விட்டல் ராவ்: Difference between revisions
Corrected typo errors; Corrected year suffix text; |
|||
| Line 13: | Line 13: | ||
விட்டல் ராவ் 1963-ம் ஆண்டு சென்னை தொலைபேசி அலுவலகத்தில் பணியில் சேர்ந்து மே 2002-ல் பணியிலிருந்து ஓய்வு பெற்றார். பணி ஓய்வுக்குப்பின் தற்போது பெங்களூரில் வசிக்கிறார். | விட்டல் ராவ் 1963-ம் ஆண்டு சென்னை தொலைபேசி அலுவலகத்தில் பணியில் சேர்ந்து மே 2002-ல் பணியிலிருந்து ஓய்வு பெற்றார். பணி ஓய்வுக்குப்பின் தற்போது பெங்களூரில் வசிக்கிறார். | ||
விட்டல்ராவ் கமலாவை | விட்டல்ராவ் கமலாவை 1973-ல் மணம் புரிந்துகொண்டார். ஒரே மகள் ஹரிணி. | ||
[[File:With pavannan .JPG|thumb|நண்பர் பாவண்ணனுடன்]] | [[File:With pavannan .JPG|thumb|நண்பர் பாவண்ணனுடன்]] | ||
| Line 29: | Line 29: | ||
விட்டல் ராவ் அவர்களின் குறிப்பிடத்தக்க படைப்பான 'நதிமூலம்' நாவல் 1981-ம் ஆண்டில் வெளிவந்தது. மாதவன் என்ற கன்னட மாத்வப் பிரிவு பிராமண குடும்பத்தின் மூன்று தலைமுறை வாழ்க்கையையும், சமூக மாற்றங்களினால் அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களையும் யதார்த்தமாக விவரிக்கிறது. | விட்டல் ராவ் அவர்களின் குறிப்பிடத்தக்க படைப்பான 'நதிமூலம்' நாவல் 1981-ம் ஆண்டில் வெளிவந்தது. மாதவன் என்ற கன்னட மாத்வப் பிரிவு பிராமண குடும்பத்தின் மூன்று தலைமுறை வாழ்க்கையையும், சமூக மாற்றங்களினால் அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களையும் யதார்த்தமாக விவரிக்கிறது. | ||
விட்டல்ராவின் தமக்கை சாந்தம்மாள் 25 ஆண்டுகளாக அந்தக் குப்பி வீரண்ணா நாடகக் கம்பெனி கம்பெனியில் நடித்து வந்தார். அவர் திரைப்படங்களிலும் நடித்துள்ளார. | விட்டல்ராவின் தமக்கை சாந்தம்மாள் 25 ஆண்டுகளாக அந்தக் குப்பி வீரண்ணா நாடகக் கம்பெனி கம்பெனியில் நடித்து வந்தார். அவர் திரைப்படங்களிலும் நடித்துள்ளார. தனது தமக்கையின் வாழ்க்கையைத் தழுவி அவரது நாடக அனுபவங்களை வைத்து 'வண்ண முகங்கள்' நாவலை எழுதினார்.[[File:கி. விட்டல் ராவ்.png|thumb|கி. விட்டல் ராவ்]] | ||
1993-ம் ஆண்டு வெளிவந்த 'காலவெளி' என்ற நாவல், ஒரு கலைப் பள்ளியில் சில மாணவர்கள் வாழ்வில் நிகழ்ந்த ஒரு பகுதியை அவர்களின் விருப்பங்கள், ஏமாற்றங்கள், ஒருவருக்கொருவரிடையில் இருந்த பொறாமை மற்றும் வாழ்க்கை சமரசங்கள் ஆகியவற்றைக் கொண்டிருந்தது. | 1993-ம் ஆண்டு வெளிவந்த 'காலவெளி' என்ற நாவல், ஒரு கலைப் பள்ளியில் சில மாணவர்கள் வாழ்வில் நிகழ்ந்த ஒரு பகுதியை அவர்களின் விருப்பங்கள், ஏமாற்றங்கள், ஒருவருக்கொருவரிடையில் இருந்த பொறாமை மற்றும் வாழ்க்கை சமரசங்கள் ஆகியவற்றைக் கொண்டிருந்தது. | ||
| Line 47: | Line 47: | ||
==ஏற்புகள்== | ==ஏற்புகள்== | ||
