பறையன்பட்டு சமணக்குகைகள்: Difference between revisions

From Tamil Wiki
(Created page with " = '''பறையன்பட்டு - ஆராதன் நிசி திகை''' = தென்னார்க்காடு மாவட்டத்தில் செஞ்சியிலிருந்து ஏறத்தாழ 32 கிலோ மீட்டர் வடக்கிலுள்ளது பறையன் பட்டு என்னும் சிற்றூராகும். செஞ்சியிலிருந்து அவல...")
 
No edit summary
Line 1: Line 1:
[[File:Parai.jpg|thumb|பறையன்பட்டு வட்டெழுத்து கல்வெட்டு]]
பறையன்பட்டு  (ஆராதன் நிசி திகை) செஞ்சி அருகே பறையன்பட்டு என்னும் ஊரிலுள்ள சுனைப்பாறை என்னும் மலைமேல் அமைந்துள்ள சமணக் குகைகள்.

= '''பறையன்பட்டு - ஆராதன் நிசி திகை''' =
== இடம் ==
தென்னார்க்காடு மாவட்டத்தில் செஞ்சியிலிருந்து ஏறத்தாழ 32 கிலோ மீட்டர் வடக்கிலுள்ளது பறையன் பட்டு என்னும் சிற்றூராகும். செஞ்சியிலிருந்து அவலூர்பேட்டை வழியாகச் சேத்துப்பட்டு செல்லும் சாலையை ஒட்டியுள்ள கப்ளாம்பாடி என்னும் ஊரிலிருந்து இரண்டு கிலோ மீட்டர் வடக்காக நடந்து சென்றால் பறையன்பட்டினை அடையலாம். இவ்வூரிலுள்ள மலையினை சுனைப்பாறை என்றழைப்பர். இந்த மலையின் வடமேற்குப் பகுதியில் இயற்கையாக அமைந்த குகையும், அதனுள் ஏறத்தாழ ஏழு அடி நீளமுள்ள கற்படுக்கையும் காணப்படுகிறது. குகையுள்ள பாறையின் மேற்பகுதியில் ஐந்து வரிகளாலான வட்டெழுத்துக் கல்வெட்டொன்று பொறிக்கப்பட்டுள்ளது. அதன் வாசகம் பின் வருமாறு:
தென்னார்க்காடு மாவட்டத்தில் செஞ்சியிலிருந்து ஏறத்தாழ 32 கிலோ மீட்டர் வடக்கிலுள்ளது பறையன் பட்டு என்னும் சிற்றூர்.செஞ்சியிலிருந்து அவலூர்பேட்டை வழியாகச் சேத்துப்பட்டு செல்லும் சாலையை ஒட்டியுள்ள கப்ளாம்பாடி என்னும் ஊரிலிருந்து இரண்டு கிலோ மீட்டர் வடக்காக நடந்து சென்றால் பறையன்பட்டினை அடையலாம். இவ்வூரிலுள்ள மலையினை சுனைப்பாறை என்று அழைப்பார்கள்..
[[File:Screenshot (103).png|thumb|மலை]]
 
== அமைப்பு ==
இந்த மலையின் வடமேற்குப் பகுதியில் இயற்கையாக அமைந்த குகையும், அதனுள் ஏறத்தாழ ஏழு அடி நீளமுள்ள கற்படுக்கையும் காணப்படுகிறது. பறையன் பட்டிலுள்ள குகைப்பாழி ஆராதன் என்ற துறவி உண்ணாநோன்பிருந்து உயிர் நீத்ததன் நினைவாகப்படுக்கை ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது. இது கல்விக்கூடமோ பல துறவியர் வாழ்ந்த இடமோ அல்ல. இது நீத்தார் நினைவுப் பாழி.
 
== கல்வெட்டு ==
குகைக்குள் பாறையின் மேற்பகுதியில் ஐந்து வரிகளாலான வட்டெழுத்துக் கல்வெட்டொன்று பொறிக்கப்பட்டுள்ளது. அதன் வாசகம் பின் வருமாறு:

நமோத்து பாணாட்டு வச்
நமோத்து பாணாட்டு வச்
Line 13: Line 22:
சீதிகை[1]
சீதிகை[1]

அதாவது பாண நாட்டைச் சார்ந்த வச்சிர நந்தி ஆச்சாரியாரின் மாணாக்கராகிய ஆராதன் என்பவர் உண்ணா நோன்பு இருந்து உயிர் நீத்தார் என்பது பொருளாகும்,
பாண நாட்டைச் சார்ந்த வச்சிர நந்தி ஆச்சாரியாரின் மாணாக்கராகிய ஆராதன் என்பவர் உண்ணா நோன்பு இருந்து உயிர் நீத்தார் என்பது பொருள்.

