under review

கிங்ஸ்பரித் தேசிகர்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
Line 12: Line 12:
இவர் சென்னையில் வாழ்ந்துகொண்டிருந்தபோது கிறித்தவ தேவாலயக் குழுவினர் இவரை மதவிரோதி என குற்றம் சாட்டினர். தேசிகருடைய நியாயங்களை சபையினர் ஏற்க முடியாமல் தயங்கினர். 1927-ல் பசுமலையில் கூடிய தென்னிந்திய ஐக்கிய திருச்சபையின் பொது மாநாடு கிங்ஸ்பரித் தேசிகரின் சமயக்கொள்கை, நடைமுறை பற்றிக் கண்டனம் செய்து, "தேசிகர்ப்" பட்டத்தினை நிராகரித்தனர். அவரை ஏற்றுக்கொண்டனர்.

== இலக்கிய வாழ்க்கை ==
== இலக்கிய வாழ்க்கை ==
ஏசு வரலாற்றை தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதினார். “சாந்திர காசம்” என்ற வசன நாடகத்தை எழுதினார். நாடக நூல்கள் சில எழுதினார். சென்னைப் பல்கலைக்கழகப் பேரகராதிக் குழுவில் இவர் உறுப்பினராக இருந்தார். 1948-ல் மனோன்மணி நாடகம் இலங்கையில் அச்சிடப்பட்டது. கவிதைகள் எழுதினார்.
ஏசு வரலாற்றை தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதினார். “சாந்திர காசம்” என்ற வசன நாடகத்தை எழுதினார். நாடக நூல்கள் சில எழுதினார். சென்னைப் பல்கலைக்கழகப் பேரகராதிக் குழுவில் இவர் உறுப்பினராக இருந்தார். 1948-ல் மனோன்மணி நாடகம் இலங்கையில் அச்சிடப்பட்டது.
 
== மறைவு ==
== மறைவு ==
கிங்ஸ்பரித் தேசிகர் ஏப்ரல் 12, 1941-ல் கொழும்பு அரசினர் வைத்திய சாலையில் காலமானார்.
கிங்ஸ்பரித் தேசிகர் ஏப்ரல் 12, 1941-ல் கொழும்பு அரசினர் வைத்திய சாலையில் காலமானார்.

Revision as of 15:20, 15 October 2022

கிங்ஸ்பரித் தேசிகர் கையெழுத்து

கிங்ஸ்பரித் தேசிகர் (பிரான்சிஸ் கிங்ஸ்பரி) (அழகசுந்தரம்) (ஆகஸ்ட் 8 1873-1941) ஈழத்து தமிழ் அறிஞர், ஆசிரியர், கிறுஸ்தவ மதப்போதகர். சென்னைப் பல்கலைக்கழகப் பேரகராதிக் குழுவில் இவர் உறுப்பினராக இருந்தார்.

வாழ்க்கைக் குறிப்பு

கிங்ஸ்பரித் தேசிகர் 1873-ல் சி.வை. தாமோதரம் பிள்ளை, நாகமுத்து அம்மையாருக்கு நான்காவது மகனாக சென்னை தண்டையார்ப்பேட்டையில் பிறந்தார். இயற்பெயர் அழகுசுந்தாரம். சென்னையிலும் யாழ்ப்பாணத்திலுமாக மாறிமாறிச் சென்றமையால் கல்வி இடையிடை தடைபட்டது. சென்னை, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் கல்வி கற்றார். இளமைக் காலத்தில் நிகண்டு, நன்னூல் ஆகியவற்றைக் கற்றார். சென்னைக் கிறிஸ்தவக் கல்லூரியில் டாக்டர். மில்லர் (Dr. Miller), டாக்டர். ஸ்க்கினர் (Dr. Skinner) ஆகிய பேராசிரியர்களிடம் கல்வி கற்றார்.

தனி வாழ்க்கை

கிங்ஸ்பரித் தேசிகர் ஆந்திரநாட்டைச் சார்ந்த நெல்லூரில் வைத்தியசேவை து செய்து கொண்டிருந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிதம்பர பிள்ளையின் மகளான மரியம்மாள் இரத்தினம் சமாதானம் அம்மையாரை ஆகஸ்ட் 14, 1893-ல் திருமணம் செய்துகொண்டார்.