சேலத்தில் விட்டல்ராவ் படைப்புகள் பற்றி சிற்றில் குழுமம் , பாலம் புக்ஸ் , சொற்சுனை அமைப்பு ஆகியவை இணைந்து நடத்திய ஒருநாள் கருத்தரங்கு நவம்பர் 21, | சேலத்தில் விட்டல்ராவ் படைப்புகள் பற்றி சிற்றில் குழுமம் , பாலம் புக்ஸ் , சொற்சுனை அமைப்பு ஆகியவை இணைந்து நடத்திய ஒருநாள் கருத்தரங்கு நவம்பர் 21, 2021-ல் நடைபெற்றது. | ||
== விருதுகள் == | == விருதுகள் == | ||
*Kusumanjali Sahitya Samman - 2012 for ' வாழ்வின் சில உன்னதங்கள்' | *Kusumanjali Sahitya Samman - 2012 for ' வாழ்வின் சில உன்னதங்கள்' | ||
Revision as of 03:43, 15 September 2026
- ராவ் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: ராவ் (பெயர் பட்டியல்)



கி. விட்டல் ராவ் (மே 12, 1942) எழுத்தாளர், ஓவியர் , புகைப்படக் கலைஞர், கலைவிமர்சகர். உலக சினிமா முதல் நுண்கலைகள் வரையிலான தலைப்புகளில் கட்டுரைகள் எழுதினார். நாவலாசிரியர், கலைவிமர்சகர், தொல்கலை ஆய்வாளர் என்னும் நிலைகளில் பங்களிப்பாற்றினார்.

பிறப்பு, கல்வி
விட்டல் ராவ் தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் மாநகராட்சியில் மே 12, 1942-ல் பிறந்தார். கிருஷ்ண ராவ் - சரஸ்வதி இணையருக்கு பிறந்த எட்டு குழந்தைகளில் விட்டால் ராவ் ஆறாவது குழந்தை. இக்குடும்பத்தின் தாய்மொழி கன்னடம்.
தனிவாழ்க்கை
1960-ம் ஆண்டு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கதிர்வீச்சு உதவியாளராகப் பணியில் சேர்ந்தார். 1963 வரை அப்பணியில் இருந்தார்.
விட்டல் ராவ் 1963-ம் ஆண்டு சென்னை தொலைபேசி அலுவலகத்தில் பணியில் சேர்ந்து மே 2002-ல் பணியிலிருந்து ஓய்வு பெற்றார். பணி ஓய்வுக்குப்பின் தற்போது பெங்களூரில் வசிக்கிறார்.
விட்டல்ராவ் கமலாவை 1973-ல் மணம் புரிந்துகொண்டார். ஒரே மகள் ஹரிணி.
கலைவாழ்க்கை
விட்டல் ராவ் சென்னையில் வாழ்ந்த மலையாளச் சிந்தனையாளர் எம்.கோவிந்தன் உதவியால் கே.சி.எஸ். பணிக்கர் நடத்திவந்த 'ஸ்கூல் ஆஃப் ஆர்ட்ஸ்' (சென்னை)யில் மாலைநேர வகுப்புகளில் சேர்ந்து இரண்டு ஆண்டுகள் ஓவியப்பயிற்சி பெற்றார். நண்பர்களுடன் இணைந்து மெட்ராஸ் ஆர்ட் கிளப் என்னும் அமைப்பை ஓவியத்துக்காக நடத்தினார். மாக்ஸ் முல்லர் பவன், ப்ரிட்டிஷ் கவுன்சில், ஹைதராபாத் ஆர்ட்ஸொசைட்டி, மைசூர் தஸரா மையங்களில் நடைபெற்ற ஓவியக் கண்காட்சிகளில் இவரது படைப்புகள் இடம் பெற்றுள்ளன.
இலக்கிய வாழ்க்கை
தொடக்கம்
விட்டல் ராவ் எழுதிய முதல் சிறுகதை 'வாழ்க்கைக்கு ஓர் அர்த்தம்' 1967-ல் ஆனந்த விகடனில் வெளியாகியது. பிரபல இதழ்களிலும் இலக்கிய சிற்றிதழ்களிலும் சிறுகதைகள் எழுதினார்
நாவல்கள்
விட்டல் ராவின் முதல் நாவல் 'இன்னொரு தாஜ்மகால்' தினமணி கதிரில் தொடராக வெளிவந்து பின்னர் 1974-ல் புத்தகமாக வெளிவந்தது.