இக் கல்வெட்டிலுள்ள எழுத்துக்களின் வரிவடிவ அமைப்பினைக் கொண்டு, இச்சாசனம் கி.பி. 5-6ஆம் நூற்றாண்டினைச் சார்ந்ததெனக் கூறப்படுகிறது.
இக் கல்வெட்டிலுள்ள எழுத்துக்களின் வரிவடிவ அமைப்பினைக் கொண்டு, இச்சாசனம் கி.பி. 5-6ஆம் நூற்றாண்டினைச் சார்ந்ததெனக் கூறப்படுகிறது.

பறையன்பட்டிலுள்ள குகையில் ஆராதன் என்னும் துறவி உண்ணா நோன்புற்று உயிர் துறந்ததன் நினைவாக கற்படுக்கை அமைக்கப்பட்டிருக்கிறது. இதுவன்றி அவர் உண்ணா நோன்பிருத்தற் பொருட்டு படுக்கை அமைத்ததாகவும் பொருள் கொள்ளலாம். இது எவ்வாறாயினும் இவ்வூருடன் சமண சமயத் தொடர்பு கி.பி. 5-அல்லது 6-ஆம் நூற்றாண்டிலேயே ஏற்பட்டிருக்கிறது என்பது தெளிவாகிறது.
பறையன்பட்டிலுள்ள குகையில் ஆராதன் என்னும் துறவி உண்ணா நோன்புற்று உயிர் துறந்ததன் நினைவாக கற்படுக்கை அமைக்கப்பட்டிருக்கிறது. இதுவன்றி அவர் உண்ணா நோன்பிருத்தற் பொருட்டு படுக்கை அமைத்ததாகவும் பொருள் கொள்ளலாம். இவ்வூருடன் சமண சமயத் தொடர்பு கி.பி. 5-அல்லது 6-ஆம் நூற்றாண்டிலேயே ஏற்பட்டிருக்கிறது என்பது தெளிவாகிறது.

இந்த கல்வெட்டு கூறும் வச்சிர நந்தியும், கி.பி. 470-ஆம் ஆண்டில் மதுரை நகரில் திராவிட சங்கத்தை நிறுவிய வஜ்ரநந்தியும் ஒருவரே என்று கருதப்படுகிறது. லோகவிபாகம் என்ன சமண நூலில் பாணராட்டிரம் (பாண நாடு) குறிப்பிடப்பட்டிருப்பதையும், பறையன்பட்டு கல்வெட்டின் காலத்தையும் கருத்தில் கொண்டு இவ்வாறு கூறப்பட்டுள்ளது.[2] ஆனால் இக்கருத்தினை உறுதி செய்வதற்கு சான்றுகள் போதியவையாக இல்லையென்றே தோன்றுகிறது. ஏனெனில் பல்வேறு காலக் கட்டங்களில் வஜ்ர நந்தி என்ற பெயரில் பல சமண அறவோர்கள் வாழ்ந்திருந்ததாக அறிய வருகிறோம்.
இந்த கல்வெட்டு கூறும் வச்சிர நந்தியும், கி.பி. 470-ஆம் ஆண்டில் மதுரை நகரில் திராவிட சங்கத்தை நிறுவிய வஜ்ரநந்தியும் ஒருவரே என்று கருதப்படுகிறது. லோகவிபாகம் என்ன சமண நூலில் பாணராட்டிரம் (பாண நாடு) குறிப்பிடப்பட்டிருப்பதையும், பறையன்பட்டு கல்வெட்டின் காலத்தையும் கருத்தில் கொண்டு இவ்வாறு கூறப்பட்டுள்ளது. (கோ. கிருட்டினமூர்த்தி, ‘செஞ்சிப்பகுதியில் புதிய சமணக் கல்வெட்டு, முக்குடை, ஜூலை, 1985, பக். )  ஆனால் இக்கருத்தினை உறுதி செய்வதற்கு சான்றுகள் போதியவையாக இல்லையென்றே தோன்றுகிறது என ஏ.ஏகாம்பரநாதன் கருதுகிறார். பல்வேறு காலக் கட்டங்களில் வஜ்ர நந்தி என்ற பெயரில் பல சமண அறவோர்கள் வாழ்ந்திருந்ததாக அறிய வருகிறது என்கிறார்.

