96 தத்துவங்கள்: Difference between revisions
Removed Category:Spc |
No edit summary |
||
| Line 436: | Line 436: | ||
* [https://tamilandvedas.com/2018/02/13/96-%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B5%E0%AF%88-post-no-4737/ தமிழ் அண்ட் வேதாஸ் தளம்] | * [https://tamilandvedas.com/2018/02/13/96-%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B5%E0%AF%88-post-no-4737/ தமிழ் அண்ட் வேதாஸ் தளம்] | ||
* [https://shaivam.org/information-to-know/96-tattvas 96 தத்துவங்கள்: சைவம்.ஆர்க் தளம்] <br /> | * [https://shaivam.org/information-to-know/96-tattvas 96 தத்துவங்கள்: சைவம்.ஆர்க் தளம்] <br /> | ||
{{Finalised}} | {{Finalised}} | ||
{{Fndt|22-Jan-2023, 08:52:47 IST}} | {{Fndt|22-Jan-2023, 08:52:47 IST}} | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
Latest revision as of 15:20, 12 October 2026
To read the article in English: 96 Thathuvangal (Tattvas) (Philosophies).

மனித உடலில் 96 தத்துவங்கள் செயல்படுகின்றன. இது பற்றி யோக நூல்கள் விரிவாக விளக்கியுள்ளன. திருமந்திரத்திலும் மானுட உடலில் செயல்படும் 96 தத்துவங்கள் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.
96 தத்துவங்கள் விளக்கம்
| பூதங்கள் | 5 |
| பொறிகள் | 5 |
| புலன்கள் | 5 |
| கன்மேந்திரியங்கள் | 5 |
| ஞானேந்திரியங்கள் | 5 |
| கரணங்கள் | 4 |
| அறிவு | 1 |
| நாடிகள் | 10 |
| வாயுக்கள் | 10 |
| ஆசயங்கள் | 5 |
| கோசங்கள் | 5 |
| ஆதாரங்கள் | 6 |
| மண்டலங்கள் | 3 |
| மலங்கள் | 3 |
| தோஷங்கள் | 3 |
| ஈசனைகள் | 3 |
| குணங்கள் | 3 |
| வினைகள் | 2 |
| விவகாரம் | 8 |
| அவத்தை | 5 |
| மொத்தத் தத்துவங்கள் | 96 |
திருமந்திரத்தில் 96 தத்துவ விளக்கம்
திருமந்திரத்தில் மானுட உடலில் செயல்படும் 96 தத்துவங்கள் பற்றிய குறிப்புகள் உள்ளன.
முப்பதும் முப்பதும் முப்பத்தறுவரும்
செப்ப மதிலிடைக் கூட்டில் வாழ்பவர்
செப்ப மதிலிடைக் கூடு சிதைந்த பின்
ஒக்க அனைவரும் ஓட்டெடுத்தாரே
(பாடல்: எண் - 154; முதல் தந்திரம்; யாக்கை நிலையாமை)
- என்று திருமந்திரம் கூறுகிறது. 'முப்பதும் முப்பதும் முப்பத்தறுவரும்' என்பதன் படி 30 + 30 + 36 = 96 தத்துவங்கள் உடலில் செயல்படுகின்றன என்றும், உடல் சிதைந்தபின் உடலை விட்டு வெளியேறிவிடுகின்றன என்றும் திருமந்திரம் கூறுகிறது.
தத்துவங்களின் உட்பிரிவுகள்
இந்த 96 தத்துவங்களில் 36 தத்துவங்கள் உட்கருவிகளாகவும், 60 தத்துவங்கள் புறக்கருவிகளாகவும் அமைந்துள்ளன.