1976-ம் ஆண்டில் வெளிவந்த "போக்கிடம்" நாவல் இலக்கியச் சிந்தனை விருது பெற்றது.
விட்டல் ராவ் அவர்களின் குறிப்பிடத்தக்க படைப்பான 'நதிமூலம்' நாவல் 1981-ம் ஆண்டில் வெளிவந்தது. மாதவன் என்ற கன்னட மாத்வப் பிரிவு பிராமண குடும்பத்தின் மூன்று தலைமுறை வாழ்க்கையையும், சமூக மாற்றங்களினால் அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களையும் யதார்த்தமாக விவரிக்கிறது.
விட்டல்ராவின் தமக்கை சாந்தம்மாள் 25 ஆண்டுகளாக அந்தக் குப்பி வீரண்ணா நாடகக் கம்பெனி கம்பெனியில் நடித்து வந்தார். அவர் திரைப்படங்களிலும் நடித்துள்ளார. தனது தமக்கையின் வாழ்க்கையைத் தழுவி அவரது நாடக அனுபவங்களை வைத்து 'வண்ண முகங்கள்' நாவலை எழுதினார்.

1993-ம் ஆண்டு வெளிவந்த 'காலவெளி' என்ற நாவல், ஒரு கலைப் பள்ளியில் சில மாணவர்கள் வாழ்வில் நிகழ்ந்த ஒரு பகுதியை அவர்களின் விருப்பங்கள், ஏமாற்றங்கள், ஒருவருக்கொருவரிடையில் இருந்த பொறாமை மற்றும் வாழ்க்கை சமரசங்கள் ஆகியவற்றைக் கொண்டிருந்தது.
BSNL ஊழியரான விட்டல் ராவ் அவரது தொழிற்சங்க அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதிய 'காம்ரேடுகள்' நாவல் 1996-ல் வெளிவந்தது. அரசு நிறுவனங்களில் தொழிற்சங்கத்தின் செயற்பாடுகள் குறித்தும் தொழிற்சங்கங்களுக்கும் அதன் உறுப்பினர்களுக்குமான உறவு குறித்தும் கேள்விகளை எழுப்புவது காம்ரேடுகள் நாவல்.
அடையாளம் இல்லாமல் தவிக்கும் ஆங்கிலோ இந்தியர்களைப் பற்றி விட்டல் ராவ் 2018-ல் எழுதியிருக்கும் 'நிலநடுக் கோடு' நாவல் குறிப்பிடத்தக்க ஆவணப்புனைவாகும். ஐம்பதுகளுக்குப் பிறகுள்ள இருபத்தைந்து ஆண்டு கால சென்னையின் வரலாற்றை நாவல் பேசுகிறது. 1639-ல் உருவாக்கப்பட்ட சென்னை நகரின் ஒரு குறிப்பிட்ட கால வளர்ச்சியை இந்நாவல் விவரிக்கிறது. சென்னையில் இருந்த திரையரங்குகளின் அமைப்பு, உணவகங்கள் பற்றி விட்டல் ராவ் எழுதியிருக்கிறார்.
சிறுகதைகள்
விட்டல் ராவ் எழுதிய 140 சிறுகதைகள் அடங்கிய 5 சிறுகதைத் தொகுதிகள் வெளியிடப்பட்டுள்ளன.
கட்டுரைகள்
ஐம்பதுகளில் சேலம் நகரத்தில் தன் இளமையை கழித்த விட்டல்ராவ் தம் வாழ்வனுபவப்பதிவுகளை எழுதியுள்ள கட்டுரைகள் 'ஓர் அன்னாடுகாச்சியின் சேலம்' என்ற தொகுப்பாக 2021-ல் வெளிவந்துள்ளன. சினிமா விமர்சனம், கலைவிமர்சனம் என வெவ்வேறு பேசுபொருட்களுடன் விட்டல்ராவின் 7 கட்டுரைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன.
ஆய்வுகள்
விட்டல்ராவ் ஓவியக்கல்லூரியில் பயின்றவர். ஓவியம் மற்றும் புகைப்படக்கலையும் கற்றவர். தமிழகத்து கோட்டைகள் பற்றி ஆய்வுசெய்து தமிழகத்துக் கோட்டைகள் என்னும் நூலை வெளியிட்டிருக்கிறார். கன்னட சினிமா குறித்தும் ஆய்வுசெய்து நூல்களை எழுதியுள்ளார்.