பறையன்பட்டிலுள்ள கல்வெட்டு கூறும் பாண நாடு தொண்டை மண்டலத்தின் ஒரு பகுதியாகிய தென்னார்க்காடு, சித்தூர் மாவட்டங்களை உள்ளடக்கியதாகும். இந்த நிலப்பரப்பினை வாணர்கள் (பாணர்கள்) என்னும் சிற்றரச பரம்பரையினர் ஆட்சி செய்து வந்தமையால் பாண நாடு என அழைக்கப் பெறலாயிற்று.
பறையன்பட்டிலுள்ள கல்வெட்டு கூறும் பாண நாடு தொண்டை மண்டலத்தின் ஒரு பகுதியாகிய தென்னார்க்காடு, சித்தூர் மாவட்டங்களை உள்ளடக்கியது.இந்த நிலப்பரப்பினை வாணர்கள் (பாணர்கள்) என்னும் சிற்றரச பரம்பரையினர் ஆட்சி செய்து வந்தமையால் பாண நாடு என அழைக்கப் பெறலாயிற்று.

பறையன் பட்டிலுள்ள குகைப்பாழி பிற இடங்களிலுள்ள பாழிகளைக் காட்டிலும் வேறான தன்மையுடையதாகும். பிற இடங்களிலுள்ள பாழிகளில் சமணத் துறவியர் உறைந்து துறவறம் மேற் கொண்டும், சமய போதனைகள் செய்தும் வந்துள்ளமையை அறியக் கிடக்கிறோம். ஆராதன் என்ற துறவி உண்ணாநோன்பிருந்து உயிர் நீத்ததன் நினைவாகப்படுக்கை ஏற்படுத்தப்பட்டிருக்கின்றதே தவிர, பல துறவியர் இங்கு உறைந்து, சமய நெறி போற்றுவதற்காகப் படுக்கைகள் அமைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். அந்த வகையில் இது நீத்தார் நினைவுப் பாழியாகத் திகழ்கிறதெனலாம்.
== உசாத்துணை ==
----[1] கோ. கிருட்டினமூர்த்தி, ‘செஞ்சிப்பகுதியில் புதிய சமணக் கல்வெட்டு, முக்குடை, ஜூலை, 1985, பக். 9

[2] Ibid., p. 8
* ஏ.ஏகாம்பரநாதன் தொண்டைநாட்டு சமணத்தலங்கள்
* https://m.facebook.com/groups/heritageinspired/permalink/865608617115745/
* https://jainqq.org/explore/250266/4
* https://www.herenow4u.net/index.php?id=76043

Revision as of 11:39, 8 February 2022

பறையன்பட்டு வட்டெழுத்து கல்வெட்டு

பறையன்பட்டு (ஆராதன் நிசி திகை) செஞ்சி அருகே பறையன்பட்டு என்னும் ஊரிலுள்ள சுனைப்பாறை என்னும் மலைமேல் அமைந்துள்ள சமணக் குகைகள்.

இடம்

தென்னார்க்காடு மாவட்டத்தில் செஞ்சியிலிருந்து ஏறத்தாழ 32 கிலோ மீட்டர் வடக்கிலுள்ளது பறையன் பட்டு என்னும் சிற்றூர்.செஞ்சியிலிருந்து அவலூர்பேட்டை வழியாகச் சேத்துப்பட்டு செல்லும் சாலையை ஒட்டியுள்ள கப்ளாம்பாடி என்னும் ஊரிலிருந்து இரண்டு கிலோ மீட்டர் வடக்காக நடந்து சென்றால் பறையன்பட்டினை அடையலாம். இவ்வூரிலுள்ள மலையினை சுனைப்பாறை என்று அழைப்பார்கள்..

மலை

அமைப்பு

இந்த மலையின் வடமேற்குப் பகுதியில் இயற்கையாக அமைந்த குகையும், அதனுள் ஏறத்தாழ ஏழு அடி நீளமுள்ள கற்படுக்கையும் காணப்படுகிறது. பறையன் பட்டிலுள்ள குகைப்பாழி ஆராதன் என்ற துறவி உண்ணாநோன்பிருந்து உயிர் நீத்ததன் நினைவாகப்படுக்கை ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது. இது கல்விக்கூடமோ பல துறவியர் வாழ்ந்த இடமோ அல்ல. இது நீத்தார் நினைவுப் பாழி.

கல்வெட்டு

குகைக்குள் பாறையின் மேற்பகுதியில் ஐந்து வரிகளாலான வட்டெழுத்துக் கல்வெட்டொன்று பொறிக்கப்பட்டுள்ளது. அதன் வாசகம் பின் வருமாறு:

நமோத்து பாணாட்டு வச்

சணந்தி ஆசாரிய

ர் (ம) ணாக்க ராராத (ன்)

நோற்று முடித்த (நி)

உசாத்துணை