| பூதங்கள் - 5 | |
|---|---|
| 1.பிருதிவி - நிலம் | எலும்பு, மாமிசம், தோல், முடி, நாடி முதலியன. |
| 2.அப்பு- நீர் | உதிரம், உமிழ்நீர், சிறுநீர், விந்து, வியர்வை முதலியன. |
| 3.தேயு - நெருப்பு | அகங்காரம், சோம்பல், புணர்ச்சி, நித்திரை, பயம் முதலியன. |
| 4.ஆகாயம் - விண் | ஓடல், இருத்தல், நடத்தல், கிடத்தல், நிற்றல் முதலியன. |
| 5.வாயு - காற்று | காமம், குரோதம், கோபம், மோகம், மதம் முதலியன. |
| பொறிகள் - 5 | |
| 1. மெய் | குளிர்ச்சி, வெப்பம், மென்மை, வன்மை அறிதல். |
| 2. வாய் | உப்பு, புளிப்பு, இனிப்பு, கைப்பு, கார்ப்பு, துவர்ப்பு என்னும் அறுசுவைகளை அறிதல். |
| 3. கண் | நிறம், நீளம் , உயரம்,குட்டை, பருமன், மெலிவு போன்ற பத்து தன்மைகளை அறிதல். |
| 4. மூக்கு | வாசனை நுகர்ச்சி. |
| 5. செவி | ஓசை அறிதல். |
| புலன்கள் - 5 | |
| 1. தொடு உணர்வு | |
| 2. வாசனை உணர்வு | |
| 3. சுவை உணர்வு | |
| 4. ஒளி உணர்வு | |
| 5. ஒலி உணர்வு | |
| கன்மேந்திரியங்கள் - 5 (தொழில் உறுப்புகள்) | |
| 1. கைகள் | |
| 2. கால்கள் | |
| 3. நாக்கு | |
| 4. குதம் - எருவாய் | |
| 5. குய்யம் -கருவாய் | |
| ஞானேந்திரியங்கள் - 5 | |
| 1. தோல் | |
| 2. நாக்கு | |
| 3. மூக்கு | |
| 4. கண் | |
| 5. காது | |
| கரணங்கள் - 4 (அந்த கரணங்கள்-அகக்கருவிகள்-4) | |
| 1. மனம் | |
| 2. புத்தி | |
| 3. சித்தம் (நினைவு) | |
| 4. அகங்காரம் | |
| அறிவு - 1 | |
| தச நாடிகள் (10) | |
| 1. இடகலை (சந்திரகலை) | வலக்கால் பெருவிரல் முதல் இடது மூக்கு துவாரத்தைப்பற்றி நிற்கும். |
| 2. பிங்கலை (சூரிய கலை) | இடதுகால் பெருவிரல் முதல் வலது மூக்குத்துவாரத்தைப்பற்றி நிற்கும். |
| 3. சுழுமுனை(சுஷும்னா நாடி) | குதம் முதல் சிரசு வரை செயல்படும். |
| 4. சிகுவை (உள்நாக்கு நாடி) | மூலாதாரத்திலிருந்து உள்நாக்கு வரை உணவு, நீரை விழுங்கச்செய்யும். |
| 5. புருடன் (வலக்கண் நாடி) | மூலாதரத்திலிருந்து வலக்கண் ஓரம் வரை பொருட்களைக் காணச்செய்யும். |
| 6. காந்தாரி | மூலாதாரத்திலிருந்து இடக்கண் ஓரம் வரை பொருட்களைக் காணச்செய்யும். |
| 7. அத்தி | மூலாதாரத்திலிருந்து வலக்காது வரை காதுகளில் ஒலி கேட்கச் செய்யும். |
| 8. அலம்புடை | மூலாதாரத்திலிருந்து இடதுகாது வரை காதுகளில் பல சப்தங்கள் கேட்கச் செய்யும். |
| 9. சங்கினி | மூலதாரத்திலிருந்து ஆண்/பெண் இனக்குறி வரை. |
| 10. குகு | அனாகதம் முதல் லிங்க குதஸ்தானம் வரை. |
| தச வாயுக்கள் (10) | |
| 1. பிராணன் | உயிர்க்காற்று-உணவை ஜீரணிக்கும்.நீல நிறம். |
| 2. அபானன் | அபான வாயு-உணவைச் செரித்து மலஜலத்தைத் தள்ளும். பச்சை நிறம். |
| 3. வியானன் | ஒலிக்காற்று இருப்பிடம் - இதயம். |
| 4. உதானன் | தொழில் காற்று |