ஏற்புகள்
சேலத்தில் விட்டல்ராவ் படைப்புகள் பற்றி சிற்றில் குழுமம் , பாலம் புக்ஸ் , சொற்சுனை அமைப்பு ஆகியவை இணைந்து நடத்திய ஒருநாள் கருத்தரங்கு நவம்பர் 21, 2021-ல் நடைபெற்றது.
விருதுகள்
- Kusumanjali Sahitya Samman - 2012 for ' வாழ்வின் சில உன்னதங்கள்'
- இலக்கியச் சிந்தனை விருது - வண்ணமுகங்கள், போக்கிடம்
- விஷ்ணுபுரம் இலக்கிய விருது (2026)
இலக்கிய இடம்
விட்டல்ராவ் இலக்கியவாதி, கலைவிமர்சகர், தொல்கலை ஆய்வாளர் என்னும் மூன்று தளங்களில் முக்கியமான பங்களிப்புகளை ஆற்றியுள்ளார். மாறுபட்ட கதைக்களங்களை சித்தரிக்கும் நாவல்களை எழுதினார். போக்கிடம், நதிமூலம் மற்றும் வண்ணமுகங்கள் ஆகியவை குறிப்பிடத்தக்க படைப்புகள். கலைவிமர்சகராக நவீன ஓவியக்கலை பற்றியும் இசை பற்றியும் திரைப்படங்கள் பற்றியும் தொடர்ச்சியாக கட்டுரைகளை எழுதினார். தொல்கலை ஆய்வாளராக தமிழகத்தின் கோட்டைகள் பற்றிய விட்டல்ராவின் ஆய்வுகள் முக்கியமானவை.
படைப்புகள்
நாவல்கள்
- இன்னொரு தாஜ்மகால் - 1974
- போக்கிடம் - 1976
- தூறல் - 1976
- நதிமூலம் - 1981
- மற்றவர்கள் - 1992
- மீண்டும் அவளுக்காக - 1993
- காலவெளி - 1993
- வண்ண முகங்கள் - 1994
- காம்ரேடுகள் - 1996
- நிலநடுக்கோடு - 2018
சிறுகதை தொகுதிகள்
- முத்துக்கள் பத்து - 2010
- மரம் வைத்தவன் - 2018
- வெளி மனிதன் - 2018
- விட்டல் ராவ் கதைகள் - 2019
- நெருக்கமான இடைவெளி
கட்டுரைத் தொகுதிகள்
- தமிழ் சினிமாவின் பரிமாணங்கள் - 2013
- தமிழகக் கோட்டைகள் - 2010
- வாழ்வின் சில உன்னதங்கள் - 2011
- நவீன கன்னட சினிமா - 2011
- தி.ஜ.ர.வின் எழுத்தும் தேசிய உணர்வும்
- ஓர் அன்னாடுகாச்சியின் சேலம் - 2021
- பயாஸ்கோப்காரன் - சினிமா தொடர் (பிப்ரவரி 2021 முதல்)
- சில உலகத் திரைப்படங்களும் கலைஞர்களும்
- நவீன கன்னட சினிமா
- ஓவியக் கலை உலகில்
- கலை இலக்கியச் சங்கதிகள்
- கூடார நாட்கள் - 2012
உசாத்துணை
- விட்டல் ராவ் - ஓர் ஆளுமை மற்றும் இரு நூல்கள்
- விட்டல்ராவ் ஒரு கலைச்சுரங்கம் சொல்வனம்
- விட்டல் ராவின் கூடார நாட்கள் வெங்கட் சாமிநாதன்
- விட்டல்ராவ் பேட்டி அந்திமழை
- விட்டல்ராவ் படைப்புகள் கருத்தரங்கம்
- விட்டல்ராவ் என்னும் கலைச்சுரங்கம் தினமணி
- விட்டல்ராவின் தமிழகக் கோட்டைகள் சிலிகான் ஷெல்ப்
- வரலாற்றின் இடைவெளிகளை நிரப்பும் எழுத்து - விட்டல் ராவ் நாவல்கள்
- விட்டல்ராவ் தென்றல் கட்டுரை
- கோட்டைகளை ஆய்ந்த விட்டல் ராவ் எஸ்ஸார்ஸி
- கலையும் காலமும் வழங்கிய விட்டல்ரான் எஸ்ஸார்ஸி
- போனதும் நின்றதும் எஸ்ஸார்ஸி
அடிக்குறிப்புகள்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
28-Dec-2022, 19:31:43 IST