ஆசிரியப்பணி

1924-ல் சென்னைத் தமிழகராதிக் குழுவினருள் துணையாசிரியராக நியமனம் பெற்று இரண்டு ஆண்டுகள் வரை பணியாற்றினார். 1926-ல் கொழும்பில் அமைக்கப்பட்டிருந்த பல்கலைக்கழகத்தில் விரிவிரையாளராக நியமனம் பெற்றார். தேவாலயங்களிலும் நண்பர்கள் பற்பலர் வீடுகளிலும் போதித்தார். வானெலியில் பேசினார். விவேகானந்த சபை-ராமக்கிருஷ்ண மிஷன்-அன்பு மார்க்க சங்கம் ஆகியவற்றின் நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றார். 1936-ல் கொழும்புப் பல்கலைக்கழகத்திலிருந்து ஓய்வு பெற்றார்.

ஆன்மிகம்

சைவக் குடும்பத்திலே தோன்றிய அழகுசுந்தரம் பிப்ரவரி 19, 1893-ல் கிறித்தவராக ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டார். 1898-ல் தென்னிந்தியாவிலுள்ள பசுமலைத் தேவாலயத்தில் உதவிப் போதகராக நியமனம் பெற்றார். அடுத்த ஆண்டில் அத்தேவாலயத்திலேயே தேசிகராக அபிஷேகம் பெற்றார். 1906-ல் கிறிஸ்தவ வாலிபர் சங்கத்தில் உறுப்பினராகச் சேர்ந்தார். ஓராண்டு காலமாக இலங்கை, இந்தியா, பர்மா ஆகிய இடங்களுக்குச் சுற்றுப் பிரயாணம் செய்தார். இந்திய கிறித்தவ வாலிப சங்கத்தில் உறுப்பினராகச் சேர்ந்து ஜப்பானில் நடைபெற்ற அகில உலகக் கிறித்தவ மாநாட்டுக்குப் பிரதிநிதியாகச் சென்றர். 1908-ல் பசுமலைக்குத் திரும்பிய இவருக்கு, 1910ஆம் ஆண்டு தொடக்கமாகப் பெங்களூரில் அமைந்திருந்த ஆன்மபோதகக் கலாசாலையில் தமிழ் சமஸ்கிருதம், சைவம் ஆகிய பாடங்களைக் கற்பிக்கும் விரிவுரையாளர் பதவி கிடைத்தது. 1919-ல் போர் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, விரிவுரையாளர் பதவியிலிருந்து நீங்கி, இந்தியப் பட்டாளத்துக்குப் புரோகிதராகச் சேவை செய்தார். 1923-ல் அச்சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்.

விவாதம்

இவர் சென்னையில் வாழ்ந்துகொண்டிருந்தபோது கிறித்தவ தேவாலயக் குழுவினர் இவரை மதவிரோதி என குற்றம் சாட்டினர். தேசிகருடைய நியாயங்களை சபையினர் ஏற்க முடியாமல் தயங்கினர். 1927-ல் பசுமலையில் கூடிய தென்னிந்திய ஐக்கிய திருச்சபையின் பொது மாநாடு கிங்ஸ்பரித் தேசிகரின் சமயக்கொள்கை, நடைமுறை பற்றிக் கண்டனம் செய்து, "தேசிகர்ப்" பட்டத்தினை நிராகரித்தனர். அவரை ஏற்றுக்கொண்டனர்.

இலக்கிய வாழ்க்கை

ஏசு வரலாற்றை தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதினார். “சாந்திர காசம்” என்ற வசன நாடகத்தை எழுதினார். நாடக நூல்கள் சில எழுதினார். சென்னைப் பல்கலைக்கழகப் பேரகராதிக் குழுவில் இவர் உறுப்பினராக இருந்தார். 1948-ல் மனோன்மணி நாடகம் இலங்கையில் அச்சிடப்பட்டது.

மறைவு

கிங்ஸ்பரித் தேசிகர் ஏப்ரல் 12, 1941-ல் கொழும்பு அரசினர் வைத்திய சாலையில் காலமானார்.

நூல் பட்டியல்

  • ஏசு வரலாறு
  • இராமன் கதை
  • பாண்டவர் கதை
  • கிருஷ்ணன் கதை
  • சாந்திர காசம் (1941)
  • கடவுள் வாழ்த்துப்பா
  • அகப்பொருட் குறள்
ஆங்கிலம்
  • Life of Jesus
  • Jesus of Nazareth.
  • Hymns of the Tamil Saivite Saints
  • History Of Tamil Literature

உசாத்துணை

இணைப்புகள்

இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்

Ready for review

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.