| 5. சமானன் | தொப்புளிலிருந்து கால் வரை. புஷ்பராக நிறம். |
| 6. நாகன் | பாட, கண்திறக்க, இமை முடி சிலிர்க்க உதவும். பொன் நிறம். |
| 7. கூர்மன் | தும்மல் காற்று - கொட்டாவி, கண் மூட, திறக்க, காண உதவும். வெண்மை நிறம். |
| 8. கிருகரன் | விழிக்காற்று-தும்மல், இருமல் உண்டு பண்ணும். கருப்பு நிறம் |
| 9. தேவதத்தன் | தர்க்கம், சண்டை, கோபம் உண்டு பண்ணும். படிக நிறம் |
| 10. தனஞ்சயன் | மனிதன் இறந்தபின், மற்ற வாயுக்கள் எல்லாம் போனபின் உடலை வீங்கச் செய்து பின் இறுதியாக வெளியேறும். நீல நிறம். |
| ஆசயங்கள் - 5 (குடல்கள்) | |
| 1. அமர் ஆசயம் | இரைகுடல் |
| 2. பகர் ஆசயம் | செரிகுடல் |
| 3. சல ஆசயம் | நீர்க்குடல் |
| 4. மல ஆசயம் | மலக்குடல் |
| 5. சுக்கில ஆசயம் | வெண்ணீர் குடல் |
| கோசங்கள் - 5 | |
| 1.அன்னமய கோசம் | |
| 2.மனோமய கோசம் | |
| 3.பிராணமய கோசம் | |
| 4.விஞ்ஞானமய கோசம் | |
| 5.ஆனந்தமய கோசம் | |
| ஆதாரங்கள் - 6 | |
| 1. மூலாதாரம் | |
| 2. சுவாதிஷ்டானம் | |
| 3. மணிபூரகம் | |
| 4. அனாகதம் | |
| 5. விசுக்தி | |
| 6. ஆக்ஞை | |
| மண்டலங்கள் - 3 | |
| 1. சூரிய மண்டலம் (வலது நாசிக்காற்று) | |
| 2. சந்திர மண்டலம் (இடது நாசிக்கற்று) | |
| 3. அக்கினி மண்டலம் (சுழுமுனை) | |
| மலங்கள் - 3 | |
| 1. ஆணவம் (அகங்காரம்) | |
| 2. கன்மம் (பழிச்செயல், வன்மம்) | |
| 3. மாயை | |
| தோஷங்கள் - 3 | |
| 1.வாதம் | |
| 2.பித்தம் | |
| 3.சிலேத்துமம் | |
| ஈசனை - 3 | |
| 1.பொருட்பற்று | |
| 2.புத்திரப்பற்று | |
| 3.உலகப்பற்று | |
| குணங்கள் - 3 | |
| 1. ராஜஸ குணம் | |
| 2. தாமஸ குணம் | |
| 3. சாத்வீக குணம் | |
| வினை - 2 | |
| 1 நல்வினை
2. தீவினை (அல்லது) 1. முன்வினை (சஞ்சிதம்+பிராரப்தம்) 2. பின்வினை (ஆகாமியம்) |
|
| விவகாரம் - 8 | |
| 1. காமம் | |
| 2. குரோதம் | |
| 3. உலோபம் (கருமித் தன்மை) | |
| 4. மோகம் | |
| 5. மதம் (வெறி) | |
| 6. மாச்சரியம் (பொறாமை) | |
| 7. இடும்பை (துன்பம் விளைவித்தல்) | |
| 8. அகங்காரம் (நான் எனும் கர்வம்) | |
| அவத்தை - 5 | |
| 1. ஜாக்ரத் (நினைவு) | |
| 2. சொப்பனம் (கனவு) | |
| 3. சுழுத்தி (உறக்கம்) | |
| 4. துரியம் (பேருறக்கம்) | |
| 5. துரியாதீதம் (நிஷ்டை) |
இந்த 96 தத்துவங்களில் ஏதாவது மாற்றம் ஏற்படின் உடல் நோய்வாய்ப்படுகிறது. ஐம்பூதங்களும் சரிவர இயங்காவிடில் உடலின் இயக்கம் பாதிக்கப்படுகிறது.
உசாத்துணை
- தத்துவங்கள் 96
- 96 வகை தத்துவங்கள்: விதை 2 விருட்சம்
- ta.quora.com
- சித்தர்கள் கூறும் 96 தத்துவங்கள்
- தத்துவங்கள் 96
- தமிழ் அண்ட் வேதாஸ் தளம்
- 96 தத்துவங்கள்: சைவம்.ஆர்க் தளம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
22-Jan-2023, 08:52:47 IST