ்கள்: உலக தமிழாராய்ச்சி நிறுவனம்: இதழியல் ஆய்வு தொகுதி 9: முனைவர் சா. கிருட்டினமூர்த்தி] | ||
== இணைப்புகள் == | |||
* மங்கையர் மலர்: வலைதளம் | |||
{{Ready for review}} | {{Ready for review}} | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
[[Category:பெண்கள் இதழ்கள்]] | [[Category:பெண்கள் இதழ்கள்]] |
Revision as of 16:30, 7 December 2022
மங்கையர் மலர் (1994) பெண்களுக்கான தமிழ் மாத இதழ். பெண்களின் முன்னேற்றத்தை முதன்மை நோக்கமாகக் கொண்ட இதழ்.
வெளியீடு
மங்கையர் மலர் இதழ் 1994 முதல் பெண்களின் முன்னேற்றத்திற்கான பல்வேறு செய்திகளையும் உள்ளடக்கிய மாத இதழாக வெளிவந்து கொண்டிருக்கிறது.
உள்ளடக்கம்
மங்கையர் மலரில் சமூகநலம், பொருளாதாரம், சமயம், மருத்துவம், கலை, விளையாட்டு, சமையல், மகளிர் வாழ்வியல், மகளிர் சிறப்பு, மாதர் தம் அடிப்படைப் பிரச்சினைகள், மகளிர்க்கான பொழுதுபோக்கு, மகளிர்க்கான ஆலோசனை, அழகுக்குறிப்பு, புடவை, நகை, இசை, நாடகம், நாட்டியம், கைத்தொழில் போன்ற பல்வேறு பொருள்களின் அடிப்படையில் மகளிருக்குப் பயன்படும் பல கட்டுரைகள் வெளிவந்து கொண்டுள்ளது.
கட்டுரைகள்
- மகளிருக்குத் தன்னம்பிக்கை ஊட்டும் கட்டுரைகள்
- சமுதாயத்தில் பெண்கள் முன்னேறுவதற்கரிய கருத்துகள், தன் வாழ்வில் அவ்வாறு முன்னேறியவர்களின் பட்டறிவையும் பகிர்ந்து கொள்ளும் நேர்காணல்கள்.
- மகளிருக்குப் பயன்படும் மருத்துவக் குறிப்புகள்.
இலக்கிய இடம்
மகளிரை வெளியுலகிற்கு அறிமுகப்படுத்தல், பொதுப் பணியில் ஈடுபட வைக்கத் துணைநிற்றல், மகளிர் பலரைப் படைப்பாளராக்கி ஊக்கம் தருதல், பல்வேறு படைப்பாக்கங்களில் மகளிரைப் பங்கு கொள்ளச்செய்தல், பிரச்சினைகளை எதிர்த்து ஆக்கபூர்வமாகச் செயல்படுதல் போன்ற பணிகளை இதழில் முன்னிருத்தியது. மகளிர் அனைத்துத் துறைகளிலும் விழிப்புணர்ச்சி பெறுவதையும் நோக்கமாகக் கொண்டது.
உசாத்துணை
இணைப்புகள்
- மங்கையர் மலர்: வலைதளம்
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.